
இந்தியா, ஒரு சிற்றரசுகளின் கூட்டமைப்பு என்பதை உணராத யாராலும் கஷ்மீர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியாது. கஷ்மீர் என்றால் தீவிரவாதம், தீவிரவாதிகள், வன்முறை, குண்டு வெடிப்பு, பாகிஸ்தான்,சீனா எல்லை பிரச்சனைகள் என்பதையே நம் தலையில் கட்டுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி இருக்கும் நிஜமான கஷ்மீரின் முகம் நம் கண்களுக்கு தெரிவதேயில்லை. நாம் தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை.
கஷ்மீர் பெற்றிருக்கும் சிறப்பு அந்தஸ்தால் அந்த மாநிலத்திற்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அந்த சிறப்பு அந்தஸ்தை காரணம் காட்டி கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க மட்டுமே அந்த சிறப்பு அந்தஸ்து பயன்பட்டிருக்கிறது. உண்மையிலேயே அது சிறப்பு அந்தஸ்தாக இருந்திருக்குமானால் இந்திய அளவில் முதன்மையான மாநிலமாக கஷ்மீர் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கஷ்மீர் மற்ற இந்திய மாநிலங்களை...