1956 ஆம் ஆண்டு வெளிவந்த " பாசவலை " எனும் திரைப்படம் அதன் பாடல்களுக்காகவே அதிக நாள் ஓடியது .பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்படத்தில் 5 பாடல்கள் எழுதியிருந்தார் .அதில் ஒன்று தான் இந்தப்பாடல் . சி .எஸ் .ஜெயராமன் அவர்களால் பாடப்பட்டது .படத்திற்கு இசை , விஸ்வநாதன் ராமமூர்த்தி .இந்தப் பாடலில் ஆட்டைக் குறிப்பிடுவது போல நாட்டைக் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை .
பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில் கிருபாகரன் அவர்கள் ,காணொளியில் காட்சிகளை இணைத்துள்ளார் .
அந்தப் பாடல் இதோ :
பாடல் வரிகள் :
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் _ பெருங்
கூட்டிருக்குது கோனாரே! _ இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒருமுடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது (இநத…)
கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுது _ அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது _ இந்தப்
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இநத…)
ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேரம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு _ இதைப்
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது
நடக்கும்பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப்பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஓடைக்குது! (இநத…)
நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும் கிருபாகரன் .
மேலும் படிக்க :
கையில வாங்கினேன் பையில போடல ...!
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
..................................................................................................
பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில் கிருபாகரன் அவர்கள் ,காணொளியில் காட்சிகளை இணைத்துள்ளார் .
அந்தப் பாடல் இதோ :
பாடல் வரிகள் :
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் _ பெருங்
கூட்டிருக்குது கோனாரே! _ இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒருமுடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது (இநத…)
கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுது _ அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது _ இந்தப்
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இநத…)
ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேரம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு _ இதைப்
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது
நடக்கும்பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப்பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஓடைக்குது! (இநத…)
நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும் கிருபாகரன் .
மேலும் படிக்க :
கையில வாங்கினேன் பையில போடல ...!
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
..................................................................................................
2 comments:
"நெஞ்சத்தில் இருந்த நாட்கள்
நித்தமும்கலந்து பேசி:
கொஞ்சித் தன் காதல் முற்றும்,
குவிந்திட்ட நாட்கள் எல்லாம்;
பஞ்சத்தில்ஏழை பார்க்கும்..
பழங்கணக்கு ஆனதின்று! "- என்பது கண்ணதாசனின் கவிதை வரிகள்! அதுபோல எல்ல இனிமையும்,தொலைத்து விட்டதாக தோன்றுகிறது,உங்களது பதிவுகளைப் பார்க்கும்போது! வாழ்த்துக்கள்.
நானும் பட்டுக்கோட்டையின் ரசிகன். அவருடைய நிறைய பாடல்கள் மனப்பாடம் எனக்கு. அவருடைய தேசிங்கு ராஜா தனிப்பாடலுக்கு பள்ளிநாட்களில் ஆடியது ஞாபகம் வந்தது. மேலும், பட்டுக்கோட்டையாரின் தளம் குறித்த அறிமுகமும் கிடைத்தது. நன்றி.
Post a Comment