'புதிய பூமி' திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் உங்கள் வீட்டு பிள்ளை..." என்ற பாடல் வாலி அல்லது கண்ணதாசன் எழுதியிருப்பார் என்று நினைத்தால் இப்பாடலை எழுதியிருப்பவர், பூவை செங்குட்டுவன் ❤️. அதிகளவில் பக்திப்பாடல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை பெருவெற்றி பெற்ற பாடல்களாக இருக்கின்றன. இப்பாடலும் பக்தி பாடல்தான், நாயக பக்திப்பாடல் .
" நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை
இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை
உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி "
பூவை செங்குட்டுவன் இயற்றிய மற்ற பாடல்கள்...
தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)
ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)
இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா )
ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா)
காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)
காலம் எனக்கொரு (பௌர்ணமி),
வானம் நமது தந்தை (தாகம்)
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)
ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)
திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)
வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)
வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)
திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)
//உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி// ❤️
மேலும் படிக்க :