அ .தி.மு.க. அதிகம் வென்றதற்கு விஜயகாந்தும் , விஜயகாந்த் அதிகம் வென்றதற்கு அ .தி.மு.க. வும் காரணம் . இனி அ .தி.மு.க. செய்யவேண்டியது . இனி எந்த தேர்தலிலும் எந்தக்காரணம் கொண்டும் பா.ம.க. வையும் ,வி .சி .யையும், காங்கிரசையும் கூட்டணியில் சேர்க்கக் கூடாது . சட்டம் ஒழுங்கை சீர் செய்து , மின்சார தட்டுப்பாடை கட்டுப்படுத்தி , மழைநீரைச் சேமித்து , மரங்களை வளர்த்து , விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து , கட்சிக்காரர்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி , சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களின் வாழ்வை வளப்படுத்தும் நல்ல ஆட்சியைத் தர வேண்டும் ; இல்லையேல் 2011 பாடம் தான் உங்களுக்கும் .
இந்த முடிவின் மூலம் மக்கள் சொல்வது என்ன?
தமிழக மக்கள் பணம் கொடுத்தால் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற மோசமான முத்திரை நம் மீது விழுந்து இருந்தது . அதை இந்த தேர்தல் முடிவு மாற்றி விட்டது . நாங்கள் பணத்துக்காக ஓட்டுப்போட மாட்டோம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர் .
குடும்ப அரசியலுக்கும் , குடும்ப சர்வாதிகாரத்திற்க்கும் , குடும்ப அதிகார துஷ்பிரயோகத்திற்க்கும் மக்கள் சரியான பாடம் கற்ப்பித்துள்ளனர் . அடுத்து பதவிக்கு வருபவர்களும் இது போல் நடந்து கொண்டால் அவர்களுக்கும் இதே கதி தான் .
மக்கள்பணி ஆற்றாமல் அதிகமாக ஆட்டம் போட்டு பொதுமக்களுக்கு அதிக இன்னல்கள் விளைவித்தவர்களுக்கும் , ஆட்டமும் போடாமல் , மக்கள்பணியும் செய்யாமல் படுத்து தூங்கியவர்களுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது . மக்கள்பணி செய்யாமல் இனி யாரும் ஆட்சிக்கு வர முடியாது .
இலங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்து , போராட்டத்தை திசை திருப்பியவர்களுக்கு மக்கள் வேட்டு வைத்துள்ளனர் . அடுத்து வருபவர் இலங்கைத் தமிழர் நலனுக்காக பாடுபட வேண்டும் . கட்சத்தீவை மீட்க வேண்டும் .
ஊழல்வாதிகளை ஓட ஓட விரட்டி உள்ளனர் . இன்னும் எவ்வளவு ஊழல்கள் வெளிவரப்போகிறதோ தெரியவில்லை . இனி ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது .
அதிகமான மக்கள் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான நடவடிக்கைகளே காரணம் . மக்களின் ஓட்டுப் போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது .
மக்களின் சிந்திக்கும் ஆற்றலை என்னவென்று சொல்வது. சீரிய முறையில் சிந்தித்து மிகக்கவனமாக ஓட்டுப் போட்டுள்ளனர் . மக்களின் மனநிலையை யாராலும் ஊகிக்க முடியவில்லை . கருத்துக்கணிப்புகளில் கட்டுப்படவில்லை . இந்தியா டுடே கருத்துக்கணிப்பு மட்டுமே ஓரளவு பொருந்தியுள்ளது .
இணையப்பதிவர்கள் அனைவரும் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளனர் . கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை அக்குவேர், ஆணிவேராக அலசி தங்கள் கருத்துகளை முன்வைத்தனர் . இந்த பதிவுகளைப் படித்து பத்துபேர் மாறினால் கூட அது நமக்கு வெற்றி தான் . இனி தான் நமக்கு மிகப்பெரும் பணி உள்ளது . இப்போது அமையப்போகும் ஆட்சியை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் . சின்ன தப்புகளுக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் . சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் . விவசாயமும் ,சுற்றுச்சூழலும் முக்கியத்துவம் பெற வேண்டும் .
இது ஜனநாயகத்தின் வெற்றி . தப்புச் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .
மாற்றம் ஒன்றே மாறாதது !
மேலும் படிக்க :
......................................................
2 comments:
நல்ல பதிவு... இனியாவது மக்களுக்காக அரசியல் வாதிகள் உழைக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்
உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...
அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி
Post a Comment