1 . துறை சார்ந்த அனுபவமும் , தகுதியும் உடையவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். அரசியல் அனுபவதிற்காகவோ , குறிப்பிட்ட பகுதியின் பெரும்புள்ளி என்பதற்காகவோ பதவி கொடுக்க கூடாது .
2 . விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் .
3 . அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் , முக்கியமாக கிராமம் முதல் நகரங்கள் வரை கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும் .
4 . எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் . தமிழ் ,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும பள்ளிப்படிப்பு வரை கட்டாயமாக்கப்பட வேண்டும் . கல்விக் கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் . பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக கொடுக்க வேண்டும் .
5 . மருத்துவ காப்பீடு திட்டம் மாற்றப்பட்டு அனைவருக்கும் அறுவைசிகிச்சை வரை இலவச மருத்துவ வசதி செய்து தர வேண்டும் . கல்வி மற்றும் மருத்துவம் மட்டுமே இலவசமாக இருக்க வேண்டும் . மற்ற இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும் . இந்த இரண்டு இலவசங்கள் மட்டும் முறையாக கிடைத்து விட்டால் எல்லா குடும்பங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் .
6 . நகரங்களில் பாலங்கள் கட்டுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான் கொடுக்க வேண்டும் . ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டு பைக் மற்றும் கார்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் . தகுந்த காரணம் இல்லாமல் புதிய வாகனங்களுக்கு உரிமம் கொடுக்கக் கூடாது . இதைத் தவிர்த்து எத்தனை பாலங்கள் கட்டினாலும் நெரிசலைக் குறைக்க முடியாது .
7 . ஆதரவற்றோர் , கைவிடப்பட்டோர் , உண்மையான பிச்சைக்காரர்கள் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் . நகரங்களில் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களுக்கு முறையான இருப்பிட வசதி செய்து தர வேண்டும் .
8 . கிராமப்புற முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயர்வது தடுக்கப்பட வேண்டும் .
9 . விவசாயத்திற்கு இரண்டு மணி நேரம் மட்டும் இலவச மின்சாரம் வழங்குவதைவிட 24 மணி நேரம் கட்டண மின்சாரம் வழங்கலாம் . சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது ஊக்குவிக்கப்பட வேண்டும் . மழைநீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் . வெற்று நிலங்களில் மரம் வளர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் .
10 . லஞ்சத்தைக் கொஞ்சமாவது குறைக்க அரசு அலுவலகங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் . பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்களில் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் .
இன்றைய சூழ்நிலையில் இவையெல்லாம் சாத்தியமா ? தெரியவில்லை . இதை எழுதுவதால் நமக்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான் .
...............................
2 comments:
விவசாயத்திற்கு இரண்டு மணி நேரம் மட்டும் இலவச மின்சாரம் வழங்குவதைவிட 24 மணி நேரம் கட்டண மின்சாரம் வழங்கலாம் . சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது ஊக்குவிக்கப்பட வேண்டும் . மழைநீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் . வெற்று நிலங்களில் மரம் வளர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் . super
மிகவும் சரியான தகவல் மிக மதிப்பு மிக்க தகவல். நானும் கூட இப்படி சிந்தனை பண்ணி என் நண்பர்களுடம் கலந்துரையாடுவேன்...ஆனால் நாம் உரையாட மட்டுமே முடியும் என்கிற நிலைமை, இப்படியான சிந்தனை இப்பொழுது உள்ள பெரிய அரசியல் கட்சிகளிடம் இருந்து அதை செயல்படுத்தினால் எவ்வளவு நன்றாய் இருக்கும், மக்கள் இன்றும் தங்களை தனியே நிறுத்தி பார்க்கும் மனநிலை மேலோங்கிவிட்டது, ஒரு சமூகமாஹவோ அல்லது நிறைய பேர் இணைந்த ஒரு குழுவாகவோ ஒற்றுமையாக தங்களை நிறுத்தி சிந்திக்க தெரியவில்லை, இதுதான் இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளுக்கு நல்ல வாய்பாக அமைத்து விட்டது.
Post a Comment