Monday, November 28, 2011

ஆய கலைகள் 64 !

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக  இணையத்தில் கிடைத்தது . அவை ,   1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்); 16. மறவனப்பு (இதிகாசம்); 17. வனப்பு; 18. அணிநூல் (அலங்காரம்); 19. மதுரமொழிவு...

Sunday, November 27, 2011

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !

சுய சிந்தனையே இல்லாமல் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவர்களுக்கும் , மூட நம்பிக்கைகளை நம்புபவர்களுக்கும், " ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதினார் . அந்தப் பாடல் :     பாடல் வரிகள் : ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும் ஐந்தறிவும் நிலைக்குமுன்னா அதுவுங்கூட டவுட்டு  (ஆறறி…) அடக்கமில்லாப் பெண்கள் சிலர் நடக்கும் எடக்கு நடையிலும் ஆதிகாலப் பண்பைக் காறறல பறக்க விடும் உடையிலும் (ஆறறி…) தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் காரரிடம் கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன் கண்டதுபோல் சொல்லுவதை நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…) ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும் எந்த...

Friday, November 25, 2011

நாமெல்லாம் குற்றவாளிகளே !

நாம் வாழும் இந்தப்  பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம் ( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து  உயிரினங்களையும்  பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில்  வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .  மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய...

Monday, November 21, 2011

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

திண்ணை ,இதை நாம்  மறந்து ரொம்ப நாளாகிவிட்டது .இந்தப்பாடல் திண்ணையைப் பற்றிச் சொல்லவில்லை . வெட்டிக்கதைகள் பேசி நம் நேரத்தை வீணடிக்கும் ,வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்களாக இருக்கும் வீணர்கள் பற்றி இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றது . திண்ணை ,இன்று இல்லை . ஆனால் , அதிக எண்ணிக்கையில் ,பல்வேறு விதமான இடங்களில் திண்ணைப் பேச்சு வீரர்கள் இன்றும் இருக்கிறார்கள் . இன்றைய சூழ்நிலையில்  தொ(ல்)லைக்காட்சியில் தான் திண்ணைப் பேச்சு வீரர்கள் அதிகம் தோன்றுகிறார்கள் . ராசிபலன் சொல்பவர்,அதிர்ஷ்டகல் விற்பவர், யந்திரம் விற்பவர் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்  பேசுபவர்கள் (சின்னத்திரை நடிகர்கள், நாடகத்தில் நடிகிறார்களோ இல்லையோ தவறாமல் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்...

Saturday, November 19, 2011

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

1956 ஆம் ஆண்டு வெளிவந்த " பாசவலை " எனும் திரைப்படம் அதன் பாடல்களுக்காகவே அதிக நாள் ஓடியது .பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்படத்தில் 5 பாடல்கள் எழுதியிருந்தார் .அதில் ஒன்று தான் இந்தப்பாடல் .  சி .எஸ் .ஜெயராமன் அவர்களால் பாடப்பட்டது .படத்திற்கு இசை , விஸ்வநாதன் ராமமூர்த்தி .இந்தப் பாடலில் ஆட்டைக் குறிப்பிடுவது போல நாட்டைக் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை . பாடல் வரிகளுக்கு  ஏற்ற வகையில் கிருபாகரன்  அவர்கள் ,காணொளியில் காட்சிகளை இணைத்துள்ளார் . அந்தப் பாடல் இதோ : பாடல் வரிகள் :  இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் _ பெருங் கூட்டிருக்குது கோனாரே! _ இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒருமுடிவுங் காணாரே! தில்லாலங்கிடி தில்லாலங்கிடி எல்லாம் இப்படிப் போகுது நல்லாருக்குள் பொல்லாரைப்போல் நரிகள் கூட்டம் வாழுது (இநத…) கணக்கு...

கையில வாங்கினேன் பையில போடல ...!

தான் வாழ்ந்த 29 ஆண்டுகளுக்குள் 17 தொழில்களில் ஈடுபட்டவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( http://www.pattukkottaiyar.com/site/?p=632) . அதனால் தான் எத்தனையோ கவிஞர்களுக்கு மத்தியில் ஒரே மக்கள் கவிஞராக திகழ்ந்தார் . திரையிசையில் பாட்டாளி மக்களின் குரலை ஒலிக்கச் செய்தார் . தனது பாடல் வரிகளையே சமூகத்தை விளாசும் சாட்டையாக பயன்படுத்தினார் .அவரது பாடலின்  வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் . ஈடு இணையில்லாத அந்த உன்னத கவிஞரைக் கொண்டாடுவோம் - (http://www.pattukkottaiyar.com/site/ ) . சமீபத்தில் youtube தளத்தில் தேடலில் இருந்தபோது கிருபாகரன் என்பவர் இணைத்துள்ள காணொளிகளைப் ( வீடியோக்களைப் ) பார்க்க நேர்ந்தது .  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு பொருத்தமான படங்களைத் தேர்வு செய்து பாடலுடன் இணைத்து ...

Tuesday, November 15, 2011

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !

நாடகக்கலையின் தொடர்ச்சி தான் சினிமா .எல்லாவிதமான  நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள் .சினிமாவிலும் அப்படியே .பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மைச் சிரிக்க வைப்பது கடினம் . நகைச்சுவை நடிகர்கள் இதைச் சாத்தியப்படுத்தினார்கள் .தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் . T.S.பாலையா ,M.R.ராதா ,N.S.கிருஷ்ணன் ,K.A.தங்கவேலு ,காளி .N.ரத்னம் ,சந்திரபாபு ,V.K.ராமசாமி , நடிகர் கருணாநிதி,நாகேஷ் ,சுருளிராஜன் ,சோ ,என்னத்த கண்ணையா , தேங்காய் சீனிவாசன் ,கவுண்டமணி ,செந்தில் ,கல்லாபெட்டி சிங்காரம் ,S .S.சந்திரன் ,ஜனகராஜ் ,உசிலைமணி ,ஓமக்குச்சி நரசிம்மன் ,லூசு மோகன் , வெண்ணிறாடை மூர்த்தி , குமரிமுத்து , குண்டு கல்யாணம் , மௌலி ,விசு  என்று பெரிய பட்டியல் உள்ளது . T.S.பாலையாவும்  , M.R.ராதாவும்  அசாத்தியமான நடிகர்கள்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms