இதில் சிறு வருத்தம் என்னவென்றால் கடந்த இரண்டு மாதங்களாக நான் விகடன் வாங்குவதில்லை .அதனால் எனது blog விகடனில் வந்தது 14-05-12 அன்று தான் தெரியும் .தற்போது " வட்டியும் முதலும் " பகுதி மட்டுமே பயனுள்ளதாக உள்ளது . எப்படியும் " வட்டியும் முதலும் " தனிப் புத்தகமாக வந்துவிடும் அப்போது படித்துக் கொள்ளலாம் என்று இப்போது விகடன் வாங்குவதில்லை . அட்டைப்படத்தில் சினிமா நடிகர் நடிகைளைப் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு கோபம் வருகிறது . சினிமா , அரசியல் தவிர்த்து வாழ்க்கையே இல்லையா . முன்பை விட இப்பொழுது அதிக சினிமா ,அரசியல் செய்திகளை விகடன் வெளியிடுகிறது . அரசியல் , சினிமா பற்றி எழுதுவதில் தவறில்லை . சினிமாக்காரர்கள் பற்றியும் , அரசியல்வாதிகள் பற்றியும் அதிக செய்திகள் வருவது தான் நெருடலாக உள்ளது . சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் பேட்டிகள் இடம் பெறாத வார இதழ்கள் இல்லவே இல்லை . இன்பாக்ஸ் , வலைபாயுதே என்று எங்கு பார்த்தாலும் அரசியல் ,சினிமா தலைகள் தான் தெரிகின்றன . தயவு செய்து சினிமா மற்றும் அரசியல் சார்ந்தவர்களை மட்டும் அட்டைப்படத்தில் போடாதீர்கள் . சமூகத்தில் வாழும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள் . அரசியல் அல்லது சினிமாவுக்கு வந்தால் மட்டுமே புகழ் பெறலாம் என்ற மாயத் தோற்றத்தை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்குகின்றன .
நன்றி - விகடன் .
மேலும் படிக்க :
ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !
..................................................................................................................................................................
11 comments:
அருமை நண்பா வாழ்த்துக்கள்
//
கடந்த 4 வருடங்களாக ஆனந்த விகடனை தொடர்ந்து படித்து வருகிறேன் . நிறைய விசயங்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்கிறது . விகடன் மூலம் நான் பெற்றவை அதிகம் . ஏன் ப்ளாக் (Blog ) எழுதுவது கூட விகடனிடம் இருந்து பெற்றது தான் . 2009 ஆண்டே blog எழுத தொடங்கி பிறகு நிறுத்திவிட்டேன் . மீண்டும் blog எழுத காரணம் விகடன்
//
இதல்லாம் படித்து வரும் பொது, எங்க "குட் பிளாக்" க்கு அடி போடுகிறீர்களோ என்று தான் நினைத்தேன், ஆனால் உண்மையை நச்சென்று சொல்லி இன்னும் உயர்ந்து விட்டீர்கள்
"அப்பாடா ! இன்னைக்கியாவது உங்கள் தளத்தில் கருத்து சொல்ல முடிந்ததே !"
"பல தடவை உங்கள் தளத்தில் கருத்துரை இட முடியவில்லை ! என்ன காரணம் ?"
"ஒரு வேலை விகடன் வரவேற்பறையில் வந்தது தான் காரணமா ?"
"சார் ! கருத்துரைகளை ஏற்றுக் கொள்ள தைரியம் வேண்டும் !"
"பார்க்கலாம்.......... உங்கள் அடுத்த பதிவில் !"
விகடன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த கால மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றி தன் வாசகர்களையும் கௌரவித்தது. ஆனால் நீங்கள் கூறியது போல இப்பொழுது விகடன் ஒரு வட்டத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது என்பது உன்மை. மேலும் சினிமா மற்றும் அரசியல் செய்திகள் 75 சதிவிகிதம் இடம்பெறுகிறது என்பது மறுப்பதிற்கில்லை. ஆனாலும் விகடனைத்தவிர ஒரு சில செய்திகள் எவராலும் எக்காலத்திலும் வெளியிட தயங்கும் செய்திகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் வெளியிடுவது பாராட்டுதலுக்குறியது. உங்கள் வலைப்பூ விகடன் மூலம் தான் எனக்கு தெரியவந்தது.
எனக்கும் விகடன் மூலம் தான் உங்கள் வலைப்பூ தெரியவந்தது.முழுமையாக உங்கள் கருத்தை நான் ஆதரிக்கவில்லை.மூன்றாம் உலகப்போர் போன்ற அற்புதமான சுற்றுச்சுழல் சார்ந்த பதிவுகளும் வந்தவண்ண்ம் தான் உள்ளது.அதைப்பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
hey....weldone...after reading in vikadan only,i have started following ur blog.keep it up.....
விகடன் வலையோசையில் உங்கள் தளம் குறித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. மண்ணோடு விளையாடு என்ற பதிவும், மாத்திரையே சாப்பாடும் மனசைத் தொட்டன. மேலும், கொஞ்ச நாட்களாக நீங்கள் விகடன் வாசிப்பதில்லை என்ற வரிகள் வருத்தம் தந்தன. முத்திரைக்கதைகள், நானும் விகடனும், நானே கேள்வி நானே பதில், லூசுப்பையனின் ரவுசுப்பக்கங்கள், தலையங்கம், சொல்வனம், பொக்கிஷம் மற்றும் விகடன் வரவேற்பறையே அருமையான பக்கங்கள்தானே.
Post a Comment