
வளமையான தமிழ் மொழியில் கவிதை இலக்கியம் சங்க காலத்திலிருந்தே செழித்து வளர்ந்து வருகிறது. சங்க கவிதைகளில் மொழியின் அடர்த்தி சற்று அதிகமாகவே இருக்கும். மொழியின் அடர்த்தி தான் கவிதையை எப்போதும் முழுமைப்படுத்துகிறது. புதுக்கவிதையின் வரவிற்கு பிறகு கவிதைகளில் மொழியின் அடர்த்தி தேய்ந்து கொண்டே போகிறது.தற்போது வழக்கத்தில் சாதாரணமாக பேசுகிற எழுதுகிற வார்த்தைகளை அழகாக அடுக்கி அதைக் கவிதை என்று சொல்கிறோம்.
கவிதையின் கருப்பொருளாக அதிகம் இடம்பிடிப்பது காதலும் இயற்கையும் தான்.அதிலும் வானத்தில் நிலாவைப் பார்த்தவுடன் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் கவிஞன் வெளியே வந்து விடுவான் போல. ஒரு சில கவிஞர்கள் நிலவை ஆணாகவும் மற்றும் சிலர் பெண்ணாகவும் உருவகப்படுத்துகின்றனர். அதனால் ,நிலவை மாற்றுப்பாலினத்தவர் என அறிவித்துவிடலாம். மக்கள் கவிஞராகவும் பொதுவுடமை...