வளமையான தமிழ் மொழியில் கவிதை இலக்கியம் சங்க காலத்திலிருந்தே செழித்து வளர்ந்து வருகிறது. சங்க கவிதைகளில் மொழியின் அடர்த்தி சற்று அதிகமாகவே இருக்கும். மொழியின் அடர்த்தி தான் கவிதையை எப்போதும் முழுமைப்படுத்துகிறது. புதுக்கவிதையின் வரவிற்கு பிறகு கவிதைகளில் மொழியின் அடர்த்தி தேய்ந்து கொண்டே போகிறது.தற்போது வழக்கத்தில் சாதாரணமாக பேசுகிற எழுதுகிற வார்த்தைகளை அழகாக அடுக்கி அதைக் கவிதை என்று சொல்கிறோம்.
கவிதையின் கருப்பொருளாக அதிகம் இடம்பிடிப்பது காதலும் இயற்கையும் தான்.அதிலும் வானத்தில் நிலாவைப் பார்த்தவுடன் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் கவிஞன் வெளியே வந்து விடுவான் போல. ஒரு சில கவிஞர்கள் நிலவை ஆணாகவும் மற்றும் சிலர் பெண்ணாகவும் உருவகப்படுத்துகின்றனர். அதனால் ,நிலவை மாற்றுப்பாலினத்தவர் என அறிவித்துவிடலாம். மக்கள் கவிஞராகவும் பொதுவுடமை கருத்துகளை தனது திரைப்பாடல்களில் அதிகம் வெளிப்படுத்தியவராகவும் அறியப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கூட ஒரு பாடலில் நிலவைப் பார்த்து " என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா " என்று கேட்கிறார். அற்புதமான கற்பனையுணர்வு. சங்கப்பாடலில் ஒரு கவிதையில் பெளர்ணமி நாளில் மாடத்தில் நிற்கும் தலைவி சந்திர ஒளியையே ஆடையாக அணிந்திருப்பது போல தோன்றுகிறதாம்.இன்னொரு கவிதையில் போர்க்களத்தில் இருக்கும் யானை முழு நிலவைப் பார்த்து எதிரி நாட்டு மன்னனின் வெண்கொற்ற குடையென நினைத்து காலை தூக்குகிறதாம். இப்படி இயற்கையின் கூறான நிலவை கருப்பொருளாக வைத்து இதுவரை எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம்.இனிமேலும் எழுதுவார்கள். சந்திரனிடம் இன்னமும் அவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது. இயற்கையின் வேறு கூறுகளான மரம், செடி, கொடி, பறவைகள் , விலங்குகள், பூச்சிகள்,மழை, நதி, கடல் எனப் பலவும் கவிதையின் கருப்பொருளாக அமைகின்றன. இது போலவே காதல் மீதும் ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது .இயற்கையையும் காதலையும் தவிர்த்து உயிருள்ளவை, உயிரற்றவை, கண்ணால் பார்க்க முடிபவை, பார்க்க முடியாதவை ஆகியவும் கருப்பொருளாக அமைகின்றன.
படைப்பின் மூலமே படைப்பாளி அறியப்பட வேண்டும் ." படைப்பு வெளிப்படுவதற்கு படைப்பாளி ஒரு கருவி தான்" என்று சுஜாதா கூறியுள்ளார். இதன்படி எந்தப்படைப்பிற்கும் படைப்பாளி உரிமை கொண்டாட முடியது. ஆனால் அந்தப் படைப்பை வெளிப்படுத்திய விதத்தால் அந்தப் படைப்புடன் சேர்த்து படைப்பாளியும் கொண்டாடப்படுவார். இந்தப்படைப்பு என்னுடையது இதை நானில்லாமல் வேறு யாராலும் படைக்கமுடியாது என்று நினைப்பது முட்டாள்தனம். இதை நிறைய படைப்பாளிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். முன்பு எழுதியதை அந்த எழுத்தாளர் மீண்டும் படிக்கும்போது அந்தப் படைப்பு தன்னுடையது அல்ல என்பதை உணர முடியும். அதே போல எழுதவேண்டும் என நினைத்து எழுதாமல் விட்ட ஒரு விசயத்தை இன்னொருவர் எழுதி வெளிவரும் போதும் இதை உணர முடியும்.படைப்பு வெளிப்படுவதற்கு உழைப்பு தேவை. வெறும் சிந்தித்தலுடன் முடிந்து போகும் எதுவும் படைப்பாக முடியாது.இன்று கலைஞர்களாக உலகெங்கும் கொண்டாடப்படுபவர்களின் பின்னே பெரும் உழைப்பு இருக்கிறது.
" 'கலை கலைக்காகவே 'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க .அதை நீங்க நம்பாதீங்க .அப்படியிருந்தா அது எப்போவோ செத்துப் போயிருக்கும் . கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது ..." என்று எம்.ஆர்.ராதா ஒரு முறை சொல்லியிருக்கிறார். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே மனித வாழ்க்கை கலையின் (குகை ஓவியங்கள் முதல் இன்று வரை ) மூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. வாழ்க்கையை பதிவு செய்யாத எந்தப்படைப்பும் கொஞ்ச காலத்திற்கு கூட பூமியில் நிலைபெறுவதில்லை.பழங்கால ஓவியங்கள், சிற்பங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள் , பயன்படுத்திய பொருட்கள் , புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் பண்டைய மக்களின் வாழ்க்கை முறையையே அறிய விளைகிறோம். எம்.ஆர்.ராதா. போகிற போக்கில் சொன்னாலும் அப்பட்டமான உண்மை ( வாழ்க்கையும் கலையும் சேரும் போது தான் அதுக்கு உயிரே வருது ) இது.எந்த வடிவத்தில் இருந்தாலும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வது தான் உண்மையான கலைப்படைப்பாக இருக்க முடியும்.கலை வெளிப்படுத்தப்படும் வடிவம், உயிரினங்களின் பரிணாம வளரச்சியைப்போலவே அன்றிலிருந்து இன்று வரை மாறுதல்களைச் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறது .'வலுத்தது நிலைக்கும் ' என்பது கலை வடிவத்திற்கும் பொருந்தும்.கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று இருக்கும் இன்றைய இலக்கிய வடிவங்கள்
நாளை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்,அழிந்தும் போகலாம், புது வடிவங்களும் தோன்றலாம். மொழிக்கும் இது பொருந்தும்.
தமிழ் மொழி குறித்த மிகைப்படுத்தப்பட்ட கற்பனை மயக்கத்திலேயே உழல்கிறோம். இந்த மயக்கத்தால் பழந்தமிழ் இலக்கியங்களையும் ஆழ்ந்து படிக்காமல், உலகின் வேறு பகுதிகளில் படைத்த, படைக்கப்படும் இலக்கியங்களையும் போதிய அளவு கவனிக்காமல் மிதப்பாகவே இருக்கிறோம்."இலக்கியத்துறையிலும் மற்ற சில வகைகளிலும் தமிழனின் சாதனை சிறப்பானதே.ஆனால் ஒரே போடாகத் தமிழைப் போன்றதொரு சிறந்த மொழி வேறில்லை என்பதும், தமிழனைப் போன்ற திறனாளி வேறு எங்கணுமே இல்லை என்பதும் பிழை.ஒவ்வொருவனும் அவனது இனத்தின் தொன்மையையும் சாதனைகளையும் எண்ணிப் பெருமை பாராட்டுவது குற்றமல்ல. ஆனால் அது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும் ", ' புயலிலே ஒரு தோணி' நாவலில் பா.சிங்காரம் இவ்வாறு கூறுகிறார்.தமிழ் மொழி குறித்த மயக்கத்திலிருந்து வெளிவந்து , நமது பழங்கால மற்றும் தற்கால இலக்கியங்களை உலகெங்கிலும் கொண்டு செல்லவும் , உலகெங்கிலும் இருந்து இலக்கியங்களை இங்கே கொண்டு வரவும் நல்ல பாதை அமைக்க வேண்டும்.சமீப காலங்களில் செய்யப்படும் அதிகமான மொழிபெயர்ப்புகள் மகிழ்ச்சியைத் தருகின்றன.
இயல், இசை, நாடகம் என்று தமிழ் மொழியை மூன்றாகப் பிரித்தாலும் தமிழ் இசை திரையிசையாகவும், தமிழ் நாடகம் திரைப்படமாகவும் சுருங்கிவிட்டது. இயல் வகைமைக்குள் வரும் கவிதை திரைப்பாடல் வரிகளாக சுருங்காமல் இருப்பது ஆறுதலைத் தருகிறது. தமிழ் இசையும் நாடகமும் திரைப்படங்களைத் தாண்டியும் புத்துயிர் பெற வேண்டும் . அதே சமயம் கவிதையும் அழிகியலை மட்டும் நம்பியிராமல், அரசியலையும், மக்களின் வாழ்வையும் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். நேர்மறையான கலகத்தை உண்டாக்கும் வகையில் கவிதைகள் உருவானால் நன்றாக இருக்கும் . உயிரோட்டமுள்ள எந்தக் கலைப்படைப்பும் கலகத்தை உண்டு பண்ணவே செய்யும். அழகியலுடன் சேர்ந்த அரசுகளை ஆட்டிவைக்கும் உக்கிரமான அரசியல் கவிதைகளுக்கு நம் சூழலில் ஒரு பெரிய வறட்சி இருந்து கொண்டே தான் இருக்கிறது.
சங்கக்கவிதைகளுக்கு பிறகு தமிழின் முக்கியமான ஆளுமைகளாக நிறைய பேர் இருக்கிறார்கள். இதில் மாறுபட்டவராகவும் தனித்த ஆளுமையாகவும் தேவதச்சன் திகழ்கிறார். படைப்பின் மூலமே நாம் தேவதச்சனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். கோவில்பட்டியில் அவரை நேரில் பார்க்கும் யாரும் அவரைக் கவிஞர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அவ்வளவு எளிமையான தோற்றமுடையவர். 1970களிலிருந்து எழுதினாலும் மிகக்குறைந்த கவிதைகளே எழுதியிருக்கிறார். தேவதச்சன் , இன்றைய கவிஞர்கள் போல பக்கம் பக்கமாக எழுதி உடனே புகழை கோருவதில்லை. எதிர்பாராமை தான் தேவதச்சனின் கவிதைகளில் எப்போதும் இருக்கிறது.மக்களின் வாழ்க்கையை , நாம் அன்றாடம்பயன்படுத்தும் பொருட்களின் வாயிலாகவே பதிவு செய்கிறார். தமிழ் மொழியை மிகவும் நுட்பமாக பயன்படுத்துகிறார். இவரின் கவிதைகளால் தமிழ் மொழி மேலும் சிறப்பு பெறுகிறது. மொழியை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து புதுமையாக பயன்படுத்துவது தான் தேவதச்சனின் பலம்.கவிதைகளில் சொல் கட்டமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். தனது கவிதைகள் முலம் தொடர்ந்து தமிழ் மொழியோடு விளையாடிக்கொண்டே இருக்கிறார்.
நீ
எனக்கு
எவ்வளவு முக்கியம் தெரியுமா
பாம்புக்கு
ர
எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம்
தமிழ் மொழியில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் துணைக்காலை (ர ) மையமாக வைத்து கவிதை எழுதுவதென்பது நிச்சயம் புதுமை தான்.பாம்பு என்ற வார்த்தையில் ர இல்லாவிடில் அதன் அர்த்தமே மாறிவிடும், அது போல நீ இல்லாவிட்டால் நானும் அர்த்தமில்லாமல் போய்விடுவேன். இது நேரடியான பொருள். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல உன்னை நானறிவேன் .பாம்பு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு வெளியே தெரியாத கால் உதவுவது போல என் வாழ்வின் பயணத்தைத் தொடர நீ வேண்டும். இது மறைமுக பொருள். இந்தக் கவிதையை வாசிக்கும் உங்களுக்கு இன்னும் வேறு பொருள்களையும் தரலாம்
பதில் எதுவும் சொல்ல வேண்டாம்
பதிலுக்கு என்னைப் பார்க்கவும்
வேண்டாம்
உன்னைத் தீண்டும் போது
பதிலுக்குப் பதில்
என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை
பார்வையில் பட்டோ
படாமலோ
அருகிருந்தால் போதும்
என்னை நனைக்கும்
நீரின் ஈரம்
எதற்கும் பதிலாக இல்லை
நமக்குப் பிடித்தமானவர், நம் மீது கோபத்தில் இருக்கும் போதும் நம்மை விட்டு விலகிச் செல்லாமல் அருகிலிருக்க கோருகிறது இந்தக் கவிதை.
நம் தினசரி வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை தேவதச்சனின் கவிதைகளுக்கு உண்டு .ஒரு நாள் முழுவதும் வாசிப்பதின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அவரது ஒரே ஒரு கவிதை கொடுத்துவிடும் .அந்த ஒரு கவிதையின் இனிமையை உணரவும், கன(ண)த்தை அறியவும் நமக்கு ஒரு நாள் தேவைப்படுகிறது.தேவதச்சன் கவிதைகளை கரும்பைப் போல சுவைத்து வாசிக்க வேண்டும்.
தேவதச்சன் வாழ்வின் எளிய கணங்களை தனது கவிதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார் . " ஜென் கவிதைகள் போல் அர்த்தம் பொதிந்ததாய் தேவதச்சனின் கவிதைகள் இருக்கின்றன " என்று எஸ் .ரா ., குறிப்பிடுகிறார் . தினசரி வாழ்வில் நம் கண்ணில் படும் , நாம் பயன்படுத்தும் , நாம் கற்பனை செய்யும் பொருள்களின் வாயிலாக தான் சொல்ல விரும்புவதை சொல்லும் பேரற்புதத்தை தேவதச்சனால் மட்டுமே செய்ய முடியும் .
தேவதச்சனின் கவிதைகள் எல்லைகள் அற்றதாய் இருக்கின்றன . எந்த வரையறைக்குள்ளும் அவரது கவிதைகள் அடங்குவதில்லை . பிரபஞ்சத்தைப் போலவே அவரது கவிதைகளின் பரப்பை நம்மால் கண்டறிய முடியாது . பூமியில் இருக்கும் அனைத்து பொருட்களும் அவரது கவிதைகளின் பகுதிப் பொருட்களாக இருக்கின்றன .உயிருள்ளவை - உயிரற்றவை ,முக்கியமானவை - முக்கியமற்றவை என்ற பேதமெல்லாம் இல்லை . உதாரணமாக மைனா ,சூரியன்,நீல பலூன்,இலை,மரம்,பாலிதீன் பை ,கடிகாரம் ,காக்கி நிற டப்பா , முரட்டு லாரி , மீன்,கடற்கன்னிகள், லோயா தீவு ,மலை ,ஜெல்லி மீன் , சைக்கிள் பூட்டு ,பிரபஞ்சத்தின் வெளிபிரகாரம் ,சர்க்கஸ் கோமாளிகள் ,புகையிலைப் பொட்டலம் , ஓணான் ,இரும்புக் கிராதி ,நீல நிற இலந்தைப் பழங்கள் , சிறுவண்டுகள் , ஆழத் திமிங்கலம் ,வாலைப் பெண் ,நகப்பூச்சு , கண்ணாடி டம்ளர் , இளம்பெண் துறவி , தேநீர்த் தோழி ,மலர்கள் ,ரகசியக்கல் , அலைபேசி ,டினோசர் ,நகவெட்டி ,புத்தக குவியல்கள் , நிலைவாசல் ,பழச்சாறு , அமரர் ஊர்தி இவையெல்லாம் " ஹேம்ஸ் என்னும் காற்று " என்னும் தொகுப்பில் இடம் பெற்ற சில வார்த்தைகள் .
தேவதச்சனின் கவிதைகளில் சில சாதாரணமாய் வாசிக்கும் போது ஒன்றும் புரியாதது போல் தெரியும் . முதல் வரிக்கும் ,அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லாதது போல் தெரியும் . அது தான் இவரின் கவிதைகளுக்கு தனித்துவத்தையும் , தனிச்சுவையையும் தருகிறது.ஒரு அழகான செடி இருக்கிறது .செடி என்றாலே அழகு தான் ;அழகான செடி வேறு உள்ளதா என்ன ? அதன் இலை ஒரு வித அழகு ,கிளை ஒரு வித அழகு ,மொட்டு ஒரு வித அழகு .
எவ்வளவு அழகான செடி என்றாலும் தேன் என்பது மலரில் மட்டுமே இருக்கும் .ஆனால் தேனை செடியின் எல்லா பகுதிகளிலும் எதிர்பார்ப்பது நம் சமூகத்தின் மிகப்பெரிய முட்டாள்தனம் . நமக்கு எல்லா விசயத்திலும் ஒரு தொடக்கம் ஒரு நிறைவுடன் கூடிய முடிவு தேவைப்படுகிறது . தேவதச்சன் கவிதைகளில் இதை எதிர்பார்க்க முடியாது .
கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
அழகிய இளம்பெண் துறவியைப் போல
இருந்த அது
அல்லும் சில்லுமாய்
உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
சுத்தம் பண்ணுகையில்
விரல் கீறி
குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
ளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி
ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைவதென்பது மிகவும் சாதாரண நிகழ்வு.இந்த எளிய கணத்தை தனது கவிச்சொற்களால் அர்த்தம் உள்ளதாக நம் நினைவுகளைக் கீறிப்பார்ப்பதாக மாற்றிவிடுகிறார்.அவரது ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன . மொத்தக் கவிதைகளிலும் ஒரு கவிதை கூட மற்றொரு கவிதை போல இல்லை .
இலைகள் மலர்கள்
ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன
நீயும் நானும்
சில வருடங்களில்
அதற்குள்
ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்
போய்விடுகிறோம்
அடையாளம் தெரியாமல் போகும்
அடையாளத்தில் ஒருவருக்கொருவர்
முகமன் கூறிக்கொள்கிறோம்
நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்
குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ
அவற்றிற்கு
எப்போதும்
அடையாளம் தெரிந்தேவிடுகிறது
உறவுகளுக்குள் காலப்போக்கில் நெருக்கம் குறைந்து விரிசல் உண்டாகி கண்டும் காணாமலும் இருப்பது போல நடந்து கொள்வதை இந்தக் கவிதை இலைகள், மலர்களுடன் தொடர்புபடுத்தி விவரிக்கிறது.
கவிதை எழுதுவது
என்பது
ஒரு
குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளி வீசத் தொடங்கியது
ஒரு
மெல்லிய இழை
நிசப்தத்தில்
எவ்வளவு
நீள
நன் கணம்
" குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போல் " ,கவிதை எழுதுவதை விளக்க இப்படி ஒரு உவமையை தேவதச்சனால் மட்டுமே தர முடிகிறது.கவிஞனுக்கு கவிதை எழுத தோன்றிய விசயம் குண்டு பல்ப் ஆகவும், அதை ஹோல்டரில் மாட்டுவதென்பது அந்தக் கவிதையை எழுதுவதாகவும் அமைகிறது.எழுதிய கவிதையை வாசிக்கும் போது அந்த பலப்-ன் ஒளியை நமது புரிதலுக்கு ஏற்ப காணமுடிகிறது. எழுதிய பின் கவிஞனின் மனம் அமைதியாகி விடுகிறது.இந்தக் கவிதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது.
" ம. இலெ.தங்கப்பா என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்திருக்கிறார்.அந்தப் பாடல்கள் ஆ.இரா.வேங்கடாசலபதியின் முயற்சியால் புது தில்லி பெங்குவின் பதிப்பாக 'Love Stands Alone' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.முதலில் ஆச்சரியபடுத்திய விசயம் நூலின் தலைப்பு. Love Stands Alone . இது குறுந்தொகையில் வரும் ஒரு பாடலின் வரி. காதலுக்கு ஒருவிதத்திலும் துணை கிடையாது என்று தமிழில் வருவது ஆங்கிலத்தில்' காதல் தனித்து நிற்கிறது '(Love Stands Alone) என்று வரும்.இந்த மொழிபெயர்ப்பு பல இடங்களில் மூலப்பிரதியை மிஞ்சுவது போல இருக்கிறது. " என்று அ.முத்துலிங்கம் தனது 'ஒன்றுக்கும் உதவாதவன்'(பக்கம் 40) நூலில் எழுதியுள்ளார். Love Stands Alone இந்த வார்த்தைகள் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. காதல் தனித்து நிற்பது (Love Stands Alone ) போல தேவதச்சன் தனித்து நிற்கிறார் ( Devathachan Stands Alone. ). உரிய மீனுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கைப் போல , தேவதச்சனின் புதிய கவிதைகளுக்காக நாம் காத்திருக்கிறோம்.
குறி எனும் சிற்றிதழில் வெளிவந்த கட்டுரை இது.
தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
கச்சேரி பள்ளி எதிரில் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
மேலும் படிக்க :
எக்காலத்திற்குமான கலைஞன் !
வலுத்தது நிலைக்கும் !
...................................................................................................................................................................

குறி தனி இதழ் ரூபாய் .20
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
மேலும் படிக்க :
எக்காலத்திற்குமான கலைஞன் !
வலுத்தது நிலைக்கும் !
...................................................................................................................................................................
0 comments:
Post a Comment