
"பெண்ணை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்
Touching a Woman without Her Consent is a Punishable Crime”இப்படியொரு Disclaimer-ஐ முதன் முறையாக 'தாதா 87' என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதலில் இந்த Disclaimer-ஐ சேர்க்க நினைத்ததற்கே படக்குழுவிற்கு நாம் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும். இப்படி ஒரு Disclaimer போடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை தான். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் மனித மனங்களில் ஒரு சிறு அழுத்தத்தை இது உருவாக்கவே செய்யும். பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவது சமூக நலனை பெருமளவு பாதிக்கிறது. இன்னொரு விதமான பார்வை இருப்பதையும் தவிர்க்க முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் இப்போது தான் அதிக அளவில் வெளியே தெரிய ஆரம்பிப்பதால் தான் பாலியல் சார்ந்த குற்றங்கள்...