Wednesday, April 27, 2011

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!

1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்படத்தில் MGR , வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர் . " மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி " இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும் . இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார் . அதில் ஒன்று தான் இந்தப்பாடல் . இந்தப்பாடல் எழுதப்பட்டு 53 வருடங்களுக்கு மேல் ஆனாலும் , இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் .  அந்தப்பாடல் :                                திரைப்படத்தில்  - http://www.pattukkottaiyar.com/site/?p=199            ...

Monday, April 25, 2011

" புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் " - வைகோ

சைதாப்பேட்டையில் வைகோ பேசிய பேச்சைக் கேட்கவும் , பார்க்கவும் முடிந்தது . நீண்ட நாட்கள் கழித்துப் பேசினாலும் பேச்சில் நெருப்பு தெறித்தது  . "  ஐ .நா .சபை  , கொடுங்கோலன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து கூண்டில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் " நடந்தது . பழ நெடுமாறன் , தா. பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .  சமீபத்தில் இலங்கை தமிழர்களுக்காக உயிரிழந்த  தமிழரின் வழக்கில் தவறாக நடந்து கொண்ட  காவல்  துறை அதிகாரிகளை கடுமையாக ( நீங்கள் என்ன ராஜபக்சேவின் கூலி ஆள்களா ? ) விமர்சித்தார் . இரண்டு முறை அந்த கொடுங்கோலனை இந்தியாவிற்கு அழைத்து மரியாதை செய்த இந்திய அரசை வன்மையாக கண்டித்தார் . ராஜபக்சே முதல் குற்றவாளி என்றால் இந்திய அரசும் , தமிழக அரசும் இரண்டாம் குற்றவாளிகள் , இவர்களையும் கூண்டில்...

Saturday, April 23, 2011

5 ரூபா -குறும்படம் !

இதுவரை நான் பார்த்த குறும்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த " 5 ரூபா " குறும்படம் தான் . எதார்த்தமான வசனம் , நல்ல ஒளிப்பதிவு . நீங்களும் ஒரு முறை பாருங்களேன் . மேலும் பார்க்க : MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !...

உலக புத்தக தினம் !

' There are worse crimes than burning books. One of them is not reading them.' - Joseph Brodsky.   ஏப்ரல் 23 , உலக புத்தக தினம் . வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் நினைவுநாளையே உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம் . புத்தகங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது . புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு பள்ளிகளில் தொடங்கினாலும் , பள்ளிகளிலேயே முடிவதில்லை , நம் ஆயுள் வரை தொடர்கிறது . எந்த காலகட்டத்திலும்  நம்மைக்  கைவிடாத ஒரே நண்பன், " புத்தகம் " மட்டுமே .புத்தகங்கள் நமக்கு அளிக்கும் அற்புதங்கள் ஏராளம் . ஒவ்வொரு புத்தகமும் நாம் அறியாத  பல கதவுகளைத் திறக்கிறது .  மனிதனது கண்டுபிடிப்புகளில் புத்தகம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது . எத்தனையோ சாதனையாளர்கள் உருவானதற்கும் , இன்று உருவாகிக் கொண்டிருப்பதற்கும் புத்தகங்களே...

Friday, April 22, 2011

பூமியைக் காப்போம் வாருங்கள் !

ஏப்ரல் 22 , உலக பூமி தினம் ( World Earth Day ) .  " ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான  உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு  " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது .  பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் ,...

Thursday, April 21, 2011

அமேசான் - அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம் !

இணையத்  தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் மேகக்  கணினியகம் ( Cloud Computing ) . முன்பெல்லாம்  நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று மட்டுமே பணத்தை எடுக்க முடியும் . ஆனால் , தற்பொழுது எல்லோரும் ATM யைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்கிறோம் . அதுபோல , மேகக்  கணினியகதைப் பயன்படுத்தி நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை எங்கு இருந்து வேண்டுமானாலும் நமக்குத  தேவையானபோது   பெற்றுக்கொள்ளலாம் . நமது சொந்த CPU போலவே செயல்படும் . நமக்கு தேவையான மென்பொருள்களை இயக்கவும் , தகவல்களைச் சேமிக்கவும் முடியும் .   தற்பொழுது இருக்கும் முறைகளால் தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் . நமக்கு தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் ( Download ) செய்து தான் பயன்படுத்த முடியும் . இதனால் , நேரமும்...

Wednesday, April 20, 2011

தமிழகத்தின் முதல் 10 முக்கியப் பிரச்னைகள்

1 . துறை சார்ந்த அனுபவமும் , தகுதியும் உடையவருக்கு  மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.       அரசியல் அனுபவதிற்காகவோ , குறிப்பிட்ட பகுதியின் பெரும்புள்ளி என்பதற்காகவோ பதவி கொடுக்க கூடாது . 2  . விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் . 3 . அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் , முக்கியமாக கிராமம் முதல் நகரங்கள் வரை கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும் . 4 . எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் .  தமிழ் ,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும பள்ளிப்படிப்பு வரை கட்டாயமாக்கப்பட வேண்டும் . கல்விக் கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் . பட்டப்படிப்பு...

Monday, April 11, 2011

ஏப்ரல் 13 ன் கதாநாயகர்களுக்கு !

ஒரு நாள் கதாநாயகர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீங்கள் ஏற்கப் போகும் அந்த ஒரு நாள் கதாபாத்திரம் தான் அடுத்த 5 ஆண்டுகள்( நிபந்தனைக்கு உட்பட்டது ) நம் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது . நாம் , ஜனநாயக நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்மை நம்ப வைப்பது தேர்தல் மட்டுமே . மிச்சம் இருக்கும் அந்த ஒரே ஒரு உரிமையை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்துத் தான் நம் வெற்றியும் தோல்வியும் இருக்கப் போகிறது . நாம் பெறப்போகும் வெற்றி நமது வெற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் வெற்றி . நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை இந்த முறை தேர்தல் ஆணையம் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது . இனி, நம் ஓட்டில் தான் உள்ளது நம் ஜனநாயகம் .  ஒரு சில பேர் ஓட்டே போடாமல் வில்லன்களாக மாறலாம் என்று நினைக்கிறார்கள் . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...

Friday, April 8, 2011

சூரியன் - உலக சக்திகளின் மையம்

சூரியன் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் . சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள்  20 வினாடிகள் ஆகின்றன . இந்த ஒளியிலிருந்து தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன . ஒளிச்சேர்க்கை மட்டும் நின்று விட்டால் நம் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது . எல்லா உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலின் மூல வடிவம் ஒளிச்சேர்க்கை தான் . உயிரினங்களுக்கு தேவையான உணவும் , ஆற்றலும் தாவரங்களையே சார்ந்தே உள்ளன . ஏன் நாம் சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜன் தாவரங்களில் இருந்தே கிடைக்கிறது . சூரிய ஆற்றல் , பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை சார்ந்தே உள்ளன.  சூரியனை பற்றி சிந்திக்கும் மனநிலை நமக்கு இல்லை . இயந்திர...

Monday, April 4, 2011

மனிதனாய் இருக்க மறந்து விடாதே ...!

குழந்தையாய் இரு            சிரிக்கும் வரை ...! சிறுவனாய் இரு           விளையாடும் வரை...!    மாணவனாய் இரு          படிக்கும் வரை ...! இளைஞனாய்  இரு         ஜெயிக்கும் வரை ...1 மனிதனாக இருக்க          மறந்து விடாதே சாகும் வரை ...! முகப்பு பக்கம்  ....................................     ...

Sunday, April 3, 2011

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி களிக்க வேண்டிய தருணமிது . 1983 கு பிறகு இப்ப வாங்கும் அப்ப வாங்கும்னு எல்லா உலககோப்பை போட்டிகளையும் பசியை மறந்து , தூக்கத்தை தொலைத்து பார்த்துக்கொண்டே இருந்தோம் . 28 வருட ஏக்கம் முடிவுக்கு வந்துவிட்டது . இப்பொழுது  உலககோப்பையை வென்றே விட்டோம் . ஆனால் , இந்த உலககோப்பை சாதாரணமாக கிடைக்க வில்லை . ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் நம் கைகளை அடைந்துள்ளது .  இந்த ஒரு உலககோப்பையை வெல்ல நாம் மூன்று இறுதிப் போட்டிகளில் வெல்ல வேண்டி இருந்தது . முதலாவது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் ( காலிறுதி ), இரண்டாவது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் (அரையிறுதி ) , மூன்றாவது இறுதிப் போட்டியில் இலங்கையையும் (இறுதி ) வீழ்த்தித் தான் உலக கோப்பையை வென்றோம் . மூன்றுமே கடினமான போட்டிகள்...

Friday, April 1, 2011

மூன்றாவது இறுதிப்போட்டி !?

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்குமே  இது மூன்றாவது இறுதிப்போட்டி . இதற்கு முன் இரு அணிகளும் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ,ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளன . இரண்டு அணிகளும்  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனே தோல்வியை தழுவியுள்ளன . இம்முறை ஆஸ்திரேலியா இல்லை . ஆனால் , இரண்டில் ஒரு அணி தான் வெற்றி பெற முடியும் . அது எது என்பதில் தான் சுவாரசியம் இருக்கிறது .   இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாகவே இருந்தது . அதிலும் ஆஸ்திரேலியாவுடன்  வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது . பாகிஸ்தான் உடனான போட்டியில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்தியா அணியின் பந்து வீச்சும் , களப்பணியும் மிகச் சிறப்பாக இருந்தன . உலககோப்பை தொடங்கிய போது...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms