
பலவிதமான கொள்ளைக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது . ஒருவேளை 2012 ல் உலகம் அழிந்து விடுமோ ? தெரியாது . அரசியல் கொ.கா. , ஆன்மீக கொ.கா.,இயற்கை கொ.கா., உலகமயமாக்கல் கொ.கா., பதுக்கல் கொ.கா. என்று பல கொ.கா. நம்மிடையே உலவுகிறார்கள் . இதில் செல்போன் சேவை நிறுவனங்களும் அடக்கம் . இவர்களுக்காகவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாடலை ( "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்திருந்த மருந்து சொல்லடா ( http://jselvaraj.blogspot.com/2011/04/blog-post_27.html) " ) எழுதியுள்ளார் .
பெட்ரோலோ , டீசலோ , பஸ் டிக்கெட்டோ ஒரு ரூபாய்...