
1940 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் தோன்றிய இசை வடிவம் தான் ராக் அண்ட் ரோல் ( Rock & Roll or Rock 'n' Roll ) . ஆப்பிரிக்க இசையும் அமெரிக்க இசையும் கலந்து தான் " ராக் அண்ட் ரோல் " உருவானதாக சொல்லப்படுகிறது . இந்த இசை வடிவத்தில் முதலில் பியானோ அல்லது சாக்ஸபோன் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது . பிறகு கிட்டார் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது .1960 குப் பிறகு தான் இந்த இசை வடிவம் பெரிய அளவில் புகழ் பெற்றதாம் .
1958 ஆம் ஆண்டு வெளிவந்த பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர் . இந்தப்பாடலை எஸ் .சண்முகசுந்தரம் மற்றும் ஆர் .கணேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் . சந்திரபாபு இந்தப்பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார் . என்னை...