நியூட்ரினோ என்பது மின்சுமை இல்லாத ஒளியை விட வேகமாக(?) பயணிக்கும் துகள் என்று சொல்லப்படுகிறது . இது , மின்காந்த அலைகள் மற்றும் வேறு எந்தத் துகள்களாலும் பாதிக்கப்படாமல் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது . நியூட்ரினோக்கள், இயற்கையான முறையில் சூரியனில் நடைபெறும் வேதியல் மாற்றங்களால் கிடைக்கின்றன . செயற்கையான முறையில் அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் கதிர்கள் மூலமாக அணுவைத் தாக்குவதன் மூலமாகவோ நியூட்ரினோக்களை உருவாக்க முடியும் .ஆனால் , இது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து அதிகம் . அதனால் , சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்யவே உலகெங்கும் நியூட்ரினோ ஆய்வுமையங்கள் அமைக்கப்படுகின்றன . இதுவும் எளிதல்ல .
நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான விதத்தையும் , சூரியனின் ரகசியங்களையும் அறியமுடியும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள் . மேலும் இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் . இவர்களால் நம்பிக்கை மட்டுமே தெரிவிக்க முடியும் . ஆனால் , முடிவு எப்போதும் இயற்கையின் கையில் .
மூன்று விதமான நியூட்ரினோக்கள் :
Electron நியூட்ரினோ ( ne), Muon நியூட்ரினோ( nm) மற்றும் Tau நியூட்ரினோ( nt) என்று மொத்தம் மூன்று விதமான நியூட்ரினோக்கள் இருக்கின்றன .
Neutrino | ne | nm | nt | |||
Charged Partner | electron (e) | muon (m) | tau (t) |
1930 ஆம் ஆண்டிலிருந்தே நியூட்ரினோ பற்றிய ஆய்வுகள் தொடங்கி விட்டன . ஆனால் இன்றுவரை பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை . நியூட்ரினோ துகள்களுக்கு எடை உண்டு என்று மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது .ஜப்பான்ல வச்சிருக்காக ,அமெரிக்கால வச்சிருக்காக அதனால நாமும் ஒன்ன உண்டு பண்ணலாம் என்று நெடு நாட்களாக இந்தியா முயற்சித்து வருகிறது . இதற்கு முன்பு வடமாநிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் அமைய இருந்ததும் , நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் அமைய இருந்ததும் இயற்கை ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது . அதனால் கோலார் தங்க வயலில் நியூட்ரினோ ஆய்வுமையம் செயல்பட்டு வந்தது . இதுவரை எவ்வளவு பணம் செலவளிக்கப்பட்டுள்ளது ? என்ன கண்டுபித்திருக்கிறார்கள் ? என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை .
இந்தநிலையில் தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது . இதற்கு தேவாரம் பகுதி மக்கள் கடந்த ஆண்டே எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் , பெரிய போராட்டமாக முன்னெடுக்க முடியவில்லை . கண்டிப்பாக ஆய்வு மையம் அமையும் இடத்தில் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் . இந்தப்பாதிப்பு இன்னொரு " தானே " புயல் போல ஏதோ ஒரு வடிவத்தில் பூமியைப் பாதிக்கும் . இயற்கையின் அடி வலிமையாக மட்டுமே இருக்கும் .
இந்திய மூளைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்றே வைத்துக்கொள்வோம் . இவர்களை ஜப்பான் அல்லது அமெரிக்காவிற்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து ஆய்வுகளை நடத்தச் சொல்லலாமே . அதை விடுத்து புதிதாக ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் அதிகளவு விரையமாகப் போகிறது .மலையைக் குடைவதன் மூலமும் , சுரங்கம் அமைப்பதன் மூலமும் இயற்கை சூழலும் , சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் .
இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதன் விளைவாக மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது ஒரு கூட்டம் . இன்று உலகில் கோடிக்கணக்கான ஆலைகள் மற்றும் ஆய்வு மையங்கள் உள்ளன . ஆலையின் கழிவுகள் நுண்ணுயிரிகளை அதிகம் பாதிக்கின்றன . இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாத கழிவுகளை வெளியிட எந்த அறிவியல் முறையாலும் முடியவில்லை . அதே வேளையில் இயற்கையில் கழிவு என்பதே இல்லை . இயற்கையின் கழிவு மற்றொரு உயிரினத்தின் வளர்ச்சிக்கு ஊட்டமாக மாறுகிறது .
" இடுப்பு வேட்டிக்கு வக்கில்லையாம் ; இதுல இன்டர்நெட் கனெக்சன் கேட்குதாம் " என்று சுஜாதா வேடிக்கையாக சொன்னது போல, " சோத்துக்கே வழியில்லையாம் (இந்தியாவில் வாழும் 40 % சதவீத மக்களுக்கு இன்னும் சரியான உணவு கிடைத்தபாடில்லை ) ; இதுல நியூட்ரினோ ஆய்வுமையம் கேட்குதாம் " .
மேலும் படிக்க :
நாமெல்லாம் குற்றவாளிகளே !
...................................................................................................................................................................
2 comments:
அன்பு செல்வராஜ் அவர்களுக்கு தங்களுடைய வலைப்பூவை கடக்கும் வாய்பு ஆனந்த விகடன் மூலமாக கிடைத்தது. படித்தேன் மகிழ்ந்தேன். பல நல்ல தகவல்கள் வியாபித்திருந்தது. நியுட்ரினோ ஆராய்ச்சியை சாடியுள்ளீர்கள். ஆனால் நியுட்ரினோக்கள் சூரியனில் உள்ள மாற்றங்களை காட்டும் ஒரு மாயக்கண்ணாடி. சூரியனின் வயது ,ு வெப்ப மாற்றம,் காந்த புயல்கள், ்அண்டத்தின் மாறுபாடுகள் ஆகிய தகவல்களை அறியலாம.் nutrinos will rule astrophysics one day, they are great messengers and high speed communicators...
vanakkam ananthavikadan arimukam niraya thakavalkal tharukireerkal nantri thodarnthu padikkavirumbukiren.m.selvarathinam munirka newdelhi.
Post a Comment