
"தெண்டுல்கரை சதம் அடிக்க விட மாட்டோம் , யுவராஜை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வோம் " என்றெல்லாம் சபதம் விட்ட அப்ரிடி இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என்று சொல்ல மறந்து விட்டார் . தெண்டுல்கரை சதம் அடிக்க விடவில்லை , யுவராஜையும் ஒரே பந்தில் ஆட்டம் இழக்கச் செய்து விட்டனர் , ஆனால் , இந்தியா வெற்றி பெற்று விட்டது . கடந்த போட்டி முடிந்த பிறகு பாண்டிங் ," இதற்கு முன்பு இந்தியா இப்படி இணைந்து விளையாடி நான் பார்த்ததில்லை " என்று குறிப்பிட்டார் . இந்த தொடரில் இந்தியா பெற்ற அனைத்து வெற்றியும் எந்தத் தனி வீரரையும் சார்ந்து இல்லை , எல்லா வெற்றியும் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியும் அப்படிப்பட்டதே .
இந்த உலககொப்பைத் தொடரில் பங்களாதேஷ் உடனான போட்டியைத் தவிர இந்தியா விளையாடிய...