சோனியாகாந்தி யார் ? காங்கிரஸ் கட்சியின் தலைவி அவ்வளவுதானே.
அவர் , மத்திய அரசு சார்ந்த எந்தப்பதவியிலும் இல்லை . அப்புறம் எதற்கு மத்திய அரசு சார்ந்த விளம்பரங்களில் சோனியாகாந்தியின் படம் வெளியிடப்படுகிறது . கட்சித்தலைவி என்றால் கட்சிக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சொந்தப்பணத்தில் உங்கள் தலைவிக்கு விளம்பரம் செய்யுங்கள் . எங்கள் வரிப்பணத்தில் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள் ? குடியரசுத் தலைவர் பெயர் கூட இடம்பெறுவதில்லை .
கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவம் . ஜூலை 6 ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் 3 வது டெர்மினல் திறக்கப்பட்டது . அந்த அடிக்கல்லில் சோனியாகாந்தி பெயர் எதற்கு உள்ளது ?
தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளில் மன்மோகன் சிங் படமும் சோனியா காந்தி படமும் இடம்பெற்றன .இங்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் சோனியா காந்திக்கும் என்ன சம்பந்தம் ? நீதி மன்றம் , இவர்களின் படங்கள் இடம் பெற்ற பெயர் பலகைகளை நீக்கக்கோரி உத்தரவிட்டது . ஆனால் ,இன்னும் பெரும்பாலான இடங்களில் அவர்களின் படங்கள் உள்ள பெயர் பலகைகள் நீக்கவில்லை .( தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் வைக்கப்பட்ட அரளிச் செடிகளுக்கு தண்ணீர் ஊத்துகின்றனர் . ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக நடப்பட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதில்லை ,பல இடங்களில் மரங்களே நடப்படவில்லை . கணக்குக் காட்டாமல் வாங்கப்படும் சுங்கப்பணம் எங்கே போகிறது ??? )
இதைக் கண்டிக்காத சோனியாகாந்தியையும், இந்தச்செயலை தொடர்ந்து செய்து வரும் மத்திய அமைச்சர்களையும் வன்மையாக கண்டிப்போம் . இனிமேலாவது இதை நிறுத்திக்கொள்ளுங்கள் .
இதுவரை நடந்த பெரும் ஊழல்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போதுதான் நடந்துள்ளது . உதாரணம் : நகர்வாலா , போபர்ஸ் , ஹவாலா , காமன்வெல்த் ,ஆதர்ஷ் , ஸ்பெக்ட்ரம் இன்னும் பல . அடுத்து S கற்றை ஸ்பெக்ட்ரம் ?? ஊழல் செய்யவே ஆட்சிக்கு வருகின்றார்களா என்றும் தெரியவில்லை . அப்போ காங்கிரஸ் இருக்கும் வரை ஊழல் இருக்கும் . ஊழல் இருக்கும் வரை இந்தியா வளராது . அதனால அடுத்து யாருக்கு ஓட்டு போடலாம் ?????!!!!!!? அது ரகசியம் ?
பாரத பிரதமர் சொல்கிறார் "ஊழல்தான் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது ". யார் ஆட்சியில் ஊழல் நடக்கிறது ? உங்கள் ஆட்சியில் தானே . உங்களால் தான் நாட்டில் நடக்கும் ஊழலைத் தடுக்க முடியவில்லையே அப்புறம் எதற்கு இன்னும் பதவியில்இருக்கிறீர்கள் ? தேர்தல் செலவு உங்கள் ஊழல் பணத்தைவிடகுறைவுதான் . அதனால் மீண்டும் தேர்தல் நடத்துவதில் ஒன்றும் தப்பில்லை .
மக்கள் நலனும் , நாட்டின் வளர்ச்சியும் தான் முக்கியம் என்றால் உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டியது தானே ஆனால் செய்யமாட்டீர்கள் . பதவி சுகம் உங்களை கலைக்க விடாது . மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சி செய்யுங்கள் . இல்லை என்றால் உடனே பதவி விலகுங்கள் . வீண்பேச்சு பேசாதீர்கள் ! சோனியாகாந்தி அவர்களே , பிரதமர் வேண்டுமானால் உங்கள்பொம்மையாக இருக்கலாம் ,அதற்காக இந்தியனும் ,இந்தியாவும் உங்கள் பொம்மையாக இருக்கும் என்று நினைக்காதீர்கள் !
மக்கள் நலனும் , நாட்டின் வளர்ச்சியும் தான் முக்கியம் என்றால் உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டியது தானே ஆனால் செய்யமாட்டீர்கள் . பதவி சுகம் உங்களை கலைக்க விடாது . மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சி செய்யுங்கள் . இல்லை என்றால் உடனே பதவி விலகுங்கள் . வீண்பேச்சு பேசாதீர்கள் ! சோனியாகாந்தி அவர்களே , பிரதமர் வேண்டுமானால் உங்கள்பொம்மையாக இருக்கலாம் ,அதற்காக இந்தியனும் ,இந்தியாவும் உங்கள் பொம்மையாக இருக்கும் என்று நினைக்காதீர்கள் !
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது அது வேறு நாடு என்று சொன்னீர்கள் . இப்போது தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் . இந்தியர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை .ஆனால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தானே. இப்பொழுது கொல்லப்படும் ஒவ்வொருமீனவரும் இந்தியர் . இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் ? ஒட்டுமொத்த இந்தியாவின் ஆதரவைப் பெறவேண்டிய காலகட்டம் இது .
ஊடகங்களும் "தமிழக மீனர்வர்களைக் காப்பாற்றுவோம் " என்று தான் போராடுகின்றன . இனி "இந்திய மீனர்வர்களைக் காப்பாற்றுவோம்" என்று போராட வேண்டும் . இந்தியிலும் , ஆங்கிலத்திலும் நம் மீனவர்கள் நிலை மொழி பெயர்க்கப்பட வேண்டும் . ஓட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை பெறவேண்டும் .
இலங்கை கடற்படை அவர்கள் எல்லையில் காவல் காக்கின்றனர் . இந்திய கடற்படை என்ன செய்கிறது ? பதில் சொல்லுங்கள் ?
பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் சமம் தான் . ஒரு மனிதன் பெரிய பதவியில் இருக்கும் போது கொல்லப்பட்டால் அதற்கு காரணமானவர்களை பல ஆண்டுகளுக்கு கொடுமைப் படுத்துவீர்கள் முடிந்தால் கொல்வீர்கள் . ஆனால் கொல்லப்படுவது ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் ஒரு நாள் இரங்கல் , 2 இலட்சம் பணம் அவ்வளவுதானா ? பதில் சொல்லுங்கள் ?
மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சி செய்யுங்கள் !
இல்லையென்றால் உடனே பதவி விலகுங்கள் !
வீண்பேச்சு பேசாதீர்கள் !
கட்சி நலன் சார்ந்த அரசியலை காலி செய்வோம் !
மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் !
......................................
......................................
0 comments:
Post a Comment