Showing posts with label முகநூல் பதிவுகள். Show all posts
Showing posts with label முகநூல் பதிவுகள். Show all posts

Thursday, July 10, 2025

அக்கமகாதேவி !


விகடன் தடம் -ல் வெளியாகியிருக்கும் அக்கமகாதேவியைப் பற்றிய பெருந்தேவியின் கட்டுரை கவனிக்க வேண்டிய ஒன்றாகும். பெண்களை அடிமையாகவே நடத்தும் இந்து சமய மரபில் இப்படி ஒரு பெண் வெளிப்பட பசவண்ணரின் இயக்கம் தான் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. உண்மைக்கு நெருக்கமில்லாத எதுவும் வீண் தான்.வசனங்களால் வளர்க்கப்பட்ட பசவண்ணரின் இயக்கம் உண்மைக்கு நெருக்கமானதாக நடைமுறைக்கு பொருத்தமில்லாததை புறந்தள்ளும் இயக்கமாக இருந்திருக்கிறது. தூமைத் தீட்டு , சாவுத் தீட்டு , குழந்தைப் பேறுத் தீட்டு , சாதித் தீட்டு, வைதவ்யம் எனப்படும் கைம்பெண் கோலம் போன்ற ஐந்து தீட்டுகள் பசவண்ணரின் இயக்கத்தினரால் (சரணர்கள் ) புறந்தள்ளப்பட்ட தீட்டுகள் ஆகும். இந்த இயக்கம் 12ம் நூற்றாண்டில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. 12ம் நூற்றாண்டிலேயே இந்த அளவிற்கு தெளிவு இருந்திருக்கிறது. இந்த தீட்டுகள் இன்றும் தொடர்வது வெட்கக்கேடு. இன்றைக்கும் இந்த ஐந்து தீட்டுகளும் இந்து சமயத்தில் தீவிரமாக பின்பற்றப்படும் தீட்டுகளாகவே உள்ளன. இந்த ஐந்து தீட்டுகளை ஒதுக்கிவிட்டாலே நிறைய மாற்றங்கள் நிகழும்.


முள்ளை முள்ளால் எடுப்பது போல ஆன்மீகத்தை , ஆன்மீகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை பசவண்ணரின் இயக்கம் நமக்கு கொடுக்கிறது. ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஒவ்வாத அயோக்கியத்தனங்களை வேரறுக்க இன்னொரு ஆன்மீக இயக்கம் தோன்ற வேண்டும். பகுத்தறிவுவாதிகளும் ஆசிரமங்கள் தொடங்க வேண்டும். 


அக்கமகாதேவியை பெருந்தேவி அணுகியிருக்கும் விதம் தனித்துவமானது. ஆண்டாளைப் போல அக்கமகாதேவியும் சென்னமல்லிகார்ச்சுனன் மீது மையல் கொண்டிருந்தார் என்றாலும் அவரது வாழ்க்கை பெரும் கலாச்சார உடைப்பு. அவரை ஒரு பெண்ணியவாதியாகவே பெருந்தேவி அணுகுகிறார். ஆடை களைதல் என்ற ஒன்றின் மூலமே நிறைய உடைப்புகளைச் செய்திருக்கிறார். இவ்வளவு வலிமை வாய்ந்த, எந்தவித நிர்பந்தத்திற்கும் கட்டுப்படாத, பாலினம் கடந்த சுதந்திரமான பெண் இன்றும் சாத்தியமா ? என்று தெரியவில்லை என்கிறார், பெருந்தேவி. இன்றும் பெண்களுக்கான பொதுவெளி என்பது ஆண்களுக்கான பொதுவெளி போல இல்லை. பெரும்பான்மையோருக்கு பொதுவெளியே இல்லை என்பது தான் உண்மை.


இந்த மாதிரியான வரலாற்று நிகழ்வுகள் கவனம் பெரும் போது நிகழ்கால வாழ்வில் நிறைய திறப்புகள் நிகழ சாத்தியமிருக்கிறது. 

(10-07-2018 அன்று முகநூலில் எழுதிய பதிவு )

மேலும் படிக்க :

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!

Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் !


முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் .....

ருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் !

ம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#‎நவீனமயமாதலோ ! ?

ம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.‪#‎மானிடவாழ்க்கை

யோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!‪#‎அவ்வளவுதான்ஆம்பள

காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். #‎மனிதன்ஒருகாரணப்பயல்

ரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் தனக்காக சொத்து சேர்க்காதவர்களையும் சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்.பணம் கரைய கரைய பணத்தால் பெற்ற புகழும் கரைந்து தான் போகிறது.ஆனால் , மற்றவர்களுக்காகவும் , குறிப்பிட்ட சில விசயங்களுக்காகவும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் நெடுங்காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கிறார்கள். #‎சாதனைவாழ்க்கை

வ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே அதிகம் மெனக்கெடுகிறான் ! ‪#‎கிறுக்குப்பய

காதில் விழுந்தது !
( வயது 60 கடந்த கணவன் மற்றும்  மனைவி இன்னொருவருடன் பேசியதிலிருந்து )
கணவன் : அந்தக் காலத்துல நான் அவ்வளவு அழகா இருப்பேன் .
மனைவி : ஆமா , அந்த அழக பார்த்து நாலு கழுத பின்னாடியே வந்துச்சு .

மக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது நமக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது

ந்த தேசத்தில் சாதாரண மனிதர்களுக்கு நீதியே இல்லையா ?
இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , அரசியல்வாதிகளையும் ,     அரசுக்கு நெருக்கமானவர்களையும், பணக்காரர்களையும் நீதி ஒன்றும் செய்யாது . சாதாரண மனிதர்களையும் ,சந்தேக கேசில் பிடிபட்டவனையும் குற்றவாளி ஆக்கி தண்டனை கொடுத்து அழகு பார்க்கும்.என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகளும் செய்யும். இது வரையில் அதிகாரத்தில் இருந்த குற்றவாளிகளையோ அல்லது பணக்காரக் குற்றவாளிகளையோ என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகள் செய்திருப்பார்களா ? இந்த தேசத்தில் எந்த நம்பிக்கையில் நாம் வாழ்வது ?

வேடிக்கை பார்ப்பவர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியாத வலிகளையும் வேதனைகளையும் எளிய புன்னகையால் கடந்து செல்பவர்கள் ‪#‎வாழத்தெரிந்தவர்கள்

திர்பாராத நேரத்தில் பெய்யும் மழையைப் போல சற்றும் சம்பந்தம் இல்லாத எளிய மனிதர்கள் நம் மீது காட்டும் அன்பு திளைக்க வைக்கிறது.

ரு குருவிடம் கற்றுக்கொள்வது போல வானம் பார்த்தல் வாயிலாக நாம் கற்றுக் கொள்வது அதிகம் . தொடந்து வானத்தைப் பார்ப்பது தியானம் செய்வதற்கு சமம் . நமது வாழிடங்களில் பெருகிவரும் உயர்ந்த கட்டிடங்களால் வானத்தைப் பார்ப்பது அரிதாகிறது . சூரிய உதய ,மறைவைப் பார்ப்பதும் குறைந்து வருகிறது . எப்படி இருந்தாலும் ,எங்கு இருந்தாலும் வானம் பாருங்கள் ! வானம் பாருங்கள் !  

பெற்றோர் படித்த பள்ளிக்கூடத்திலேயே படிக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை , கிடைத்தாலும் வாய்ப்பு 
மறுக்கப்படுகிறது.

மேலும் படிக்க :

முகநூல் பதிவுகள் - வாசித்ததில் பிடித்தது !


வாசிக்கும் புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை முகநூலில் அவ்வப்போது  பதிவிடுவது வழக்கம் . அப்படி பதிவிட்டதிலிருந்து சில....

'னுசனுக்குக் கோபத்தையும் பொறாமையையும் ஏமாத்தத்தையும் காட்டிக்கிட              ஒரு போக்கிடம் வேணுமில்லா ? மனுசென அடிச்சா கேஸூ உண்டும். மாட்டை            அடிச்சா உடையக்காரன் கேப்பான். வாய் பேசாம அனாதையா நிக்கே ஒரு மரம் அதெத் தீத்துக் கட்டுவோம்னு கோடாலியைத் தீட்டிக்கிட்டுப் புறப்பட்டுட்டான். '

 - ' ஒரு புளியமரத்தின் கதை ' நாவலில் சுந்தர ராமசாமி.

'தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும் 

தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனுமாமே !'


- திருமூலர் , 'கடலுக்கு அப்பால் ' நாவலில் இடம் பெற்றுள்ளது.

லகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேதமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்...'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன்.

ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். '
- காகித மலர்கள் நாவலில் ஆதவன் .

'யற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது .'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன் 

' ன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?
இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் '

- காகிதமலர்கள் நாவலில் ஆதவன் .

'ந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் . மேன்மையடையச் செய்ய முடியும் . ஜனநாயகம் மந்தைத்தனத்தைத்தான் உருவாக்குகிறது .செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவுகிறது . ஒரே மாதிரியான கட்டிடங்கள், வாழ்க்கை முறை ,கல்வித் திட்டம் இவை தனி மனித வேட்கைகளை , கனவுகளை ஒடுக்குகின்றன .'

- "காகித மலர்கள் " நாவலில் ஆதவன்.

 'ரீட்சை பாஸாகி, எவனிடமோ வேலைக்குப் போய் மாசச் சம்பளத்துக்கு மாரடித்துக்கொண்டு , காலாகாலத்தில் சுயமாகவோ நிர்ப்பந்திக்கப்பட்டோ ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , எனக்கு வேண்டிய பிரதிபிம்பங்களை அவர்களிடம் தேடி என்னையும் அவர்களையும் சலிக்கச் செய்துகொண்டு, அவர்களையே நான் தொடர்ந்து உயிர் வாழ ஒரு நோக்கமாக்கிக்கொண்டு , அவர்களும் என்னை அப்படியே ஆக்கிக்கொண்டு , ஒருவரோடொருவர் இறுகப் பிணைத்துக்கொண்டு , இந்தப் பிணைப்பை உன்னதமானதாகக் கற்பித்துக்கொண்டு , அந்தக் கற்பனையின் பளபளப்பு மங்காமலிருக்க எப்போதும் ஏதேதோ வகைப் பாலிஷ்களால் அதன் மேல் தேய்த்துக்கொண்டு... சே, அபத்தம் ,அபத்தம் . வாழ்க்கையே வெறும் அபத்தம். '

- " என் பெயர் ராமசேஷன் " எனும் நாவலில் ஆதவன் .

மேலும் படிக்க :



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms