தொடர்ந்து நான்கு முறை உலககோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ( 1996 ,1999,2003,2007 ) அதில் மூன்று முறை கோப்பையை வென்று உலக கோப்பை போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இருந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா .2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு சரியான முறையில் பதிலடி கொடுத்தது . அஸ்வின் மற்றும் ரெய்னா வை அணியிலிருந்து நீக்காமல் இருந்தது வெற்றிக்கு உதவியது . அஸ்வின் ஒரு வேகப்பந்து வீச்சாளர் போலவே செயல்படுகிறார் . துவக்கத்திலும் சரி , முடிவிலும் சரி சிறப்பாக பந்து வீசுகிறார் . நல்ல வேளை , தோனியின் மூளை சரியாக வேளை செய்துள்ளது . இல்லையென்றால் " யாரை அணிக்கு எடுக்குறது , யாரை தூக்குறதுனு எனக்குத் தெரியும்னு " சொல்லி சாவ்லாவையும் , நெக்ராவையும் மீண்டும் அணிக்கு தேர்வு செய்யாமல் இருந்தாரே அதுவரை சந்தோசம் .
ஆஸ்திரேலியாவை 260 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது . யுவராஜ் இந்தியாவின் முன்னனி பந்து வீச்சாளர் ஆகவே மாறிவிட்டார் . ஜாகிர் கான் , ஆட்டத்தின் நடுப்பகுதியில் திருப்பு முனையை ஏற்ப்படுத்துகிறார் , கடைசிக் கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார் . காம்பீர் ஆட்டம் இழந்தவுடன் ஆபத்பாந்தவனாக வந்தவர் தோனி அல்ல , பிரெட் லீ . தோனி அவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து , அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை அள்ளிக்கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்து விட்டார் . யுவராஜ் மற்றும் ரெய்னாவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது . பதட்டமான சூழ்நிலையைச் சிறப்பாக கையாண்டனர் .இதுவரை இந்தியா விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதை வென்று யுவராஜ் ,தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து விட்டார் . யுவராஜ் 50 அடித்தால் இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை தொடர்கிறது .
ஆஸ்திரேலியா வெளியேறியது , மற்ற அனைத்து அணிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கும் . அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கப்போகிறோம் . இந்திய அணி , இனி தனது இயல்பான ஆட்டத்தை தொடரும் என்று நம்புவோம் . உலகக்கோப்பையை மூன்று முறை தொடர்ந்து வென்ற அணியை நாம் வீழ்த்தியது உலககோப்பை வென்றதுக்குச் சமம் . இனி கோப்பையே வாங்கினாலும் அது வெறும் பேருக்காகத்தான் .
.................
.................
1 comments:
//உலகக்கோப்பையை மூன்று முறை தொடர்ந்து வென்ற அணியை நாம் வீழ்த்தியது உலககோப்பை வென்றதுக்குச் சமம் . இனி கோப்பையே வாங்கினாலும் அது வெறும் பேருக்காகத்தான்//---பலமிக்க ஆஸ்திரேலியாவை காலிறுதியிலேயே நசுக்கியது நிச்சயமாக சாதனை வெற்றிதான் சகோ.ஜெ.செல்வராஜ்.
இன்று ராய்னா கலக்கி இருக்கிறார். இவர்தான் 'கூலர் தேன் குகும்பர்' இன்று. கம்பீரிடம் கண்ட நிலநடுக்கத்தை சற்று நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
இதில்... முனாப் படேல் என்று ஒருத்தர் ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை. பவுளிங்கும் முழுதாய் பத்து ஓவர் போடுவதில்லை. பீல்டிங்கும் படு மோசம். பேட்டிங்க்னா என்னன்னே தெரியாது.
தோனியின் சமீபத்திய "ஜாகீர்கான்-அஸ்வின்" ஓபனிங் பவுலிங் காம்பினேஷன் அருமை. அதை அப்படியே செமி பைனலிலும் தொடரலாம்.
அப்படி தொடரும் பட்சத்தில், இந்த உதவாக்கரை முனாப் படேலுக்கு பதில், யூசுப் பதானை சேர்த்தால்...??? முனாபைவிட நல்ல பீல்டர், அதிரடி பேட்ஸ் மேன், அதேபோல ஆறு - ஏழு ஓவர் 'ஒப்பேத்த' (முனாபை விட இவர் அதிலும் சிறந்தவர்) என்று அனைத்திலும் முனாபைவிட இவர் மேலே அல்லவா...?
டீமில் முனாப் இருக்க காரணமே... நேஹ்ராவும், ஸ்ரிசாந்தும் முனாபைவிட படு மட்டம் என்பதால் மட்டுமே...
இனி பாகிஸ்தான் முன்னூறுக்கு மேலே அடித்தாலும் சேசிங் செய்ய ஆளிருக்கு என்ற தைரியத்தில் அடித்து தள்ளாலாம் அல்லவா...?
தோணி சிந்திக்கட்டும்.
Post a Comment