தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இரண்டு இலவசங்கள் தேவை . ஒன்று இலவச மருத்துவ வசதி , இன்னொன்று இலவச கல்வி வசதி . இரண்டுமே தற்பொழுது இலவசங்கள் என்ற போர்வையில் இருந்தாலும் உண்மையில் அவை இலவசமாக கிடைப்பதில்லை . பெரிய செலவு வைக்கும் எந்த அறுவை சிகிச்சையையும் நாம் இலவசமாக பெற முடியாது . தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் யாருமே பயன்பெறவில்லை என்று கூற முடியாது . மிக மிக குறைந்த அளவு மக்களே இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் . ஆனால் , இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் , மருத்துவமனைகளுக்கும் , காப்பீட்டு நிறுவனத்திற்கும் லாபம் , அரசுக்கு இழப்பு . இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்து எல்லா வசதிகளுடன் கூடிய குறைந்தபட்சம் ஓரே ஒரு மருத்துவமனையாவது கட்டி இருக்க முடியும் . ஆனால் , கட்டவில்லை .இதே நிலைமை தான் கல்விக்கும் . ஓரளவிற்குத் தரமான பள்ளிக்கல்வி இலவசமாக கிடைக்கிறது .ஆனால் , தரமான தொழிற்கல்வியையோ , மருத்துவ கல்வியையோ நாம் இலவசமாக பெற முடியாது .
இன்றைய சூழ்நிலையில் , எந்தக் குடும்பமாக இருந்தாலும் மருத்துவத்திற்க்காகவும் , கல்விக்காகவும் தான் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது . ஒரு பெரிய மருத்துவ செலவை எல்லாக் குடும்பமும் ஏதோ ஒரு காரணத்திற்காக செய்ய வேண்டியுள்ளது . அந்த மருத்துவ செலவு அந்தக் குடும்பத்தின் சேமிப்பை கரைத்து அவர்களை கடனாளி ஆக்குகிறது . அது போலத் தான் கல்வியும் , நல்ல கல்விக் கூடத்தில் இடம் கிடைக்கவும் , தொடர்ந்து படிக்க வைக்கவும் பெரும் தொகை தேவைப் படுகிறது .அவர்களை மீண்டும் கடனாளி ஆக்குகிறது . இந்தக் கடன்களில் இருந்து மீள பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது . கல்விக்கடன் திட்டம் ஓரளவிற்குப் பயன் தருகிறது , ஆனால் , ஒட்டுமொத்த தீர்வாக அத்திட்டம் அமையவில்லை .
நமது கல்வித் திட்டத்தையே ஓட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் . நாம் படிக்கும் பெரும்பான்மையான விசயங்கள் நம் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பயன் தருவதில்லை . அடிப்படை விசயங்களைத் தவிர்த்து மற்றவை நீக்கப்பட வேண்டும் . நம் கல்வி முறை , ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை மனப்பாடம் பண்ணும் திறமையை மட்டுமே வளர்க்கிறது . எவ்வளவு படித்தாலும் வேலைக்காக மற்றவர்களையும் , அரசையும் சார்ந்தே நாம் இருக்க வேண்டியுள்ளது .படித்த எல்லோருக்கும் அரசாலோ மற்றவர்களோ வேலை கொடுக்க முடியாது . சுய வேலை வாய்ப்பு தான் தீர்வு . நம் கல்வி முறை சுய வேலைவாய்ப்பை உருவாக்க முனைவதே இல்லை . அதனால் தான் நாடு முழுவதும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . சுய வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் நம் கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும் . செயல் வழிக் கற்றல் முறையும் , சமச்சீர்க் கல்வியும் பாராட்டுக்குரியவை . யார் ஆட்சிக்கு வந்தாலும் எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி முறையை அமல் படுத்த வேண்டும் .
நமக்கு வேண்டியதெல்லாம் இரண்டு தான் . ஒன்று , ஒவ்வொரு இந்தியனுக்கும் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஆகும் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் . தரமான மருத்துவ வசதி எல்லோருக்கும் ,எல்லா நேரங்களிலும் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும் .இன்னொன்று , இந்தியர்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி முதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வி வரை இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் . நம் தேசிய மொழியான இந்தி , ஆரம்பக்கல்வி முதல் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் , தமிழ்நாட்டிலும் தான் . தமிழ்நாட்டில் தமிழ் , இந்தி , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் .அதே நேரம் , தமிழ் மொழியை எந்தக் காரணத்திற்க்காகவும் ஒதுக்கக் கூடாது . இன்றைய சூழ்நிலையில் இவை எல்லாம் சாத்தியமா ! என்று கூட நினைக்கத் தோன்றும் . ஆனால் , சாத்தியம் தான் .
மருத்துவ வசதியும் , கல்வியும் இலவசமாக வேண்டும் !
மற்ற இலவசங்கள் எதுவும் வேண்டாம் !
மேலும் படிக்க :
சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !
திண்ணைப் பேச்சு வீரரிடம் !
மேலும் படிக்க :
சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !
திண்ணைப் பேச்சு வீரரிடம் !
................................................................................
2 comments:
ஏதோ நாலஞ்சு பேரு விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க,..இலவச மின்சாரத்தை புடிங்கிட்டோம்னா அவன் என்ன பண்ணுவான்??? இருக்கிறதை வித்துப்புட்டு சென்னை வந்து கூலியாளா உதயம் தியேட்டர் பக்கத்துல பிளாட்பாரத்துல படுகக வேண்டியதுதான்
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டும் விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் கொடுப்பதிற்குப் பதில் கட்டணம் வசூலித்துக்கொண்டு 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கலாமே .
Post a Comment