Thursday, October 31, 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு  நாளிதழிலோ, வார இதழிலோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஒரு துணுக்கு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அந்த துணுக்கின் கீழே " அறந்தை நாராயணன் எழுதிய 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ' எனும் நூலிலிருந்து " என்று போட்டிருந்தது. அன்றிலிருந்து தொடங்கிய தேடல் இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த துணுக்குச் செய்தியில் ஒரு வசீகரம் இருந்தது. எப்படியாவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தேடல் தொடங்கியது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் எனது முதல் வழிகாட்டி. என்னையறியாமலேயே எனக்குள் பொதுவுடமை கருத்துக்களை அவரது பாடல்கள் மூலம் விதைத்தவர். இந்த புத்தகத்திற்கான தேடலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய எவ்வளவோ புத்தகங்கள் கண்ணில்பட்டன, அவற்றில் பலவும் வாங்கப்பட்டன.ஆனால் எதுவும்...

Tuesday, October 29, 2019

நாமெல்லாம் கொலைகாரர்களே !

படம் - ரவி பேலட் வளர்ந்தவர்களை மலக்குழியில் தள்ளி கொல்கிறோம். வளராதவர்களை ஆழ்துளை கிணற்றில் தள்ளி கொல்கிறோம். எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் கடந்து போகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மலக்குழி மரணங்கள் இன்று வரை விவாதப் பொருளாக ஆனதேயில்லை. ஆழ்துளை கிணறு மரணங்கள் விவாதப் பொருளாக மாறுவதற்கு இரண்டு வயது பிஞ்சுவின் மரணம் தேவையாய் இருக்கிறது. இரண்டுக்குமே முறையான இயந்திரங்களோ, பாதுகாப்பு வசதிகளோ இல்லை. முதலில் இந்தியாவில் குழந்தைகள், குழந்தைகளாக நடத்தப்படுவதேயில்லை. குடும்பம், சமூகம், அரசு என மூன்றுமே குழந்தைகளின் மனநிலைகளையும், அவர்களைக் காத்து சரியாக வழி நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்ததேயில்லை. இன்றைய குழந்தைகள் தானே நாளைய எதிர்காலம் என்ற உணர்வு இந்திய நாட்டில் யாருக்கும் இல்லை. இந்தியாவில் கலை, இலக்கியம் கூட குழந்தைகளை...

Friday, October 4, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 10 !

இந்தியாவில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் அதிகமாக இருப்பதற்கு 'பாலியல் வறட்சி' தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. 'பாலியல் வறட்சி' மட்டுமே காரணமல்ல, 'பாலியல் வறட்சி'யும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. நாளுக்கு நாள் இந்திய சமூகம் அறிவியலை புறந்தள்ளுவது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு சில விசயங்களில் தொழிற்நுட்பங்களை மிக வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். மற்ற பல விசயங்களை அறிவியல் கண் கொண்டு பார்ப்பதும் இல்லை. எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதும் இல்லை. இந்த மனநிலையால் அதிகம் பயனடைவது மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் மத அடிப்படைவாதிகள் தான். மிகச் சாதாரண விசயங்களை கூட அறிவியல்படி பார்ப்பதில்லை. இதனாலேயே மற்ற நாடுகளைப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் இங்கே நிகழ்வது இல்லை. பாலியல் சார்ந்த விசயங்களையும்...

Monday, August 5, 2019

கஷ்மீர் மக்களை வாழ விடுங்கள் !

இந்தியா, ஒரு சிற்றரசுகளின் கூட்டமைப்பு என்பதை உணராத யாராலும் கஷ்மீர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியாது. கஷ்மீர் என்றால் தீவிரவாதம், தீவிரவாதிகள், வன்முறை, குண்டு வெடிப்பு, பாகிஸ்தான்,சீனா எல்லை பிரச்சனைகள் என்பதையே நம் தலையில் கட்டுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி இருக்கும் நிஜமான கஷ்மீரின் முகம் நம் கண்களுக்கு தெரிவதேயில்லை. நாம் தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை. கஷ்மீர் பெற்றிருக்கும் சிறப்பு அந்தஸ்தால் அந்த மாநிலத்திற்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அந்த சிறப்பு அந்தஸ்தை காரணம் காட்டி கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க மட்டுமே அந்த சிறப்பு அந்தஸ்து பயன்பட்டிருக்கிறது. உண்மையிலேயே அது சிறப்பு அந்தஸ்தாக இருந்திருக்குமானால் இந்திய அளவில் முதன்மையான மாநிலமாக கஷ்மீர் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கஷ்மீர் மற்ற இந்திய மாநிலங்களை...

Tuesday, July 16, 2019

யோகத்தால் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து !

இப்படியான ஒரு இறுதிப்போட்டி இனி நடைபெற வாய்ப்பில்லை எனச் சொல்லும் அளவிற்கு மிகவும் சுவாரசியமான, பரபரப்பான போட்டியாக 2019 உலககோப்பையின் இறுதிப்போட்டி அமைந்தது. ஆனால் போட்டியின் முடிவு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை. அரையிறுதிக்கான தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியிலேயே வெளியேற்றப்பட்டுவிட்டன. தகுதிச்சுற்றில் முதலிடத்திலிருந்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றதால் நான்காம் இடம் பிடித்து தட்டுத்தடுமாறி தான் நியூஸிலாந்து அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது. இங்கிலாந்து அணிக்கோ கடைசி இரண்டு முதல் சுற்று போட்டிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதியில் நுழைய முடியும் என்ற நிலைமை. அந்த கடைசி இரண்டு போட்டிகளும் இந்தியாவிற்கும், நியூஸிலாந்திற்கும் எதிரானதாக இருந்தது. இந்தியாவுடனான போட்டியில்...

Thursday, July 11, 2019

வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி !

பெரும் நம்பிக்கையை உருவாக்கிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்துவிட்டது. கோலியின் தவறான வியூகங்களே தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டது. தோனி அணித்தலைவராக இருந்த போது தோற்றாலும், வென்றாலும் பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றவே மாட்டார். இப்படி வீர்களை மாற்றாமலேயே விளையாடியது எல்லாப் போட்டிகளிலும் தோனிக்கு கைகொடுக்கவில்லை.இதனாலேயே தோனியின் அணித்தலைமை விமர்சிக்கப்பட்டது. கோலி பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். இந்த மனநிலை நிறைய போட்டிகளில் கைகொடுத்தாலும் பெரிய அளவிலான தொடர்களில் கோலிக்கு கைகொடுக்கவில்லை. சாகல் , குல்தீப் மற்றும் ராகுலை அளவிற்கு அதிகமாக கோலி நம்புகிறார். இவர்களை விட திறமையானவர்கள் வெளியே நிறைய இருக்கிறார்கள். அணியிலுள்ள மற்ற வீரர்களின் திறமையான ஆட்டத்தால் இவர்களின் குறைகள் வெளியே தெரியவில்லை....

Monday, June 24, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 9 !

"பெண்ணை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்  Touching a Woman without Her Consent is a Punishable Crime”இப்படியொரு Disclaimer-ஐ முதன் முறையாக 'தாதா 87' என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதலில் இந்த Disclaimer-ஐ சேர்க்க நினைத்ததற்கே படக்குழுவிற்கு நாம் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும். இப்படி ஒரு Disclaimer போடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை தான். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் மனித மனங்களில் ஒரு சிறு அழுத்தத்தை இது உருவாக்கவே செய்யும். பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவது சமூக நலனை பெருமளவு பாதிக்கிறது. இன்னொரு விதமான பார்வை இருப்பதையும் தவிர்க்க முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் இப்போது தான் அதிக அளவில் வெளியே தெரிய ஆரம்பிப்பதால் தான் பாலியல் சார்ந்த குற்றங்கள்...

Wednesday, May 1, 2019

தொழிற்சங்கங்கள் எங்கே?

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் (  https://clc.gov.in/clc/node/606 )கூட இன்னமும் தொழிலாளர்களுக்கு சென்றடையவில்லை. சமூகநீதி காக்கும் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழகத்தில் கூட இது தான் நிலைமை. 1990 வரை வலுவாக இயங்கி வந்த தொழிற்சங்கங்கள் அதன் பிறகு வலுவிழக்கத் தொடங்கி விட்டன. காரணம், 1990க்கு பிறகு தான் கார்பரேட் வணிகம் விரிவடைய ஆரம்பித்தது தான். கார்பரேட்களுக்காக தொழிலாளர் சட்டங்களும் திருத்தப்படுகின்றன, தொழிற்சங்கங்களும் அழிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் அரசு ஊழியர்களின் சங்கங்கள் மட்டுமே ஓரளவு வலுவுடன் இருக்கின்றன. அப்படி இருந்தும் கூட மத்திய,மாநில அரசுகளை தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற  நிர்பந்திக்க முடியவில்லை. இந்நிலையில் பெரும்பாலான தனியார் ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் இல்லை. ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களும்...

Monday, April 15, 2019

மோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள்!

" பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, சித்தாந்தவாதியாகவோ, இஸ்லாமிய, கிருத்துவராகவோ,சனாதன தர்மத்தால் ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை, மனிதநேயமிக்க ஒரு நல்ல மனிதராக இருப்பதே போதுமானது. " 'மூடர்கூடம்' திரைப்படத்தின் இயக்குநர், நவீன். நவீன் சொன்னது போல பாஜக அரசை எதிர்க்க நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டியதில்லை, சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். அந்த அளவிற்கு சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்கிய அரசு தான் தற்போதைய மோடி அரசு. இந்தியர்கள் கட்டிய வரிப்பணம் தவிர்த்து அனைத்து இந்தியர்களிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒரு ரூபாயையாவது முறையற்ற வகையில் திருடியிருக்கிறது இந்த அரசு. இந்திய அரசியல் அமைப்பின் அடைப்படையே சமத்துவமும், சுதந்திரமும்...

Monday, April 8, 2019

இடதுசாரியும் வலதுசாரியும் !

அரசியல் நிலைப்பாட்டில் இரண்டே பிரிவுகள் தான். ஒன்று இடதுசாரி அரசியல், மற்றொன்று வலதுசாரி அரசியல். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் அவற்றை இந்த இரண்டே பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். சமத்துவத்தை வலியுறுத்துவது இடதுசாரி அரசியல், சமத்துவத்திற்கு எதிரானது வலதுசாரி அரசியல். மக்கள் நலனை முன்வைத்து அரசியல் செய்வது இடதுசாரி அரசியல். இனம், மதம், மொழி,சாதி போன்ற பிரிவினைவாதத்தை முன்வைத்து அரசியல் செய்வது வலதுசாரி அரசியல். வலதுசாரி அரசியலில் அதிகாரம் ஒரே இடத்தில் குவியும். இடதுசாரி அரசியலில் அதிகாரம் பரவலாக்கப்படும். இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிச இயக்கங்களை மட்டுமே குறிக்காது. எல்லோரையும் சமமாக நடத்தும் எல்லா அரசியல் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்கள் தான். ஆனால் இந்த இடதுசாரி இயக்கங்கள் கம்யூனிச இயக்கங்களைப் போல தீவிரமாக இடதுசாரி...

Saturday, March 16, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் -8 !

பாலியல் ஒழுக்கம் என்பதை வரையறை செய்யவே முடியாது. அது இடத்துக்கு இடம் மாறுபடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. காலத்துக்கு ஏற்பவும் பாலியல் ஒழுக்கம் என்பதில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் கூட போன தலைமுறைக்கு முன்பு வரை பல தார மணங்களை இதே சமூகம் அனுமதித்து இருக்கிறது. இப்போதும் ஒரு சில சமூகங்களில் பல தார மணத்திற்கு தடையில்லை. முன்பு, இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த மனிதரின் மரியாதை குறையவில்லை . அந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டு ஆண்களோடு திருமண பந்தத்தில் வாழவில்லையா , இருவருக்கும் பிள்ளைகள் பெற வில்லையா ? என்றால் வாழ்ந்தார்கள், பிள்ளைகள் பெற்றார்கள். ஆனால் முதல் பந்தத்தை உதறிவிட்டு தான் அதை செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு....

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms