
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நம் பொருளாதரத்தை வணிகமயமாக மாற்றியதன் விளைவு தான் இது . வழக்கமான உணவுப் பொருட்களை பயிரிட்டு வந்த விவசாயிகளை, பணப்பயிர்களை பயிரிட அரசு ஊக்குவித்தது. வழக்கமான பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, அந்த விளைபொருட்கள் விற்காவிட்டாலும், அந்த உணவு தானியங்களை வைத்து பட்டினியை தவிர்க்க முடிந்தது. ஆனால், பருத்தி ,மக்காச்சோளம் ,சூரியகாந்தி போன்ற பணப்பயிர்களை பயிரிட்டு, உரிய விலை கிடைக்காத விவசாயிகள், கடும் வறுமையில் சிக்கி, தற்கொலையை நோக்கி தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
வனத்தை தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்துகிறார்கள் . எதற்காக என்றால் அங்கு இருக்கும் கனிம வளத்தைத் தோண்டி எடுக்க . இயற்கை...