Saturday, December 17, 2016

தொடுதிரை வாழ்வும் சமூக ஊடகங்களும் !

நமது இந்த தொடுதிரை வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெருகின்றன.முந்தைய அறிவியல் கண்டுபிடிப்புகளை விட மிக விரைவாக பெருவாரியான மக்களை சென்று சேர்ந்திருப்பது தொடுதிரை கைப்பேசி. தலைகுனிந்து வாழ்ந்த மனித இனம் தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததை பெரிய சாதனை என்று சொன்னார்கள். ஆனால், அந்த  பரிணாம வளர்ச்சி திரும்பி நடப்பது போல எல்லோரும் திரையைப் பார்த்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறோம், நடக்கிறோம், மற்ற வேலைகளையும் செய்கிறோம். “நான் இதுவரை எதற்கும் தலை குனிந்ததில்லை” என்ற மனித இனத்தின் பெருமையெல்லாம் காற்றில் பறக்கிறது. அடுத்த தலைமுறை பிறக்கும் போதே கூன் விழுந்தே பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.         கைப்பேசியே ஆச்சரியம் ஏற்படுத்திய சூழலில் தொடக்க காலத்தில் தொடுதிரை கைப்பேசிகள் கவனம் ஈர்க்கவில்லை....

Saturday, November 26, 2016

ஐநூறும் ஆயிரமும் !

இந்தியர்களுக்கு கடந்த இரண்டு வார காலமாக  வட்டச் செய்தி , மாவட்டச் செய்தி , தேசிய செய்தி , உலக செய்தி, இணையச் செய்தி என எல்லாமே 500 ,1000 மட்டும் தான். டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது கூட பத்தோடு பதினொன்னாவது செய்தியாகக் கூட அறியப்படவில்லை. இந்த 500ம் , 1000மும் செல்லாது என அறிவித்த உடனேயே பயமும் குற்ற உணர்ச்சியும் நம்மை தொற்றிக் கொண்டன. நாம் உழைத்துச் சம்பாதித்த பணமாக இருந்தாலும் மிகுந்த தயக்கத்துடனே வெளியே எடுக்கிறோம். பெரு நகரங்களை விட சிறு நகரங்களில் 500 ,1000 ஓரளவிற்கு எல்லா இடங்களிலும் வாங்கப்படுகிறது. வேறு வழியில்லை . 100 ரூபாய் தாள்கள் கிடைப்பது தான் கடினமாக இருக்கிறது.  மக்கள் இன்னமும் இன்னல்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பணத்தை மாற்றும் பணியில் சரியான திட்டமிடல் இல்லாததால்...

Saturday, October 29, 2016

வா வா வசந்தமே !

1982 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது .தீபாவளி பண்டிகையை நினைவு படுத்தும் இப்பாடலை அற்புதமாகப் பாடியிருப்பவர் ,மலேசியா வாசுதேவன். வைரமுத்து எழுதிய இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் . மலேசியா வாசுதேவன் பாடிய சிறந்த மெல்லிசைப்பு பாடல்களில் இதுவும் உண்டு . மென் சோகம் கலந்திருக்கும் இப்பாடலை ஜீவனுடன் பாடியிருக்கிறார் , வாசுதேவன்.  அந்தப்பாடல் : பாடல் வரிகள் : வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திரு விழா என்னோடு ஆனந்தம் பாட வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ சோகம் போகும் உன் கண்கள் போதும் சின்ன பாதம்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms