நாம் வாழும் பூமி மிகப்பெரிய அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி அழகாகச் சுற்றி வருகின்றது. கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த பூமி எங்கும் வாழ்ந்து வருகின்றன. இயற்கை எனும் சக்தி இந்த உலகத்தையே ஒன்றிணைகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் அனைத்து விதமான உயிரினங்களின் வாழ்க்கையிலும் பங்குபெறுகின்றன.
நம் கண்ணால் பார்க்கமுடியாத உயிரினங்கள் கோடிக்கணக்கில் இந்த உலகத்தில் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் மட்டும் இல்லாவிட்டால் இந்த பூமியே ஒரு குப்பைமேடாகதான் இருக்கும். அழுகிப்போன, இறந்துபோன உடல்கள் ஆகியவற்றை மட்கச் செய்வதிலிருந்து , பாலை தயிர் ஆக மாற்றுவது வரை இந்தக் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இந்த பூமிக்கு ஆற்றும் பங்கு மிகப்பெரியது. இந்த உயிரினங்களால் ஒரு சில கெடுதல்களும் உண்டு. தாவரங்களிலும் , விலங்குகளிலும் பல்வேறுவிதமான நோய்களை பரப்புகின்றன. ஆனாலும் இவை செய்யும் நன்மைகள் அதிகம் .
மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் , மின்சார கழிவு பொருட்களால்தான் உலகம் அதிகம் மாசுபட்டுள்ளது . இந்த கழிவுகளால் இயற்கை சமநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது . அதனால்தான் இன்று பருவ காலங்களும் , காலநிலைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சீர்கேடுகள் அனைத்திற்கும் மனிதன் மட்டுமே காரணம்.

இந்த உலகமே அற்புதமான நிகழ்வுகளை உள்ளடக்கியது . ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களைச் சார்ந்துதான் வாழமுடியும் . மனிதனாகிய நாம் சக மனிதனை மனிதனாக மதிப்பதுடன் , மற்ற உயிரினங்களையும் மதிக்க வேண்டும். இந்தப் பூமி எல்லோருக்கும் சொந்தம். பூமியைக் காப்பது நம் கடமை . பூமியின் எதிர்காலம் நம் கையில் தான் உள்ளது . ஆனால் , நம் எதிர்காலம் பூமியின் கையில் உள்ளது .
பூமி எல்லோருக்கும் சொந்தம் ..!
உயிரை உயிராய் மதிப்போம்...!
.......................................
.......................................