Saturday, May 7, 2011

செங்கொன்றை மலர் - Mayflower

மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த அழகிய மனதை கொள்ளைகொள்ளும்  மரத்தை பார்க்காமல் உங்களால் இருக்கவே முடியாது . இந்த மரம் நம் நாட்டின் பெருவாரியான இடங்களில் காணப்படுகிறது . நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் கொஞ்ச நேரம் நின்று ரசிக்க வேண்டியது தான் .



இந்த மலர்   செம்மயிற்கொன்றை என்றும் அழைக்கப்படுகிறது . இதன் அறிவியல் பெயர் - Delonix regia . வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இவ்வளவு அடர்ந்த ஆரஞ்சு கலந்த  சிவப்பு நிறத்தை நாம் வேறு இடங்களில் காண்பது அரிது . பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல உள்ளது . இயற்கையின் படைப்பே தனி தான் .

மே மாதங்களில் மட்டும்  அதிகம் பூப்பதால் இந்த மரத்திற்கு Mayflower Tree என்ற பெயர் வந்தது . இந்த அழகிய மே மாதத்தில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திச்  செங்கொன்றை மலர்களை மட்டுமல்ல வாழ்க்கையையும் ரசியுங்கள் .
இயற்கையைக் கொண்டாடுங்கள் !
.......................................

2 comments:

துளசி கோபால் said...

இந்தப்பூவை குல்மொஹர் (Gulmohar) ன்னு ஹிந்தியில் சொல்றாங்க. இதுலேGul என்றால் மலர் mohar என்றால் மயில் என்று பொருள். அப்போ மயில்கொன்றைபூ என்பதும் இதுதான் போல.

மலர்கள் பூக்கும் சீசனில் தீ பிடிச்சமாதிரி இருக்குன்னுட்டு இதுக்கு ஃபயர் ஆஃப் த ஃபாரெஸ்ட்ன்னும் ஒரு பெயர் இருக்கு.

இப்போ நான் இருக்கும் இந்த ஊரில் எங்கே பார்த்தாலும் தீ!!!!! Gகொல்லுன்னு பூத்துக்கிடக்கு:-))))

பொன் மாலை பொழுது said...

சென்னையில் நிறைய இடங்களில் இந்த மரங்கள் பூத்து குலுங்குவதை தற்போது காணலாம்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms