Wednesday, December 7, 2011

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

பூமியை அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் ( மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும் அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து ,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எதிரி நாடு உள்ளது . நான் இந்த நாட்டுக்காரன் ,நான் அந்த நாட்டுக்காரன் என்று ஓயாத பெருமை வேறு . நாட்டுக்காரன் பெருமையெல்லாம் மாநிலம் என்று வரும்போது உடைந்து விடுகிறது . நான் இந்த மாநிலத்துக்காரன் , நான் இந்த மாவட்டத்துக்காரன் ,நான் இந்த ஊர்க்காரன் , நான் இந்த தெருக்காரன் ,நான் இந்த குடும்பத்துக்காரன் என்று பெருமை பேசி சதா சண்டைக்கு போவது தான் நம் வேலையா ?

இவற்றையெல்லாம் விட பெரிய பிரிவினைகள் இனம் ,மதம் ,மொழி ,ஜாதி ,கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் . இனம் இனம் என்று மேடையில் பேசுவார்கள் ,இறங்கி வந்ததும் ஜாதி பற்றியும் , கட்சி பற்றியும் மட்டுமே சிந்தனை செய்வார்கள் . மனிதர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் செய்வதே இந்த பிரிவினைகளின் நோக்கம் . உரக்க உரக்க பேசியே நம்மை  இந்தப் பிரிவினைகளின் ( நம் இனம் ,நம் மொழி ,நம் ஜாதி ,நம் கட்சி )கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள் .

நம்மைச் சுயநலவாதிகளாக மாற்றுவது தான் இந்த பிரிவினைவாதிகளின் நோக்கம் . அப்போதுதான் நம்மை வைத்து அவர்கள் குளிர்காய முடியும் . இவை எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் மட்டுமே இருக்கிறது . எல்லாப் பிரிவினைகளிலும் அரசியல் கலப்பதால் தான் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது . அரசியல் கலக்காதவரை பிரிவினைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை .

ஒரு சில வளர்ந்த நாடுகள் ,வளராத நாடுகளுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி ஆயுதங்களை விற்கின்றன . ஆயுதங்கள் விற்பனையை மட்டும் தடை செய்துவிட்டால் ஒரு சில வளர்ந்த நாடுகள் ஒரே நாளில் வளரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும் .

மாநிலங்களைப் பொருத்தவரை  எல்லா மாநிலங்களும் கண்டிப்பாக ஒற்றுமையுடன் இருக்கக் கூடாது என்பதுதான் நாட்டை ஆட்சி செய்பவர்களின் நோக்கம் . ஒரு வேளை எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் , நாட்டை ஆளும் அரசு மற்றவர்கள் மீது அதிகாரம் பண்ண முடியாது ,ஊழல் பண்ண முடியாது ,மாநில ஆட்சியைக் கைப்பற்ற முடியாது ,நம்மை வெளிநாடுகளுக்கு விலை பேசி விற்கமுடியாது . அதனால் மாநிலங்களுக்கிடையே  பிரிவினைகள் அவசியம் என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது .ஏமாளிகள் நாம் மட்டுமே .

மற்ற பிரிவினைகளை விட கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் நாளுக்குநாள் அதிகமாகிறது . தான் பின்பற்றும் அரசியல் கட்சி எவ்வளவு அட்டூழியங்கள் செய்தாலும் வீம்புக்கென்று அந்த அரசியல் கட்சியை தொடர்ந்து ஆதரிப்பது முட்டாள்தனமல்லவா . இந்த முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துதான் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூச்சமே இல்லாமல் தொடர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள்  . கட்சியையும் ,கட்சித் தலைவரையும் தொடர்ந்து கொண்டாடும் வரை நமக்கு எந்த நல்லதும் நடக்காது .

இனம் , மொழி, மதம், ஜாதி சார்ந்த பிரிவினைகளை வளரவிடக்கூடாது . இவற்றை வைத்துதான் அரசியலே நடக்கிறது .நாம் , பிரிவினைவாதக் கூண்டுக்குள் இருந்து வெளியே வராதவாறு கவனமாக பார்த்துக் கொள்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை . எல்லோரும் மனிதர்கள் தான் , இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் தாவர ,விலங்குகளைப் போல   சாதாரண உயிரினங்கள் தான் என்ற எண்ணம் வளராதவரை நமக்கு வளர்ச்சி என்பதே கிடையாது .

நாமெல்லாம் இயற்கையின் குழந்தைகள் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் ! 
 .................................................................................................................................

2 comments:

PUTHIYATHENRAL said...

* “உச்சிதனை முகர்ந்தால்”.! இருப்பாய் தமிழா நெருப்பா... நீ! இழிவாய் கிடக்க செருப்பா... நீ!

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம்.

ஓசூர் ராஜன் said...

மனிதர்களிடம் மனிதநேயம், வள்ளலார் சொன்ன உயிர்களிடத்து அன்பு கொள்ளல், இல்லாத வரை ஒற்றுமை என்பது,சாத்தியமில்லை! நல்ல நோக்கம் கொண்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms