Wednesday, April 27, 2011

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!


சொற்கள் வலிமை மிக்கவை என காலம் நமக்கு உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறது. வரலாறு முழுக்க நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அத்தகைய வலிமையான சொற்களுக்குச் சொந்தக்காரர்தான் பட்டுக்கோட்டையார். அவரது சொற்கள், காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை பெற்றவை என உணர முடியும். எனது தேடல்களின் தொடக்கப்புள்ளி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். எதுவுமே தெரியாத பால்ய காலங்களில் பொதுவுடைமை கருத்துகளையும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும் எனக்கே தெரியாமல் எனக்குள் விதைத்தவை பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்தான்.


"கிழவனாட்டம் என்றைக்கோ வந்த பாடல்களை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிற " என்ற கேள்வியை இருபது வருடங்களாக எதிர்கொள்கிறேன். பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் 190க்குள்தான் இருக்கும். ஆனால் இன்றுவரை கொண்டாப்படுகிறார்.இனிமேலும் கொண்டாடப்படுவார். காரணம் அவர் மக்களுக்கான பாடல்களை எழுதியதுதான். ஆரம்ப காலங்களில் இருந்தே கம்யூனிச இயக்க மேடைகளில், கம்யூனிச இதழ்களில் இவரது பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. இதனாலேயே இடதுசாரி கருத்துகள் இவரது திரைப்பாடல்களில் நிரம்பியிருந்தன. இடதுசாரி கருத்துகளாக இருந்தாலும் மக்களும் ரசிக்கும் வகையில் கொடுத்ததுதான் பட்டுக்கோட்டையாரின் தனித்தன்மை.


தனது 29வது வயதில் மரணமடைந்த ஒருவரால் எப்படி இவ்வளவு தத்துவார்த்தமாக பாடல்களை எழுத முடிந்தது என்றால் அவர் பார்த்த பல்வேறு விதமான வேலைகளும், அவற்றின் மூலம் கிடைத்த வெவ்வேறு விதமான அனுபவங்களும்தான் காரணமாக இருக்கக்கூடும். 29 வயதிற்குள்ளாகவே 17 விதமான வேலைகளைப் பார்த்திருக்கிறார். அதில் ஒன்றுதான் பாடலாசிரியர் வேலை. தனது பாடல்களுக்கான கருப்பொருளை அவர் கற்பனையிலிருந்து எடுக்கவில்லை. நேரடியாக வாழ்க்கையிலிருந்து எடுத்து எழுதினார். அதனாலேயே அவரது பாடல்களில் யதார்த்தவாதம் மிகுதியாக இருக்கும். 'இரும்புத்திரை' திரைப்படத்தில் இடம்பெற்ற " கையில வாங்கினேன் பையில போடலே.. காசு போன இடம் தெரியலே.." என்ற பாடல் இன்றைக்கும் நமது வாழ்க்கையை பிரதிபளிக்கிறது. 

1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்தப்படத்தில் MGR , வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர் . " மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி " இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும் . இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார் . அதில் ஒன்று தான் இந்தப்பாடல் . இந்தப்பாடல் எழுதப்பட்டு 53 வருடங்களுக்கு மேல் ஆனாலும் , இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் . 

அந்தப்பாடல் : 
                              திரைப்படத்தில்  - http://www.pattukkottaiyar.com/site/?p=199
                                                            

                               
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா , 
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா 
எவ்வளவு வலிமையான வரிகள் .  பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை தான் .
ஈடு இணையில்லாத அந்த உன்னத கவிஞரைக் கொண்டாடுவோம் . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள - http://www.pattukkottaiyar.com/site/...

முழுப் பாடல் வரிகள்:

( சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா ) - இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை .

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

நன்றி - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இணையதளம் .
...........................

மேலும் படிக்க :



9 comments:

Speed Master said...

அருமையான வரிகள்

தமிழின் சிறப்பு அழகு அழகு

Kannapiran C. Arjunan said...

Kalathaal aliyathu tamilukkum perumai tamilarkkum perumai thanthar tharukirar thanthukondae irruppar pattukottyar...

Kannapiran C. Arjunan said...

Kalathal alikkamudiyatha. Kalan thidavum muduyathu

மானிடன் said...

👍

மானிடன் said...

👍

மானிடன் said...

👍

Anonymous said...

இந்தப் பாடலை நன்கு உணர்ந்தால் இந்த நாட்டை நயவஞ்ஜனைச் செய்து மக்களை ஏமாற்றும் திருடர்களிடமிருந்து

Anonymous said...

பிறவிக் கலைஞன்

Anonymous said...

Unmaiyana varikal

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms