Sunday, July 26, 2026

வெற்றி வாகை சூடியது ஸ்பெயின் கால்பந்து அணி !

 


அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு சென்றதையே உலகக்கோப்பை வென்றது போல கொண்டாடிவிட்டார்ள், உலக அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள். தொடர்ந்து எகிப்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பின்னடைவிலிருந்து மீண்டு வெற்றி பெற்றது, அவர்களை பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தது. 


மற்றொரு புறம் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட பிரான்ஸ் அணியை எளிதாக வென்று இறுதியில் நுழைந்திருந்தது, ஸ்பெயின் அணி. அர்ஜென்டினா அணி மெஸ்ஸியை சுற்றியே விளையாடியது பலமாகவும் இருந்தது, பலவீனமாகவும் இருந்தது. இறுநிப் போட்டியில் அர்ஜென்டினா என்ன திட்டத்துடன் விளையாடியது என்று சுத்தமாக விளங்கவில்லை. தற்காப்பு ஆட்டம் முழுதாக பயனளிக்கவில்லை. பாதி களத்திலெயே சுருங்கிப்போனது , அர்ஜென்டினா.


ஸ்பெயின் விளையாடியது மிகவும் நேர்த்தியான மட்டும் கட்டுக்கோப்பான ஆட்டம். அதனாலேயே வெற்றி பெற்றது. தொடர்ந்து அர்ஜென்டினாவின் கோல் கீப்பர் மார்டினஸ், கோலாக மாறக் கூடிய பந்துகளை தீவிரமாக தடுத்துக்கொண்டே இருந்தாலும் தொடர்ந்து பந்தை பாக்ஸிற்குள் அனுப்பிக் கொண்டே இருந்தது ஸ்பெயின் அணி. எந்நேரத்திலும் கோல் விழலாம் என்ற சூழலே நிலவியது. இறுதியில் அது தான் நடந்தது. அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் கால்களுக்கு வரும் பந்தை எளிதாக பாஸ் செய்யக்கூட ஸ்பெயின் விரர்கள் விடவில்லை. அவரிடமிருந்து பந்தைப் பறிக்கவே முயற்சி செய்தனர். அதே நேரம் ஸ்பெயின் கோல்கீப்பர் அருகில் கூட அர்ஜென்டினா வீரர்கள் செல்லவில்லை. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் மட்டும் இரண்டு மூன்று முறை அவரை நெருங்கினர். அணியின் வயதும் ஒரு காரணம் என விளங்கியது.


ஸ்பெயின், போட்டி முழுக்கவே பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. தொடர்ந்து மிக எளிதாக பந்தை அர்ஜென்டினா அணி வீரர்களிடமிருந்து கால்பற்றியது. மெஸ்ஸி மட்டுமல்ல மற்ற யாரின் கால்களுக்கும் பந்து செல்லவில்லை. தாக்குதல் பாணி ஆட்டத்தில் சிறந்த அணியான அர்ஜென்டினா ஆட்டத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் தாக்குதல் பாணி ஆட்டத்தை கையில் எடுத்திருந்தால் கூட நிச்சயம் வென்றிருக்கும், தடுப்பாட்டத்தால் தோற்றிருக்கிறது. ஸ்பெயின் அளவிற்கு அர்ஜென்டினா கோல் வாய்ப்புகளை பெற்றிருந்தால் நிச்சயம் நாலைந்து கோல்கள் போட்டிருக்கும்.


மொத்தத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி கோப்பையை வென்றிருக்கிறது. அர்ஜென்டினா இன்னும் கொஞ்சம் தீவிரமாக விளையாடியிருந்தால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். இந்தத் தொடரில் சுவாரசியமான சுற்று Round 32 தான். சின்ன அணியோ, பெரிய அணியோ யார் வெல்வார்கள் என்று கணிக்க முடியாமலேயே இருந்தது. ஆட்ட இறுதி வரை ஒரு பரபரப்பு இருந்தது. அந்த பரபரப்பு அதன் பிறகு நடந்த போட்டிகளில் இல்லை.


கேபோ வெர்டே அணி தான் இந்த உலகக்கோப்பையை பார்க்க காரணம். அர்ஜென்டினா அணிக்கு எதிராக கேபோ வெர்டே அடித்த ( Sidny Lopes Cabral )இரண்டாவது கோல் தான் இந்தத் தொடரின் சிறந்த கோல். 


வாழ்த்துகள் கேபோ வெர்டே !

வாழ்த்துகள் ஸ்பெயின் !


மேலும் படிக்க :

கேபோ வெர்டேவிற்கு அன்பும் நன்றியும் !

இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா !


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms