முதல் பகுதி போல இரண்டாம் பகுதியும் அருமை. முதல் 3 அத்தியாயங்கள் விருவிருப்பாக செல்கின்றன. மற்றவை மெதுவாக நகர்ந்தாலும் ஆர்வம் குறையவில்லை. உலகின் மிக முக்கியமான நாவலை, மிக கவனமாக, நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நாவலை இன்னும் வாசிக்கவில்லை. வாசித்தவர்கள், இந்தத் தொடரில் இருக்கும் குறைகள் மற்றும் போதாமைகளை தெரிவிக்கலாம்.
இசை மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. இசை ஒரு உலகலாவிய மொழி என்பது உண்மை தான். லத்தின் அமெரிக்க இசையை தேடிக் கேட்கும் ஆர்வத்தை இந்தத் தொடர் உருவாக்கி இருக்கிறது. நிறைய இடங்களில் இசை அற்புதமாக இருந்தது. ஒளிப்பதிவும் சிறப்பு. அந்த கதைக் களத்தை அப்படியே திரையில் காண்பிக்க நிறையவே உழைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 25 இறுதி பகுதி வருவதற்கு முன் மீண்டும் இந்தத் தொடரை பகுதி ஒன்றிலிருந்து பார்க்க வேண்டும்.
அழகியல் மட்டுமே கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போது கலையாகிறது. அரசியல் , திரை முழுவதும் இருக்கிறது. வளர்ச்சி என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒன்று உள்ளே நுழைந்தவுடன் நாம் எவ்வளவு விசயங்களை இழக்கிறோம் என்பதை தெளிவாக விளக்குகிறது. வளர்ச்சியால் நாம் பெறுவதை விட இழப்பது அதிகம். குறிப்பாக அடிப்படை மனித உணர்வுகள். வளர்ச்சியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மனித மனங்கள் சுருங்கிக் கொண்டே வருவதை நிகழ்காலத்திலும் காணலாம்.
அதிகாரம் யார் கையில் இருக்கிறது, அது எந்த எல்லை வரை செல்கிறது என்பதை இந்த One Hundred Years of Solitude மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது. ஒரு இயற்கையோடு இணைந்து வாழும் இனக்குழுவில் நுழையும் அரசு என்ற அமைப்பும், மதம் என்ற அமைப்பும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் இதில் காணலாம்.
இந்த கதைக்களம் அப்படியே இந்தியா போன்ற நாடுகளுக்கும் அப்படியே பொருந்துகிறது. மிகப்பெரிய அளவிலான குழு இந்தப் படைப்பை உருவாக்கி இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉
கொலம்பிய எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (Gabriel García Márquez)- ன் மாய யதார்த்த (Magical Realism) படைப்பான இந்த One Hundred Years of Solitude ( தனிமையின் நூறு ஆண்டுகள் ) ஒரு முக்கியமான படைப்பு. இந்த நாவலை வாசிக்க வேண்டும். முடிந்தவரை இந்த தொடரையாவது ஒரு முறை பார்க்க வேண்டும்.
This is a true form of Art ♥️
மேலும் படிக்க :
ONE HUNDRED YEARS OF SOLITUDE - FANTASTIC EXPERIENCE ❤️


1:13:00 PM
மானிடன்



0 comments:
Post a Comment