ஊடகங்கள் அரசின் கைப்பிள்ளையாகவே செயல்படுகிறது . அரசிற்கு சாதகமான
விசயங்களில் மட்டுமே அநேக ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன . ஜனநாயகத்தின்
நான்காவது தூண் என்பதெல்லாம் சும்மா . எந்த முக்கியத்துவம் வாய்ந்த
விசயத்தையும் மக்களை எளிதில் மறக்கச் செய்யும் வேலையை ஊடகங்கள் சரியாகச்
செய்கின்றன .ஒரு பத்து நாளைக்கு தொழில் செய்ய
ஊடகங்களுக்கு எதாவது விசயம் தேவை அவ்வளவு தான் .
அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டதை வைத்து நிறைய பேர் விளம்பரம் தேடிக்கொண்டனர் .சேர்க்கை நேரம் என்பதால் அவர் படித்த கல்லூரி அவரது பழைய புகைப்படங்களை தேடி எடுத்து செய்திதாள்களில் தினமும் பிரசுரித்தது . விகடன் எங்களது பழைய மாணவ பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டது . பேஸ்புக்கில் இருப்பவர்கள் எனது நண்பனின் நண்பன் ,அலெக்ஸ் பால் மேனன் என்றனர் . இவ்வாறு அவரை வைத்து நிறைய பேர் புகழ் அடைந்தனர் . அலெக்ஸ் பால் மேனன் குறித்து இவ்வளவு செய்திகளை சேகரித்தவர்கள் , அவரை காப்பதற்காக உயிரிழந்த பாதுகாவலர்கள் பற்றி இவ்வளவு செய்திகளை ஏன் சேகரிக்கவில்லை ?
இங்கு நாம் கவனிக்க வேண்டியது , ஒரு மாவட்ட ஆட்சியர் அதாவது ஒரு உயர் அரசு அதிகாரி கடத்தப்பட்டுள்ளார் .அலெக்ஸ் பால் மேனன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் கடத்தப்பட்டு தான் இருப்பார்கள் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் அலெக்ஸ் பால் மேனன் அவர்களைக் கடத்துவது அல்ல . அவர்களின் நோக்கம் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்துவது .ஏன் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்த வேண்டும் ? தொடர்ந்து அரசு அதிகாரிகளும் , சுற்றுலாப் பயணிகளும் கடத்தப்படுவதற்கு என்ன காரணம் ? மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடாமல் ஒட்டு மொத்த ஊடகங்களும் மையம் கொண்ட ஒரு புள்ளி " அலெக்ஸ் பால் மேனன் " . அலெக்ஸ் பால் மேனன் பற்றிய தகவல்களைப் பரப்பவே நேரம் எடுத்துக்கொண்டனர் . அவரை வைத்து 12 நாட்களுக்கு தொழில் செய்தனர் அவ்வளவுதான் .
அரசியல் தொழில் செய்பவர்களின் அத்துமீறல்கள் தான் அனைத்திற்கும் காரணம் . இயற்கையைப் பற்றியோ , பல நூற்றாண்டுகளாக இயற்கையை நம்பி வாழும் மக்களைப் பற்றியோ எந்த புரிதலும் , கவலையும் இல்லாமல் நாடெங்கும் பரவியிருக்கும் கனிம வளங்களை பணம் பண்ணுபவர்களுக்கு பிடுங்கி கொடுக்கும் வேலையை மிகத் தெளிவாக செய்து வருகின்றனர் , அரசியல் தொழில் செய்பவர்கள் . அதனால் , இரு வகையான இனங்கள் பாதிக்கப்படுகின்றன . ஒன்று கேள்வி கேட்கத் தெரியாத விலங்கினம் ( வன விலங்குகள் மற்றும் உயிரினங்கள் ) , மற்றொன்று கேள்வி கேட்கத் தெரிந்த விலங்கினம் ( மனிதர்கள் ).
புலி ,சிறுத்தை , யானை ,காட்டெருமை போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு காரணம் , நாம் மட்டுமே . காடுகளின் பரப்பளவு குறைவதால் தான் அவை ஊருக்குள் வருகின்றன . தமிழ்நாட்டில், வால்பாறைப் பகுதியில் அவ்வப்போது சிறுத்தையோ ,யானையோ வருவதற்கு காரணம் , மலையின் உச்சிப் பகுதியில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு தேயிலை எஸ்டேட்களாக மாற்றப்படுவது தான் .நாம் சிறுத்தைகளின் இடத்தைப் பிடிக்கும் போது சிறுத்தை நம் இடத்தை நோக்கி வர உந்தப்படுகிறது .சிறுத்தைகளைக் குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை . இந்த பூமியில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை சிறுத்தைக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு . பூமி எல்லோருக்கும் சொந்தம் .
கேள்வி கேட்கும் விலங்குகளாக பழங்குடியின மக்கள் , மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் . அவர்களுக்கான நீதி மறுக்கப்படும் போது ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள் . ஆயுதம் என்றவுடன் 5000 மையில் தூரம் அணுகுண்டுகளைக் தூக்கி சென்று தாக்கும் அக்னி-5 என்று நினைத்துக்கொள்ளக் கூடாது . வருகிற வருவாயில் அதிக பணத்தை ராணுவத்திற்காக செலவழித்த பிறகும் ஆயுதம் போதவில்லை என்று சொல்லும் இந்திய அரசையும் நீங்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மக்களின் உதவியுடன் மக்களுக்காகவே போராடுகின்றனர் , அவர்களின் போராடும் முறை தான் தவறு .
நாட்டில் வாழும் உரிமை உள்ளவர்கள் ( பொதுமக்கள் ) தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சாலை மறியலோ ,உண்ணாவிரதமோ செய்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் . உரிமை மறுக்கப்பட்டவர்கள் ( மாவோயிஸ்ட்டுகள் ) அரசு அதிகாரிகளைக் கடத்தி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இயந்திரத்தைத் தூண்டுகின்றனர் . கடந்த நான்கு மாதங்களில் நிறைய அரசு அதிகாரிகள் நாடெங்கிலும் கடத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர் , யாரும் கொல்லப்படவில்லை , கடத்தலை தடுத்தவர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் . யாரையும் கொல்வது குற்றம் தான் . ஆனால் ,மக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் அரசின் முதல் அடியே கொலை தான் .அந்த கொலைக்கு பெயர் " என்கவுன்டர் " ," பசுமை வேட்டை " . அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கிலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் எண்ணிக்கை ஏராளம் . சொந்த மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று தான் போல . தங்களை யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது என்று தான் உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கம் நினைக்கிறது .இதில் சீனா , இலங்கை , அமெரிக்கா ,இந்தியா என்ற பேதமெல்லாம் இல்லை . இந்த விசயத்தில் எல்லா நாடுகளும் ஒன்று தான் .
அரசிடம் நேர்மை என்பதே இல்லை . ஏனெனில் அதன் அங்கத்தினருக்கு நேர்மை என்பது அவசியமில்லை . வெட்கமே இல்லாமல் எப்படியெல்லாம் மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தாமல் சுகபோகமாக வாழலாம் என்பது மட்டுமே முக்கியம் . மற்றதெல்லாம் அவசியமில்லை . மாவோயிஸ்ட்டுகளிடம் நேர்மை இருக்கிறது ,வீரப்பனிடமும் நேர்மை இருந்தது . வீரப்பன் இருக்கும் வரை , அவர் இருப்பதாக சொல்லப்படும் அனைத்து வனப்பகுதிகளும் வன அதிகாரிகள் இல்லாமலேயே மிகவும் பாதுகாப்பாக இருந்தன .அவர் இறந்த பிறகு நிலைமை தலைகீழ் . அவர் இருந்த பகுதிகளில் தற்போது வனம் பாதிக்கப்பட்டுள்ளது . இதே போல் தான் உலகெங்கிலும் , எங்கெல்லாம் போராட்டக்குழுக்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வனம் காக்கப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது .
வனம் காக்கப்படுவது தான் அரசுகளுக்கு பிடிக்கவில்லை . ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாநிலமாக விலை பேசி வருகிறார்கள் . அதற்குத் தடையாக இருப்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் . நியாயமான முறையில் உண்ணாவிரதம் இருந்தாலும் ( கூடங்குளம் ) கண்டுகொள்வதில்லை . ஆயுதம் எடுத்தாலும் கண்டுகொள்வதில்லை . எங்கள் உரிமைகளுக்காக வேறு எப்படித் தான் நாங்கள் போராடுவது ?
பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே நிறைய ஊடகங்கள் இயங்குகின்றன . அவை , மக்கள் மத்தியில் ஒரு மாய உலகை காட்சிக்கு வைக்கின்றன . உண்மைகள் அனைத்தும் லாவகமாக மறைக்கப்படுகின்றன . தொடர்ந்து மக்களை சுயநலம் மிக்கவர்களாக மாற்றுகின்றன . எந்த விசயத்திலும் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதற்கு தேவையான அனைத்தும் ஊடகங்கள் மூலம் செய்யப்படுகின்றன .
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஊடகங்கள் வெளியே வர வேண்டும் . கடவுளே ( இருக்காரா? இல்லையா ?) உண்மையான நேர்மையான ஊடகம் எது என்று எனக்கு அடையாளம் காட்டு .... ஐயோ கரன்ட் போச்சே !!!
மேலும் படிக்க :
சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
....................................................................................................................................................................

9:49:00 PM
மானிடன்