இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்குமே இது மூன்றாவது இறுதிப்போட்டி . இதற்கு முன் இரு அணிகளும் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ,ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளன . இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனே தோல்வியை தழுவியுள்ளன . இம்முறை ஆஸ்திரேலியா இல்லை . ஆனால் , இரண்டில் ஒரு அணி தான் வெற்றி பெற முடியும் . அது எது என்பதில் தான் சுவாரசியம் இருக்கிறது .
இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாகவே இருந்தது . அதிலும் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது . பாகிஸ்தான் உடனான போட்டியில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்தியா அணியின் பந்து வீச்சும் , களப்பணியும் மிகச் சிறப்பாக இருந்தன . உலககோப்பை தொடங்கிய போது இருந்ததை விட இப்பொழுது இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கிறது . இதற்க்கெல்லாம் காரணம் " இந்திய அணியின் ஒற்றுமை " . அனைத்து வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள் ,நம் தோனியைத் தவிர . ஆனால் , அணித்தலைவர் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல் படுவதால் அவரது ஆட்டத்தை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை .
இந்தியா , இந்த தொடரில் அதிக முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதே சமயம் இலங்கை அதிக முறை இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதனால் , இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தாலும் அது நமக்குச் சாதகம் என்று சொல்லிவிட முடியாது . முதலில் பேட்டிங்கோ , பந்துவீச்சோ இறுதி வரை போராடினால் மட்டுமே இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் .
முரளிதரனுக்காக இலங்கை ஆடுகிறது , தெண்டுல்கருக்காக இந்தியா ஆடுகிறது . இருவருமே அடுத்த உலகக்கோப்பை போட்டியில் ஆடப்போவதில்லை . இலங்கை 1996 ல் உலகக்கோப்பை வென்ற போது முரளிதரன் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார் . ஆனால் , இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும் தெண்டுல்கருக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை . இம்முறை , சொந்த மண்ணில் , சொந்த ஊரில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது .
இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் இந்த உலகக்கோப்பையுடன் அணியை விட்டு விலகப் போகிறார்கள் . கிறிஸ்டன் பதவி ஏற்ற பிறகு இந்தியா அதிக வெற்றிகளை பெற்றுள்ளது . ஜான்ரைட்- கங்குலி ஜோடியால் இந்தியா 2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றது . கிறிஸ்டன் -தோனி ஜோடி 2011 ல் கோப்பையை வெல்லப் போகிறது !?
1983 ல் கபில் தேவ் !
2011 ல் தோனி !?
மேலும் படிக்க :
முகப்பு பக்கம்
.......................................
2 comments:
நல்ல அலசல்
nalla alasal...thanks
Post a Comment