அம்பிகாபதி -தங்கவேலு , நகைச்சுவை நடிகர் கருணாநிதியுடன் ( வெங்காய புலவர் ) இணைந்து நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யும் நகைச்சுவை அசரடிக்கும்.முழுப் படத்தையும் பார்க்க.
கல்யாண பரிசு - " மன்னார் அன் கம்பெனி " யை மறக்க முடியுமா ? மன்னார் அன் கம்பெனியின் மேனேஜர் என்று பொய் சொல்லிக் கொண்டு இவர் பண்ணும் அலப்பரை அருமை .K.A.தங்கவேலுவிற்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்த படம் .
இரும்புத்திரை - தங்கவேலுவின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த படம் .ஒரு தொழிலாளியாக தங்கவேலுவின் நடிப்பு அபாரம் . "கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல.." இன்றும் இந்தப் பாடல் பாட்டாளி மக்களின் நிலையைப் பிரதிபளிக்கிறது . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட அற்புதமான பாடலிது.நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கும் படம் இது தான்.
அடுத்த வீட்டுப்பெண் - தன் மனைவி சரோஜாவுடன் இணைந்து கலக்கிய படம் ." கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..!" கதாநாயகன் பாடுவது போல அமைந்த பாடலை அறைக்கு உள்ளிருந்து தங்கவேலு பாடுவார்.
அறிவாளி - முற்போக்கான பத்திரிகை எழுத்தாளராக நடித்திருப்பார் நம் சக்ரவர்த்தி . படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டு அவர் படும்பாடு அட்டகாச நகைச்சுவை .
ரம்பையின் காதல் - தங்கவேலு கதாநாயகனாக நடித்த படம் .இந்தப் படத்தின் கதாநாயகி பானுமதி . இந்தப் படத்தைத் தழுவித்தான் வடிவெலு நடித்த "இந்திரலோகத்தில் நா.அழகப்பன் " படம் எடுக்கப்பட்டது .டி.எஸ்.பாலையா எமனாக நடித்திருப்பார் .எமன் வேசத்தில் பாலையாவைப் பார்க்கும் போதே சிரிப்பு வந்துவிடும் .அலட்டிக்காமல் சிரிக்க வைக்கும் திறமை பாலையாவிற்கு உண்டு .
தங்கவேலுவின் மேலும் சில நகைச்சுவைக் காட்சிகள் :
மேலும் படிக்க :
.....................................................................................................................................................................