எந்த மொழியாக இருந்தாலும் பழமொழிகள் எப்போதும் மொழிக்கு ஆதாரமாக இருக்கின்றன . தங்களின் எளிய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கேலி செய்யும் வகையில் நிறைய பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன .
பங்குனி பருக்கிறதுமில்லை , சித்திரை சிறுக்கிறதுமில்லை.
சும்மா கிடக்கிற கோடாலிய தூக்கி காலில் போடுவானே , கால் வலிக்குதுன்னு ஏன் கத்திக்கிட்டு கிடப்பானே.
நரிக்கு பண்ணாட்டு கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.
மரவெட்டி வீட்டுல படலைக் கட்டிச் சாத்தனானாம்.
சும்மா இருக்கிற கோழிக்கு சோத்தைப் போடுவானேன் ;அது கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்த வருவானேன்.

பன்றிகளின் முன் முத்துக்களைப் போடாதீர்.
உருண்டோடும் கல் பாசி பாடியது.
எண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?
எசிலிக்கு மாவிடிச்சா குருது கம்புக்குத்தான் சேதாரம்.
கடந்து போனது கரணம் போட்டாலும் வராது.
நினைத்தவுடன் நெய்க்காரன் குதிரை ஏற முடியுமா.
நாம நாயை ஏவினால் , நாய் வாலை ஏவுமாம்.
தெரிந்ததை விட்டவனும் கெட்டான் , தெரியாததைத் தொட்டவனும் கெட்டான்.
உழைக்கிற மாடு ஊருக்குப் போனா , அங்கேயும் உழவு ஓட்டுவார்களாம் .
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.
சொப்பனத்தில் கண்ட அரிசி ,சோற்றுக்கு உதவாது.
பூசணிக்காய் போறது தெரியாதாம் , கடுகு போறதைப் பற்றிக் கவலைப்படுவானாம்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது .
ஒரு பிள்ளையைப் பெற்றவளுக்கு உறியிலே சோறு , நாலு பிள்ளையைப் பெற்றவளுக்கு நடுத்தெருவுலதான் சோறு.
ஆலமரத்தை பிடித்த பேய் அத்திமரத்தையும் பிடித்ததாம் .
குந்தித் தின்னா குன்றும் மாளும் .
இட்லியைத் தட்டில் போட்டுவிட்டு இடியைத் தலையில் போடுவது போல் .
தேனை எடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பனா ?
இரும்பு அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை ?
முயலை எழுப்பி விட்டுவிட்டு நாய் படுத்துக்குமாம் .
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது .
கும்பி கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுதுச்சாம் .
கறக்குறது உழக்குப் பாலு ,எட்டி உதைக்கிறது பல்லுப்போக .
மேலும் படிக்க :
வாழ்க்கை
காணொளி
..............................................................................................
வாழ்க்கை
காணொளி
..............................................................................................
0 comments:
Post a Comment