Showing posts with label சினிமா பாடல். Show all posts
Showing posts with label சினிமா பாடல். Show all posts

Monday, November 3, 2025

தானந்தன கும்மி கொட்டி... !


ஒரு பாடல் வெற்றி பெற்றால் அதிகபட்ச புகழைப் பெறுவது பாடகர்களாகவே இருப்பார்கள். அதனால்தானோ என்னவோ பாடல் தொடங்குவதற்கு முன்னரான தொடக்க இசையிலேயே தனது ராஜாங்கத்தை நடத்தி முடித்து விடுகிறார்,  நம் இளையராஜா. இந்தப் பாடலின் தொடக்க இசையும் அவ்வளவு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் முழுவதும் இசை தொடர்ந்தாலும்  சரணங்களின் இடையில் ஒலிக்கும் மெல்லிய புல்லாங்குழல் இசை  இப்பாடலை மேலும் மெருகேற்றுகிறது.


மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பற்றி சொல்ல வேண்டியதில்லை. எப்போதும் போல தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். இவர்களின் குரல்கள் நம்மை எப்போதும் வசீகரிக்க இவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஒரு காரணம். கேட்க கேட்க திகட்டாத குரல்கள். காலமெல்லாம் நாமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். " மலேசியா வாசுதேவனால் மட்டுமே எஸ்.ஜானகியின் குரலுக்கு ஈடு கொடுத்து பாட முடிந்திருக்கிறது " என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார், இசை விமர்சகர் ஷாஜி. அது என்னவோ உண்மைதான்.


இந்தப் பாடலை ரசிக்கும்படி எழுதியிருப்பவர், பிறைசூடன். சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை மூன்று முறை பெற்றிருந்தாலும் அதிகம் கவனம் பெறாத பாடலாசியர்களில் ஒருவராகவே இருந்திருக்கிறார். நிறைய வெற்றிப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார். 

'மீனம்மா மீனம்மா...'(ராஜாதிராஜா), 

'நூறு வருசம் இந்த மாப்பிளையும் பொண்ணும்தான்...'( பணக்காரன்), 

'சோளப் பசுங்கிளியே...'( என் ராசாவின் மனசிலே), 

' ஆட்டமா தேரோட்டமா...'( கேப்டன் பிரபாகரன் ),

 'இதயமே இதயமே...(இதயம்),  

‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட...'( உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்), 

 ' புன்னைவனப் பூங்குயிலே...' ( செவ்வந்தி) இன்னும் பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார். 

All time favourite combo : 

இளையராஜா + மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி = ❤️❤️❤️ 

மேலும் படிக்க :

பட்டுவண்ண ரோசாவாம் ...!

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !

Tuesday, September 2, 2025

நான் உங்கள் வீட்டு பிள்ளை - பூவை செங்குட்டுவன் !

 


'புதிய பூமி' திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் உங்கள் வீட்டு பிள்ளை..." என்ற பாடல் வாலி அல்லது கண்ணதாசன் எழுதியிருப்பார் என்று நினைத்தால் இப்பாடலை எழுதியிருப்பவர், பூவை செங்குட்டுவன் ❤️. அதிகளவில் பக்திப்பாடல்கள் எழுதியிருக்கிறார்.  அவற்றில் பெரும்பாலானவை பெருவெற்றி பெற்ற பாடல்களாக இருக்கின்றன. இப்பாடலும் பக்தி பாடல்தான், நாயக பக்திப்பாடல் .

" நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை

இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே

பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை

உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி "

பூவை செங்குட்டுவன் இயற்றிய மற்ற பாடல்கள்...

 
தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)


ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)


இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா )


ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா)

 
காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)


காலம் எனக்கொரு (பௌர்ணமி),

 
வானம் நமது தந்தை (தாகம்)


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)


ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)


திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)


வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)


வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)


திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)

//உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி// ❤️

மேலும் படிக்க :

ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே... !

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

Saturday, October 5, 2024

ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே... !

 


"ஆற்றில் குளித்த

தென்றலே சொல்லுமே

கிளி சொல்லுமே துள்ளாதடி

துவளாதடி வம்புக்காரி

கொஞ்சாதடி குலுங்காதடி

குறும்புக்காரி..."


காலையில் இப்படியான ஒரு பாடலைக் கேட்டுக்கொண்டே பார்ப்பது அவ்வளவு அலாதியானது. நாள் முழுக்க இப்பாடலே காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. 


இளையராஜாவின் பாடல்களை ஒவ்வொன்றாக கேட்டு ரசித்து முடிக்க இந்த ஒரு ஆயுள் பத்தாது போலவே. இந்தப் பாடலிலும் எவ்வளவு இசை நுணுக்கங்கள்.தொடர்ந்து எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. Ilayaraja music is always mesmerizing us. 


"ஆலோலங் கிளி

தோப்பிலே தங்கிடும் கிளி

தங்கமே..." பாடலாசிரியர் அறிவுமதி எழுதிய இந்தப்பாடல்  1996-ஆம் ஆண்டு வெளியான 'சிறைச்சாலை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.


இப்பாடலின் இசை ஒரு கவிதை

இப்பாடலின் வரிகள் ஒரு கவிதை 

இப்பாடலின் ஒளிப்பதிவு ஒரு கவிதை

இப்பாடலின் நடன அமைப்பு ஒரு கவிதை

இப்பாடலை பாடியவர்கள்  ஒரு கவிதை 

மொத்தத்தில் பாடலே ஒரு கவிதை ❤️


இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இதே மாதிரியான இன்னொரு கவிதை " செம்பூவே பூவே..." பாடல் ❤️.


இசையாலே வாழ்வோம் ❤️மே


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!


Monday, September 2, 2024

மக்காமிஷி ( Makkamisi) ❤️


குழந்தைகள் உலகிலிருந்து தெரிந்து கொண்ட பாடல். கடந்த ஒரு வாரமாக அவங்களுக்கு 'Morning Vibe' இந்தப் பாடல் தான். அவங்களுடன் சேர்ந்து கேட்டு ஓய்வு நேரங்களில் முனுமுனுக்கும் அளவிற்கு பிடித்துப் போய்விட்டது. 


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி நடித்து வெளியாக இருக்கும் ' Brother ' எனும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பால் டப்பா எனும் பெயருடைய தமிழ் ராப் பாடகர் இப்பாடலை எழுதி பாடியிருக்கிறார். கேட்கும் போது மிகவும் எனர்ஜியாக இருக்கிறது. இந்தக் கால தத்துவபாடல் என்றும் சொல்லலாம். பால் டப்பா, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


பால் டப்பா யார் என்று தேடும் போது தான் தெரிந்தது குழந்தைகளின் போன வார ' Morning Vibe' பாடலான 'காத்து மேல ' பாடலை எழுதி பாடியவர் என்று. இந்த இரண்டு பாடல்களிலேயே குழந்தைகளை கவர்ந்துவிட்டார் பால் டப்பா ❤️. 


" மக்காமிஷி.. 

பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி......"


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️


ராசய்யா(1995) திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவான இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் சாதாரணமாக கடந்து போக முடிந்ததில்லை. சமீப காலங்களில் சன் லைப் தொலைக்காட்சியில் தான் இப்பாடலை அதிகம் பார்த்திருக்கிறேன். 


இளையராஜாவின் இசை, வாலியின் டச் நிறைந்த பாடல் வரிகள், பிரபுதேவாவின் நடனம், ரோஜாவின் வசீகரம் இவற்றையெல்லாம் கடந்து அதிகம் ஈர்த்தது அந்த பெண் குரல். தேடிய போது தான் தெரிந்தது, அந்தக் குரலிற்குச் சொந்தக்காரர் பிரித்தி உத்தம்சிங் என்று. இவர், இளையராஜாவின் உதவியாளராக இருந்து பின்னாளில் இசையமைப்பாளராக மாறிய உத்தம் சிங்ஙின் மகள். 


குறிப்பாக இந்த வரிகள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 


"அன்னையாம் ஒரு

தந்தையாம் அது காதல்தான்

காதல்தான் ஓ..."


"அப்பர் சுந்தரர்

அய்யன் காதலில் ஆண்டாள்

கொண்டதும் காதல்தான்..."


"ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம்"


அதே ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்...(சந்திரலேகா)" பாடலும் இந்த பிரித்தி உத்தம்சிங் பாடியது தான். இரண்டு பாடல்களிலும் ஆண் குரல்களைத் தாண்டி ஒலிப்பது பிரித்தியின் குரல் தான். வேறு தமிழ் பாடல்கள் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. 


உயிரை மீட்டும் குரல் பிரித்தி உத்தம் சிங்ஙுடையது . இவரது மற்ற மொழி பாடல்களையும் கேட்க வேண்டும்.


மேலும் படிக்க  :


அடி ராக்கம்மா கையத்தட்டு...!


பட்டுவண்ண ரோசாவாம் ...!



Sunday, September 1, 2024

அடி ராக்கம்மா கையத்தட்டு...!


காலையிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். இளையராஜா, இந்தப் பாடலில் நிறைய மாயங்கள் செய்திருக்கிறார். பிபிசி (BBC) நடத்திய ஆய்வில் இப்பாடல் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக தேர்வானதாக முன்பு கேள்விப்பட்டதுண்டு. இப்போது தேடுகையில் 150 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து இப்பாடல் நான்காவதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விக்கிப்பீடியா சொல்கிறது.  

அந்த செய்தி வெளியான போது கூட இப்பாடலை கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் கடந்த வாரம் யத்தேச்சையாக தொலைக்காட்சியில் இந்தப் பாடலை பார்க்க நேரிட்டபோது மிகவும் கவர்ந்துவிட்டது. தொடக்க இசையிலிருந்து முடிவு வரை அதகளம் செய்திருக்கிறார். தற்போது வெளியாகும் பாடல்களில் ஒரு மைக்ரோ செகண்ட் கூட இடைவெளி இல்லாமல் இசையைச் சேர்த்து இரைச்சலை உருவாக்குகிறார்கள். ' அடி ராக்கம்மா கையத்தட்டு...' பாடலில் அங்கங்கே இசையே சேர்க்காமல் இடைவெளி விட்டதே மேஜிக் தருணமாக அமைகிறது. பெரும்பாலும் ஏதோ ஒரு தருணத்தில் பாடகர்கள் இசையமைப்பை தாண்டிச் செல்வார்கள். ஆனால் இந்தப் பாடலை எஸ்.பி.பி. மற்றும் சொர்ணலதா பாடியிருந்தாலும் இந்தப் பாடலின் இசையை எந்த இடத்திலும் அவர்களால் கடக்க முடியவில்லை. இப்பாடல் முழுவதும் ராஜாதான் நிறைந்திருக்கிறார். 

தளபதி திரைப்படத்திற்கு முன்பான ராஜா வேறு. தளபதி திரைப்படத்திற்கு பின்பான ராஜா வேறு என்பது போல தளபதிராஜா தனியாகத் தெரிகிறார்.

தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடியதில்லை. இப்படியான சூழலில் நமது வாழ்வின் 'STRESS BUSTER ' களாக இருக்கும் இளையராஜாவையும் , வடிவேலுவையும் அவர்கள் வாழும் காலத்திலேயே தமிழுலகத்தால் கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.


மேலும் படிக்க  :

இசை - உயிரின் ஓசை !

மிகவும் பிடித்தமான மலேசியா வாசுதேவன் பாடல்களில் சில... ❤️

 

மிகவும் பிடித்தமான மலேசியா வாசுதேவன் பாடல்களில் சில... ❤️

 


கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச...


சீவி சினுக்கெடுத்து...


தானந்தன கும்மி கொட்டி...


கடலோட ஓடும் ஓடம்...


காடு பொட்டக் காடு...


தென்கிழக்கு சீமையில...


நீ போகும் பாதையில்...


தேடினேன் புதிய சுகம் சேர்ந்தது...


குயிலுக்கொரு நிறம் இருக்கு...


முத்தம்மா மாரி முத்தம்மா தாயிக்கும் தாயான பூமி...


பட்டுவண்ண ரோசாவாம்...


பொன்மானைத் தேடி நானும்...


தாய் மனசு தங்கம்...


வெள்ள மனம் உள்ள மச்சான்...


ஆப்பக்கடை அன்னக்கிளி...


ஏத்தமய்யா ஏத்தம்...


கூடையில கருவாடு...


காதல் வைபோகமே...


மாசமோ மார்கழி மாசம்...


தண்ணி கருத்திருச்சு...


மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்...


பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...


போக்கிரிக்கு போக்கிரி ராஜா...


சோள இளங்குயிலே...


தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்...


எந்த வேலு வந்தாலும்...


கிழக்கு வெளுத்துருச்சு கீழ் வானம் செவந்திருச்சு...


கொழந்தை பாடுறேன் கண்ணுமணி ஏம் பொன்னுமணி...


மனிதன் மனிதன்‌...


நன்றி உனக்கு சொல்ல...


பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி...


நீ பொட்டு வச்ச தங்கக்குடம்...


ஊரு விட்டு ஊரு வந்து...


வெத்தலை வெத்தலையோ...


பட்டுக்கோட்டை அம்மாளு...


வெத்தலைய போட்டேன்டி...


ஆனந்த தேன் காற்று...


ஒரு கூட்டுக் கிளியாக...


போராடடா ஒரு வாளேந்தடா...


ஒரு தங்கரதத்தில்...


வா வா வசந்தமே...


கோடை கால காற்றே...


அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா...


பூங்காற்று திரும்புமா...


வெட்டிவேரு வாசம்...


ஏலமல காட்டுக்குள்ளே...


அடி ஆடு பூங்கொடியே...


இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளைவிக்காரன்...


கோவில்மணி ஓசை தனை கேட்டதாரோ...


நீங்காத எண்ணம் ஒன்று...


கை வலிக்குது கை வலிக்குது மாமா...


நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்...


வா வா வாத்தியரே வா...


கண்ணைத் தொறக்கனும் சாமி...


பெத்து எடுத்தவதான்...


பொதுவாக என் மனசு தங்கம்...


ஆசை நூறு வகை...


சொல்லி அடிப்பேனடி...


ஒதுங்கு ஒதுங்கு மாவீரன் வண்டி வருது...


ஊட்டி மலை ரோட்டினிலே ஓடுது பார் சைக்கிள் வண்டி...


எதிர் வீட்டு ஜன்னல் ஓரம் ரோஜா செடி...


என்னமா கண்ணு சௌக்கியமா...


ராத்திரியில் பாடும் பாட்டு...


மலையோரம் மயிலே...


ஆகாய கங்கை...


பூவே இளைய பூவே...


ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...


எத்தனையோ பொட்ட புள்ள...


இந்த மின்மினிக்கு...


கூட்ஸ் வண்டியிலே...


காக்கிச்சட்ட போட்ட மச்சான்...


"இதுக்கு மலேசியா வாசுதேவன் பாடிய எல்லாப் பாடல்களுமே பிடிச்சிருக்குனு சொல்லிட்டு போயிருக்கலாமே " என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. ஆனால் உள் மனதோ ஏன் மற்ற பாடல்களையும் குறிப்பிடவில்லை என்றே கேட்கிறது. 

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !



Saturday, October 29, 2016

வா வா வசந்தமே !


1982 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது .தீபாவளி பண்டிகையை நினைவு படுத்தும் இப்பாடலை அற்புதமாகப் பாடியிருப்பவர் ,மலேசியா வாசுதேவன். வைரமுத்து எழுதிய இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் . மலேசியா வாசுதேவன் பாடிய சிறந்த மெல்லிசைப்பு பாடல்களில் இதுவும் உண்டு . மென் சோகம் கலந்திருக்கும் இப்பாடலை ஜீவனுடன் பாடியிருக்கிறார் , வாசுதேவன். 

அந்தப்பாடல் :



பாடல் வரிகள் :

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

ஆகாயமே எந்தன் கையில்
ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம்
தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

என் வானிலே ஒரு தேவ
மின்னல் வந்தது
என் நெஞ்சினை அது கிள்ளி
விட்டுச் சென்றது
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை
மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன்

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

நல்ல பாடல் !

மேலும் படிக்க :


..................................................................................................................................................................

Saturday, March 26, 2016

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் !


1956 ஆம் ஆண்டு வெளிவந்த பாசவலை திரைப்படம் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது . இத்திரைப்படத்தில் 5 பாடல்களை பட்டுக்கோட்டையார் எழுதினார் . அதில் இந்தப் பாடலும் ( உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்...)  ஒன்று. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகளைப் பார்த்துவிட்டு வயதான ஒருவர் தான்  எழுதியிருப்பார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் இப்பாடல் வெளிவந்த போது கல்யாணசுந்தரத்தின் வயது 26 தான் . இளவயதிலேயே அவர் செய்த வேலைகளும் அதிகம் ,சந்தித்த சோதனைகளும் அதிகம் . இந்த அனுபவமே அவரது பாடல் வரிகளில் தத்துவக் கருத்துகள் நிரம்பியிருக்கக் காரணம் .  

அந்தப் பாடல் :



பாடல் வரிகள் :

 குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! - (உனக்கு

மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!

அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு


 வல்லிய வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/

மேலும் படிக்க :

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !
...................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms