தமிழ் மண்ணோடும் மக்களோடும் கலந்துவிட்ட குரல், டி.எம்.எஸ்.-ன் குரல் . தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பாடகர்களில் பெரும் புகழ்பெற்றவர் டி.எம்.எஸ் மட்டுமே . டி.எம்.எஸ்.,தமிழ் திரையிசைப் பாடல்களின் தனிப்பெரும் தலைவன் . அவர் இசையமைத்துப் பாடிய முருகன் பாடல்கள் மக்களிடையே பெரும்புகழ் பெற்றன . ஆனந்த விகடனில் வெளிவந்த விகடன் 25 மூலமும் மற்றும் இசை விமர்சகர் ஷாஜி ,டி.எம்.எஸ். பற்றி எழுதிய கட்டுரை மூலமும் டி.எம்.எஸ்.பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது . டி.எம்.எஸ். பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை - http://musicshaji.blogspot.in/2011/01/blog-post_03.html.டி.எம்.எஸ். பற்றி எழுதப்பட்ட விரிவான கட்டுரை .
சிவாஜி மற்றும் எம்.ஜி .ஆருக்கு பாடியதை தவிர மற்றவர்களுக்குப் பாடியதில் ரஜினிக்காக பாடிய இந்தப்பாடலும் (கட்ட புள்ள குட்ட புள்ள ...) "ரயில் பயணங்களில்" திரைப்படத்தில் டி.எம்.எஸ்.-ன் குரல்களில் ஒலித்த "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி.. ", "நூலுமில்லை வானுமில்லை .." பாடல்களும் பெரும் புகழ் பெற்றன .
டி.எம்.எஸ். மற்றும் ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் இந்தப்பாடல்இளையராஜாவின் இசையமைப்பில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த " பைரவி " என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது . பெண் பின்னணிப் பாடகிகளில் தனிப்பெரும் தலைவி எஸ் .ஜானகி தான் .
அமைதிக்குப் பெயர் தான் சாந்தி :
நூலூமில்லை வானுமில்லை :
டி.எம்.எஸ். -ன் உடலுக்கு மட்டுமே மரணம் . தமிழ் மக்களின் துக்கத்தை நீண்ட காலமாக பகிர்ந்து கொள்ளும் குரல் டி.எம்.எஸ்.-ன் குரல் தான் . மகிழ்ச்சியைக் கொடுத்த குரல் ,தன்னம்பிக்கை கொடுத்த குரல், எத்தனையோ மனிதர்களின் துயர்களைத் துடைத்த குரல் அழியப்போவதில்லை . உலகில் எங்கோ ஒரு மூலையில் அவரது குரல் ஒலித்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது .