சைதாப்பேட்டையில் வைகோ பேசிய பேச்சைக் கேட்கவும் , பார்க்கவும் முடிந்தது . நீண்ட நாட்கள் கழித்துப் பேசினாலும் பேச்சில் நெருப்பு தெறித்தது .
சமீபத்தில் இலங்கை தமிழர்களுக்காக உயிரிழந்த தமிழரின் வழக்கில் தவறாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகளை கடுமையாக ( நீங்கள் என்ன ராஜபக்சேவின் கூலி ஆள்களா ? ) விமர்சித்தார் . இரண்டு முறை அந்த கொடுங்கோலனை இந்தியாவிற்கு அழைத்து மரியாதை செய்த இந்திய அரசை வன்மையாக கண்டித்தார் . ராஜபக்சே முதல் குற்றவாளி என்றால் இந்திய அரசும் , தமிழக அரசும் இரண்டாம் குற்றவாளிகள் , இவர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கடுமையாக சாடினார் .
" என் அரசியல் நிலைக்காக வருந்தவில்லை . " குயிலை எந்தக் கூட்டில் அடைத்தாலும் கூவத்தான் செய்யும் " , " புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் " . எந்தக்கூட்டணியில் இருந்தாலும் இந்த வைகோ விடுதலைப்புலிகளை ஆதரிக்கத்தான் செய்வான் " என்று குறிப்பிட்டார் . " ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்று சேர வேண்டும் . ராஜபக்சேவிற்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் " என்றார் . " முக்கியமாக தமிழர்கள் சாதி , மதம் , கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் . என் கட்சிக்காக யாரையும் அழைக்கவில்லை . எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி , கட்சிகளையே பிடிக்காதவர்களாக இருந்தாலும் சரி கொடுங்கோலனுக்கு எதிராக ஒன்று சேருங்கள் . விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க எல்லோரும் பாடுபட வேண்டும் " என்றார் .
" முன்பு விடுதலைப்புலிகளைப்பற்றி பேசியவர்களைப் புறக்கணித்தனர் . இனிமேல் விடுதலைப்புலிகளைப்பற்றி பேசாதவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் " என்று திரும்ப திரும்ப குறிப்பிட்டார் .
நமக்கு வேண்டியதெல்லாம் கொடுங்கோலன் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . இலங்கைத் தமிழர்களுக்கும் மற்றும் உலகத் தமிழர்களுக்கும் சமமான உரிமை கிடைக்க வேண்டும் . அதுவே நம் லட்சியம் . அதற்காக ஒன்று படுவோம் , உழைப்போம் . நாளை நமதே !
மேலும் படிக்க :
காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் !
.............................
0 comments:
Post a Comment