சமீபத்தில் youtube தளத்தில் தேடலில் இருந்தபோது கிருபாகரன் என்பவர் இணைத்துள்ள காணொளிகளைப் ( வீடியோக்களைப் ) பார்க்க நேர்ந்தது . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு பொருத்தமான படங்களைத் தேர்வு செய்து பாடலுடன் இணைத்து காணொளிகளை உருவாக்கியுள்ளார் . அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது .கிருபாகரன் அவர்களுக்கு நன்றி . அதில் ஒரு பாடல் "கையில வாங்கினேன் பையில போடல..."
1960 ஆண்டு வெளிவந்த " இரும்புத்திரை " என்னும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது .இந்தப்படத்தைத் தயாரித்து இயக்கியவர், திரு .எஸ் .எஸ் .வாசன் அவர்கள் .சிவாஜி கணேசன் ,வைஜெயந்தி மாலா ,தங்கவேலு ,சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர் .இந்தப்பாடல் பட்டுக்கோட்டையால் எழுதப்பட்டு ,திருச்சி லோகநாதனால் பாடப்பட்டு ,வெங்கட்ராமன் என்பவரால் இசையமைக்கப்பட்டு ,தங்கவேலு அவர்களால் வாயசைக்கப்பட்டது .தங்கவேலு சிறப்பாக நடித்திருப்பார் .(அவர் நடிப்பைத் திரைப்படத்தில் தான் பார்க்க முடியும் " )
கையில வாங்கினேன் பையில போடல ...!
பாடல் வரிகள் :
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே
மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)
சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…)
விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…)
கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…)
இந்தப்பாடல் இன்றைய சூழலுக்கும் அப்படியே பொருந்துகிறது .
நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும் கிருபாகரன் .
மேலும் படிக்க :
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
......................................... ..................................................
3 comments:
மனித இனத்தையும் அவர்களின் குணத்தையும் ஆட்டிப்படைப்பது இந்த பணமே..நல்லதொரு பதிவு நண்பா.
பொருத்தமான இன்றைக்கும் பொருந்தக்கூடிய வரிகள் என்பதைச் சொல்லாமல், படங்களைத் தேடியெடுத்துப் போட்ட உங்கள் படைப்புள்ளத்திற்கு பாராட்டுகள் நண்பரே! நன்றி
மனிதனை நல்வழிப்படுத்தும் மகத்தான கவிஞனுக்கு வீர வணக்கம் 10065260920241038
Post a Comment