பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , பொதுவுடைமை கருத்துக்களை மையமாக கொண்ட பாடல்களை மட்டும் எழுதவில்லை . கற்பனை வளம் ததும்பக் கூடிய நிறைய பாடல்களை எழுதியுள்ளார் . அவற்றில் ஒரு துளி தான் இந்தப்பாடல் . நிலவை எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக வர்ணனை செய்துள்ளனர் . இந்தப் பாடலில் பட்டுக்கோட்டையார் , நிலவை தன் காதலியின் சகோதரியாக கற்பனை செய்து , காதலியை கேலி செய்வதுடன் நிலவையும் கேலி செய்து அற்புதமாக எழுதியுள்ளார் . 1960 ஆம் ஆண்டு வெளிவந்த " எல்லோரும் இந்நாட்டு மன்னர் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . T.M.செளந்தர்ராஜன் , இந்தப் பாடலை சிறப்பாக பாடியுள்ளார் .
அந்தப்பாடல் :
பாடல் வரிகள் :
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே? (என்…)
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே? (கண்…)
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்…)
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்…)
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே _ இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே _ இது (அவள்…)
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே?
நிலவே
இப்போதாவது சொல்
நீ இளையவளா மூத்தவளா ?!
நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .
மேலும் படிக்க :
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
மட்டமான பேச்சு !
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !
...................................................................................................................................................................
அந்தப்பாடல் :
பாடல் வரிகள் :
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே? (என்…)
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே? (கண்…)
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்…)
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்…)
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே _ இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே _ இது (அவள்…)
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே?
நிலவே
இப்போதாவது சொல்
நீ இளையவளா மூத்தவளா ?!
நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .
மேலும் படிக்க :
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
மட்டமான பேச்சு !
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !
...................................................................................................................................................................
0 comments:
Post a Comment