அரசியல்வாதிகள் தவிர்த்து , நம்மைச் சுற்றி எப்போதும் வெட்டிப்பேச்சு பேச ஆட்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் . அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இல்லாவிட்டால் " மட்டமான பேச்சு அவர்கள் வாயைக் கெடுப்பதுடன் ,நம் காதையும் கெடுக்கும் " என்று சொல்கிறார் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதியுள்ளார் . A .L . ராகவனும் , ஜிக்கியும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் .
அந்தப் பாடல் :
பாடல் வரிகள் :
மட்டமான பேச்சு _ தன்
வாயைக் கெடுக்குதுங்க _ அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க (மட்ட… )
சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால்
தலைவலி மருந்துக்கு லாபம் _ அந்த
ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க (மட்ட…)
கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து
குடும்பத்தைக் கலைக்குதுங்க _ பெருங்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க
புரளியும் வதந்தியும் மூட்டி _ ஒரு
பொய்யை நூறாகக் கூட்டி _ கரும்
பூதமென்றும் சிறு பேய்களென்றும் _ பல
பாதையில் மூளையைக் கெடுக்குதுங்க (மட்ட…)
அறையில் வளர்ந்து வெளியில் பறந்து
அவதிப் படுத்துதுங்க _ ஊரை
அவதிப் படுத்துதுங்க _ அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
அமைதியைக் கெடுக்குதுங்க
பாழும் பொய்யென்று காட்டி _ உடல்
மாயக் கூடென்று கூட்டி _ உயர்
வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க (மட்ட…)
"சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால் தலைவலி மருந்துக்கு லாபம் ", "கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து குடும்பத்தைக் கலைக்குதுங்க","அறையில் வளர்ந்து வெளியில் பறந்து அவதிப் படுத்துதுங்க","வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க" - எவ்வளவு அழுத்தமான வரிகள் .
குடும்பத்தைக் கெடுக்கவும் ,ஊரைக் கெடுக்கவும் ,நாட்டைக் கெடுக்கவும் ,உங்களின் நேரத்தை விழுங்கவும் நிறையபேர் அலைகிறார்கள் . உசாராக இருங்கள் !
காதப் பொத்திக்கிங்க !
நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ மற்றும் கிருபாகரன் .
மேலும் படிக்க :
திண்ணைப் பேச்சு வீரரிடம் !
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
................................................................................................................................................................
0 comments:
Post a Comment