இந்திய கிரிக்கெட் வரலாறு இரண்டு இடங்களில் தோனியின் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் . ஒன்று , அனைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற இந்தியாவின் சிறந்த அணித்தலைவர் .இரண்டு ,தனி ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்களில் மோசமான தோல்விகளை அதிகளவு சந்தித்த இந்தியாவின் அணித்தலைவர் . இந்திய கிரிக்கெட் அணி , 1970 களில் கத்துக்குட்டி அணியாக சர்வதேச போட்டிகளில் விளையாடி மோசமான தோல்விகளை சந்தித்த போது அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . வளரும் அணி தொடர்ந்து தோற்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது . அந்த அணி வெற்றி பெற முயற்சிப்பதே சாதனையாக பார்க்கப் படுகிறது . ஒரு நாள் போட்டியில் சாம்பியன் , டெஸ்ட் மற்றும் 20-20 போட்டிகளில் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஒரு அணி தொடர்ந்து மோசமாக தோற்பது தான் இந்திய ரசிகர்களால் மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்றாலும் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் அணித்தலைவரே பொறுப்பேற்கிறார் . வெற்றிகளை குவித்த போது தோனியைத் தலையில் வைத்து கொண்டாடினோம் .தற்போது அதே தோனி தொடர் தோல்விகளை சந்திக்கும் போது நமது உதடுகள் அவரை ஏசுகின்றன . இந்த நிலை விரைவில் மாறி இந்திய அணி வெற்றிகளைக் குவிக்கும் போது நாம் மீண்டும் தோனியைப் புகழ ஆரம்பித்து விடுவோம் . முன்பு இங்கிலாந்திலும் ,ஆஸ்திரேலியாவிலும் அடைந்த மோசமான தோல்விகளுக்கு ( இரண்டு நாடுகளிலும் நான்கு டெஸ்டிலும் தோல்வி ) நன்றாக செயல்படாத வீரர்களை பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினர் தான் காரணம் . அடுத்ததாக நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைக்கு முற்றிலும் புதிய அணியை ( IPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் ) தேர்வு குழு தேர்ந்தெடுத்தது. அதன் விளைவாக சாம்பியன்ஸ் கோப்பையை அசத்தலாக வென்றது . நான் இதுவரை பார்த்த கிரிக்கெட் தொடர்களில் ,ஒரு தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக பந்துவீசியது கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மட்டுமே .20 ஓவராக குறைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ( இலக்கு 126 )கூட பந்துவீச்சால் தான் இந்தியா வென்றது . அதன் பிறகு இந்தியாவில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நான்கு டெஸ்ட்களிலும் தோற்கடித்தது . பிறகு நடந்த 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவை வென்றது . சச்சினுக்காக தென்னாப்பிரிக்கத் தொடரைச் சிதைத்து மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் திடீரென்று உருவாக்கப்பட்டது . அதிலும் இந்தியா வென்றது . போதிய பயிற்சியும் , அனுபவமும் இல்லாததால் தென்னாப்பிரிக்கத் தொடரில் மோசமான தோல்விகளை இந்தியா சந்தித்தது .
நியுசிலாந்தில் இவ்வளவு மோசமான தோல்விகள் எதிர்பார்க்காதது தான் . தோல்விகளுக்கு 11 பேர் கொண்ட அணித்தேர்வும் ,தோனியின் தற்காப்பு மனோபாவமும் ஒரு காரணம் . 5 ஒரு நாள் போட்டிகள் 2 டெஸ்ட் அனைத்திலும் டாஸ் வென்றாலும் ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தார் . இந்த அணுகுமுறை வெற்றி தராதபோதும் மீண்டும் மீண்டும் பந்துவீச்சையே ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை? தோனிக்கு ,மட்டையாளர்கள் ,பந்துவீச்சாளர்கள் யார் மீது நம்பிக்கை இல்லை அல்லது யாரை அதிகம் நம்புகிறார் குழப்பமாக இருக்கிறது .திறமை இருந்தாலும் புதிய வீரர்களைக் களமிறக்குவதில் தோனி மிகவும் அதிகப்படியான தயக்கம் காட்டுகிறார் . கடந்த IPL தொடரிலும் இதையே செய்தார் . பத்ரிநாத் சிறப்பாக விளையாடாத போதும் இறுதிப் போட்டி வரை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் . பாப் டு பிளிசிஸ் ,பாபா அபராஜித் போன்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை . இந்த ஆண்டும் இந்த இரண்டு வீரர்களையும் சென்னை வாங்கியுள்ளது . முதலில் சென்னை அணி இந்த IPL ல் பங்கேற்பதே கேள்விக்குறி தான். கோடிகளிலே புரண்டாலும் சூது கவ்வத்தான் செய்கிறது .இது சூதின் குணமா அல்லது மனிதனின் பேராசையா !அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையேயான போட்டியில் எது வெல்லும் என்று தெரியவில்லை . ராஜஸ்தான் அணியின் அணுகுமுறை தான் கோடிகள் புரண்டாலும் IPL போட்டிகளை அர்த்தப்படுத்துகிறது . ரஹானே ,ஸ்டுவர்ட் பின்னி , சஞ்சு சாம்சன் ,தாம்பே என்று வயது வித்தியாசம் பார்க்காமல் திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறது . ரகானே ,ஸ்டுவர்ட் பின்னி இந்திய அணியில் இடம்பெற்று விட்டனர் . விரைவில் சஞ்சு சாம்சனும் இடம் பெறுவார் .
பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துவதிலும் தோனியின் அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி தருவதில்லை . கடந்த இரண்டு ,மூன்று தொடர்களிலும் இந்தியப் பந்துவீச்சு எதிரணிக்கு ஏந்தவித நெருக்கடியையும் தரவில்லை . அனுபவமின்மை ஒரு காரணமாக இருந்தாலும் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம் . சுழற்பந்து எடுபடும் மைதானங்களிலும் வேகப்பந்து வீச்சிற்கே முன்னுரிமை கொடுக்கிறார் .பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைப் பெரும் தயக்கத்துடன் தான் பந்து வீச அழைக்கிறார். அவர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் முழுமையாக பயன்படுத்துவதில்லை.கள வியூகம் அமைப்பதிலும் தோனி பின்தங்கியே உள்ளார். இவ்வளவிற்கு பிறகும் இந்தியா பெற்ற வெற்றிகளுக்கு தோனி, வீரர்களிடம் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை தான் காரணம் . இதற்கு முந்தைய அணித்தலைவர்கள் தோனி அளவிற்கு வீரர்களை நம்பியதில்லை . தோனியின் இந்த நம்பிக்கை தான், அவருக்கு இவ்வளவு வெற்றிகளையும் , பேரையும் ,புகழையும் பெற்றுத்தந்துள்ளது .t20 இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வேறு அணித்தலைவராக இருந்த்திருந்தால் ஜோகிந்தர் சர்மாவை கண்டிப்பாக பந்துவீச அழைத்திருக்க மாட்டார் . ஆனால் ,தோனியின் நம்பிக்கை வென்றது .
தோனிக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த இந்த அதிகப்படியான நம்பிக்கை தான் தற்போது தோல்விகளையும் பெற்றுத்தருகிறது. குறைவான திறமை உள்ளவர்களிடமிருந்தும் அதிகப்படியான திறமையை எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்.

அணித்தேர்வு :
கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து 15 பேரைத் தேர்வு செய்வது மிகவும் சவாலானது. தேர்வுக்குழு இந்தப்பணியைத் திறம்படவே செய்கிறது . உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்கள் தேசிய அணியில் இடம்பெறுகின்றனர். முன்பை விட தற்போது அணித்தேர்வில் வெளிப்படைத்தன்மை தெரிகிறது.
11 பேர் தேர்வு :
களமிறங்கும் 11பேரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த இரண்டு , மூன்று தொடர்களாக தோனி சொதப்பி வருகிறார்.சரியான 11 பேரை தேர்வு செய்து விட்டாலே அணித்தலைவரின் பாதிப்பணி முடிந்துவிடும். வெற்றி பெற்றாலோ, தோல்வி அடைந்தாலோ முதலில் தீர்மானித்த அணி தான் தொடர் முழுவதும் விளையாடுகிறது. நியுசிலாந்து தொடர் ஆரம்பிக்கும் போதே தோனி சொல்கிறார் " பரிசோதனை முயற்சிகளில் இறங்க மாட்டோம் " .சரி, அப்படி பரிசோதனை முயற்சி எதுவும் செய்யாததால் நியுசிலாந்து தொடரில் இந்தியா பெற்றது என்ன ? தோல்விகள் மட்டும் தான் . அதே வேளையில் நியுசிலாந்து அணி தொடர் முழுவதும் பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது . ஒவ்வொரு போட்டிக்கும் அணி வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தது . இந்தியா ஒரு போதும் இவ்வாறு செயல்படாது . குறைபாடுகள் அதிகம் இருந்தாலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணியை மாற்றவே மாட்டார்கள் . 50 ஓவர்கள் விளையாடும் போட்டியில் கூட ஜடேஜாவுடன் சேர்த்து 5 பந்து வீச்சாளர்கள் இடம்பெறுகிறார்கள் . 200 முதல் 300 ஓவர்கள் பந்துவீச வேண்டிய டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுடன் சேர்த்து 4 பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறுகிறார்கள் . டெஸ்ட் அணிக்கு முற்றிலும் பொருந்தாத வீரராக ஜடேஜா இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது .டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு இரண்டு டெஸ்ட்களிலும் வாய்ப்பளிக்கவில்லை .ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்த ஆல்ரவுண்டர் . அமித் மிஸ்ரா தொடர்ந்து இரண்டு தொடர்களாக புறக்கணிக்கப்பட்டுள்ளார் . ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கவில்லை .பேருக்கு ஒரு போட்டியில் மட்டும் ஸ்டுவர்ட் பின்னிக்கு வாய்ப்பு . அடுத்து ஆசியக் கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் என்ன செய்யப் போகிறார்களோ .
பந்துவீச்சு :
இந்தியக் கிரிக்கெட் அணியா ! வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது ; பந்து வீச்சு சுமார் தான் , எப்பவாவது சிறப்பாக பந்து வீசுவார்கள் .இந்தக் கதையைத் தான் நாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஆரம்பித்த காலத்தில் இருந்துu சொல்கிறார்கள் . மற்ற நாடுகளில் சிறந்த பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள் . உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் யாரும் தற்போது இந்திய அணியில் இல்லை .முன்பாவது இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது . மற்ற அனைத்து அணிகளும் இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள அஞ்சும் . தற்போது அந்த நிலையும் இல்லை . அனைத்து அணிகளும் மிக எளிதாக இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்கின்றன . இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கட் வீழ்த்தும் தகுதியுள்ள பவுன்சர் பந்துகளை வீசத் தெரிவதே இல்லை . பேருக்கு பவுன்சர் போடுகிறோம் என்று வீசுகிறார்கள், அது 6 ஆகவோ 4 ஆகவோ மாறிவிடுகிறது . இந்தியப் பந்துவீச்சில் நிலைப்புத்தன்மை என்பதே எப்போதும் இல்லை .எப்ப நன்றாக பந்து வீசுவார்கள் ,எப்ப மோசமாக பந்து வீசுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது . இப்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் இடத்தைத் தக்கவைக்க தரமான பந்து வீச்சாளர்களைக் கண்டடைவது அவசியம் .
மட்டைவீச்சு :
இந்திய அணியின் மட்டைவீச்சு எப்போதும் கொஞ்சம் அதிகமான திறனுடன் தான் இருக்கிறது. அந்த திறனை முழுதாக பயன்படுத்த தவறிவிடுகிறார்கள் .பொதுவாகவே இந்திய வீரர்களிடம் மனோபலம் சற்று குறைவாகவே உள்ளது. கடினமான போட்டியில் ஒரு அளவிற்கு மேல் வெற்றி பெற போராடுவதே இல்லை. மட்டைவீச்சாளர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டால் இன்னும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெறலாம்.
களவியூகம் :
இந்திய அணி களவியூகம் அமைப்பதில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அழகாக சொதப்புகிறது. பார்மில் இல்லாத வீரர்கள் கூட இந்தியாவிற்கு எதிராக அட்டகாசமாக ஆடுகிறார்கள் . பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் பார்ட்னர்சிப்பை பிரிக்கும் வகையில் கள வியூகம் அமைக்கப்படுவதில்லை. எதிரணி வீரர்கள் அடித்து ஆடாவிட்டாலும் களத்தடுப்பாளர்களை எல்லைக்கோட்டிலேயே நிறுத்துகிறார், தோனி. மோசமான கள வியூகத்தால் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அணிகள் ஒரு நாள் போட்டிகளில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் எடுத்துவிடுகிறார்கள். சமீபத்திய தோல்விகளுக்கு மோசமான கள வியூகமும் ஒரு காரணம். தோனி இதைப்புரிந்து கொள்ள வேண்டும் .
தோனி , வெளிநாடுகளில் தனியொரு நாட்டிற்கு எதிரான தொடர்களில் பெரிய தோல்விகளைச் சந்தித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பெறும் கிரிக்கெட் தொடர்களில் பெரிய வெற்றிகளைப் பெற்று இருக்கிறார். அடுத்த தொடர்களில் என்ன நடக்குமோ தெரியவில்லை . பலவீனங்கள் இருந்தாலும் இந்தியா தரவரிசையில் தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதைத் தக்கவைக்குமா என்பதுதான் தெரியவில்லை.
மேலும் படிக்க :
தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !
சினிமா - கிரிக்கெட் - இந்தியா !
....................................................................................................................................................................

0 comments:
Post a Comment