எங்க பார்த்தாலும் வளர்ச்சி வளர்ச்சினே பேசிக்கிறாங்க . தனி மனித வளர்ச்சி , கிராம நகர வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி ,நாட்டின் வளர்ச்சி , உலகின் வளர்ச்சினு பலவிதமான வளர்ச்சி பற்றி பலரும் வகுப்பெடுக்கறாங்க . உலகமயமாக்கல், இந்த வளர்ச்சின்ற பேர சொல்லிக்கிட்டு தான் உலகெங்கும் கிளை பரப்புகிறது. உண்மையில் உலகமயமாக்கலால் வளர்ந்ததை விட அழிந்ததே அதிகம். அப்படியென்றால் வளர்ச்சியை எப்படி நிர்ணயம் செய்வது ?
வளர்ச்சியின் உண்மையான பொருள் இயற்கையிடமிருக்கிறது. இயற்கையில் வளர்ச்சி என்பது அழிவால் வருவதில்லை. அழிவு இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமநிலை இயற்கையில் பேணப்படுகிறது. அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் இயற்கை ஒருபோதும் ஆதரிப்பதில்லை . இன்றைய நவீன வளர்ச்சி என்பது அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் நோக்கி மனிதனைத் தள்ளுகிறது .உலகமய வளர்ச்சியில் சமநிலைக்கு சிறிதும் இடமில்லை. ஏற்றத்தாழ்வுகளை முன்பிருந்ததை விட அதிகப்படுத்தியது தான் உலகமயமாக்கலின் சாதனை. முற்றுப் பெறாத வளர்ச்சியை உலகமயமாக்கல் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த முற்றப்பெறாத வளர்ச்சி தான் ஒரு நிறுவனத்தின் அழிவுக்குக் காரணமாகிறது .
உண்மையில் வளர்ச்சி என்பது கொடுத்துப் பெறுவதும் , பெற்றுக் கொண்டு கொடுப்பதும் தான் , ஒன்றை அழித்துப் பெறுவதல்ல . ஒரு மரத்தின் வளர்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் . ஒரு மரம் விதையிலிருந்து வளர்ந்து முழு வளர்ச்சியை அடைவது வரை நீர் , வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகள், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு , ஆக்ஸிஜன் , வெப்பம் , குளிர் போன்ற பல்வேறு காரணிகள் தேவைப்படுகின்றன. அதே மரம் வளரும் போதும் , வளர்ந்த பின்பும் நிறைய பலன்களைத் தருகிறது . மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது , ஆக்ஸிஜன் கிடைக்கிறது , மழைப் பொழிவுக்குக் காரணமாகிறது, பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்வதற்கு வாழிடத்தையும் , உணவையும் தருகிறது , வறண்ட காற்றை குளுமைப்படுத்துகிறது ,நிழல் தருகிறது இவ்வாறு பலவற்றை தன்னைச் சுற்றி இருப்பவற்றுக்கு தருகிறது. பல நாடுகளில் சம்பாதித்து ஒரே இடத்தில் குமிக்கும் வேலையை மரங்கள் செய்வதில்லை ; மனிதர்கள் செய்கிறார்கள் . மாறாத சமநிலையுடன் தன்னைச் சுற்றி இருப்பவற்றிடமிருந்து பெற்றுக் கொண்டு கொடுப்பதும் , கொடுத்துப் பெறுவதும் தான் உண்மையான வளர்ச்சி .
சமநிலையைப் பேணாத எதுவும் வளர்ச்சியல்ல ; குறைபாடு தான் . இன்றைய வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதில் தொடங்கி இயற்கையை அழிப்பதிலேயே முடிகிறது. ஆறுகளும் , மலைகளும், மரங்களும் பெரிய அளவில் ஒரே நேரத்தில் அழிவைச் சந்திக்கின்றன , வளர்ச்சியின் காரணமாக . கட்டுப்பாடுள்ள வளர்ச்சி தான் எல்லோருக்கும் நல்லது. பத்தடி வளரும் மரம் 12 அடி வளரலாம் , நூறடி வளர்ந்தால் யாருக்கும் லாபமில்லை. அதிகபட்ச வளர்ச்சியே அதிகபட்ச அழிவைத்தரும் மரத்துக்கும் தான் ,மனிதனுக்கும் தான் , நாட்டுக்குந்தான். பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டுக்குள் வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை .கடமையைச் செய்யாமல் இருக்க அரசுகளே விலை போகின்றன.
ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !
மேலும் படிக்க :
விவசாயமும் கிராமமும் தொலைக்காட்சியும் !
இந்தியா - மேட் இன் சீனா !

0 comments:
Post a Comment