சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு இதழ் குறித்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும் ,பொருளாதார வளமும் தான் முக்கியமானதாக இருக்கின்றன . மிகுந்த நெருக்கடிக்கிடையே கொண்டு வரப்பட்ட இதழானது எந்த அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் அடுத்த இதழைக் கொண்டு வருவது மிகவும் சிரமம். எந்தக் கலைப்படைப்பாக இருந்தாலும் விமர்சனமும் மக்களின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை. இதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரமும் முக்கியமான தேவையாக இருக்கிறது.சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கும் , இடையில் நின்று போவதற்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் முக்கியமானதாக இருக்கக்கூடும். வேறு காரணங்களும் இருக்கலாம்.
குறி சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதா ,வேண்டாமா என்ற குழப்பமான தயக்கத்திலேயே இதழாசிரியர், மணிகண்டன் இருக்கிறார். இதற்கு அவர் குறிப்பிடும் முதல் காரணம் , முன்பு கொண்டுவந்த இதழ் பற்றிய பின்னூட்டம் கிடைக்கப் பெறாததே." போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் குறி இதழ் தொடர்ச்சியாக வெளிவருவதற்கு முயற்சி செய்வேன் " என்று குறிப்பிட்டார் .
ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட விசயங்களை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் ஒரு கலவையாகவே இருக்கிறது .' எந்த ஒரு எழுத்தும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் ' என்று சொல்வார்கள் . குறி சிற்றிதழில் வெளிவந்த படைப்புகள் அவ்வாறாக இடத்தைத் தேடிக் கொண்டவை தான். இதன்படி குறி சிற்றிதழும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் நமது ஆதரவு இருந்தால் .
குறி சிற்றிதழ் 11 வது இதழ் பற்றி ஒரு பார்வை :
இந்த இதழிலும் பெண்ணியம் ,LGBT , சாதிய எதிர்ப்பு , இயற்கை , நவீனம் ,கவிதைகள் என்று கலவையான விசயங்கள் இடம் பெற்றுள்ளன . மற்ற இதழ்களில் இல்லாத சுதந்திரம் சிற்றிதழ்களில் இருப்பதை மறுக்க முடியாது . அதனால் தான் மற்ற இதழ்களில் வெளியிட இன்னும் தயங்கும் LGBT வகைமையச் சேர்ந்த படைப்புகளை இரண்டாவது முறையாக குறி வெளியிட்டுள்ளது . இதழ் 10 ல் அபிலாஷ் எழுதிய சிறுகதை ஒன்று வெளிவந்தது . இதழ் 11 ல் ஆர்த்தி வேந்தன் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது .' இந்தியாவின் பிரிடா காலோ ' என்ற தலைப்பில் அம்ரித்தா ஷெர் கில் பற்றி எழுதிய கட்டுரையிது . குறைந்த வயதில் இம்மண்ணை விட்டு மறைந்த ஒரு தனித்த படைப்பாளியின் வரலாறு அது .
செ.லிட்டில் பிளவர் என்பவர் , 'ஆண்டாள் பிரியதர்ஷினியின் பெண்கள் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதி வெளியிட்ட 'வேடிக்கை மனிதர்கள்' என்ற தொகுப்பில் உள்ள மூன்று கதைகளில் இடம்பெற்ற பெண்களைப் பற்றி விவாதித்து இருக்கிறார் .
புலியூர் முருகேசன், ' கருந்துளையின் இரண்டு வழிகள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . புனைவின் வழியே சாதிய கொடுமைகளை பதிவு செய்திருக்கிறார் .
ச.முகமது அலி , 'இயற்கை வழிபாடு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ' இயற்கை விவசாயம் ' என்ற வார்த்தையில் உள்ள முரண் பற்றி பதிவு செய்திருக்கிறார் . இயல்பாக தானாக நடப்பது தானே இயற்கை . விவசாயம் என்பதே இயற்கைக்கு எதிரானது தானே . அப்படி இருக்கும் போது இயற்கை விவசாயம் என்பது முரண் தானே . அதை கேள்வி கேட்டிருக்கிறார் . மாற்று கருத்துகள் இருந்தாலும் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது .
அசோக் எழுதியிருக்கும் ' மீரா ' எனும் சிறுகதை நவீன வாழ்வின் ஒரு பகுதியைப் பதிவு செய்திருக்கிறது . சுவாரசியமான சிறுகதை .
இந்த இதழில் பல கவிதைகள் உள்ளன . கவிதைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் அவற்றை விட்டுவிட்டேன்.
தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
SBK வளாகம் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .15
பத்து இதழ் சந்தா ரூபாய்.150
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
மேலும் படிக்க :
எக்காலத்திற்குமான கலைஞன் !
வலுத்தது நிலைக்கும் !
...................................................................................................................................................................
1 comments:
Thanks for sharing this valuable information to our vision. You have posted a trust worthy blog keep sharing.Nice article i was really impressed by seeing this article, it was very interesting and it is very useful for me.
Flats for sale in Manikonda Hyderabad
Post a Comment