சமகாலத்தில் நான் பெரிதும் மதிக்கும் ஆளுமையான மனஉளவியல் நிபுணர், ஷாலினி அவர்களின் செயல்பாட்டை நம் தமிழ் சமூகம் உரிய அளவில் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் தொடர்ந்து இருக்கிறது.ஆண் , பெண் பாலின புரிதல் குறித்து அறிவியல்பூர்வமாக தொடர்ந்து பேசி வருகிறார். பெண்ணை பெண்ணாகவும் , ஆணை ஆணாகவும் உணர வைத்தாலே போதும் பெரும்பான்மையான உளவியல் சிக்கல்கள் தீர்ந்துவிடும். சமூகமும் , ஊடகங்களும் அப்படி உணர அனுமதிப்பதில்லை. இனிமேலாவது போலியான கற்பிதங்களிலிருந்து வெளியே வர வேண்டும். அதற்கு ஷாலினி போன்ற ஆளுமைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் குறிப்பாக எட்டாம் வகுப்பு , ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளில் எதிர்பாலினம் குறித்த புரிதல்களை ஏற்படுத்திவிட்டால் நம் சமூகம் ஆரோக்கியமான சமூகமாக மாறும். உளவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி பாலியல் கல்வி தொடர்பான பாடங்களை பள்ளிகளில் கண்டிப்பாக கொண்டுவந்தே ஆக வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இனியும் தாமதம் செய்தால் பாதிப்பு நமக்கு தான். பெற்றோர்கள் , கல்விக்கூடங்கள் , ஊடகங்கள் எல்லோரும் இணைந்து தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் . ஊடகங்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் .
இந்த நேர்காணலில் எவ்வளவு விஷயங்களை பேசியிருக்கிறார் என்று பாருங்கள் .
ஷாலினியின் நேர்காணல் :
மேலும் படிக்க :
பெண் எனும் உருமாறும் சக்தி ! ...........................................................................................................................................................
0 comments:
Post a Comment