Friday, June 3, 2011

முக்கிய பிரச்சனைகளும் ஆளுநர் உரையும் !

ஆளுநர்  உரையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்: 

ரசு தேவையான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் அச்சமின்றி அமைதியான வாழ்க்கையை நடத்த வழிவகுக்கும்.

டந்த ஆட்சியில் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி பலருடைய
சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க ஏதுவாக புதிய சட்டம் இயற்றப்படும்.

சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அதுவரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படுகிறது.

ள்ளூர் கேபிள் டிவி இயக்குபவர்கள் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமை ஆக்கப்படும். அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்படும்.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு 2011 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் தொடங்கும். முதல் கட்டமாக 2011-2012 ஆம் ஆண்டில் 9.12 இலட்சம் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

ந்த அரசு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று மகளிருக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கும். 2011-2012 ஆம் ஆண்டு சுமார் 25 இலட்சம் 26 குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும்.

மச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக் கழகங்களைச் சீரமைத்து உலகத் தரம் மிக்க
நிறுவனங்களாக மாற்றியமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும்.

கலைஞர் காப்பீடு, கான்கிரீட் வீடு திட்டங்கள் ரத்து...

லைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, அவற்றுக்கு மாற்றான திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.

கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் 'சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்' தொடங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 இலட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும்.

ற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.

னைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்.

தமிழுக்காக...

திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் புகழ் பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளிலும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.

ணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் தனித் தன்மை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை மீட்டெடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

மிழ் மொழியை இந்திய ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்கவும், நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்தவும் மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.

சட்டமேலவை தேவையில்லை...

ம்மாநிலத்தில் சட்ட மேலவை ஒரு தேவையற்ற அமைப்பாகக் கருதப்பட்டதால் 1.11.1986 அன்று எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்டது. எனவே, மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவரத் தேவையில்லை என இந்த அரசு கருதுகிறது. சட்டப் பேரவையில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மிழகத்தில் லஞ்ச ஊழல் அற்ற நிலைமையை உருவாக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை, பயனாளிகள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலம் வங்கி சேவையாளர் உதவியுடன் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டம் வரும் 2011 செப்டம்பர் முதல் நாள் முதல் செயல்படுத்தப்படும்.

விலைவாசியை கட்டுப்படுத்த புதிய திட்டம்...

ரூபாய் 50 கோடி ஒதுக்கீட்டில் 'விலை கட்டுப்பாட்டு நிதி' உடனடியாக ஏற்படுத்தப்பட்டு வட்டியில்லாக் கடனாக கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கி அத்தியாவசியப் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அத்தகைய பொருட்களை உற்பத்தி மையங்களில் நேரடியாக வாங்கி அடக்க விலையிலேயே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும்.

நாட்டின் பொருளாதார உற்பத்தி மதிப்பில் மகாராஷ்டிரம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு
அடுத்தபடியாக மூன்றாவது அதிக பங்களிப்பு தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

'மிழ்நாடு 2025 தொலைநோக்கு பார்வைத் திட்டம்' ஒன்றைத் தயாரித்து வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து களைவதுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய முக்கிய கட்டமைப்புத் திட்டங்களைக் கண்டறிந்து முன்னுரிமையில் செயல்படுத்தி தமிழகத்தை
வளர்ச்சிப் பாதையில் மீண்டும் கொண்டு செல்ல பாடுபடும்.

வேளாண்மைக்கு...

முதன்மை துறையான விவசாயம், கால்நடைத் துறை, மீனளம் போன்றவற்றின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தும். விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் தமிழ்நாட்டிலுள்ள 75 இலட்சம் சிறு குறு விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் வகையிலும் பண்ணைசார் சிறப்புத்
திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் பங்களிப்புடன் விவசாய பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சந்தை வசதி, சேமிப்புக் கிட்டங்கிகள் மற்றும் குளிர் சாதன வசதிகளை உருவாக்குதல் போன்ற பணிகளையும் இந்த அரசு தீவிரமாக மேற்கொள்ளும்.

மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி பாசன ஆதாரத்தைப் பெருக்கும். இதனால்
வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன், இத்தகைய கால்வாய்கள் நீர்வழிப் போக்குவரத்திற்கும்
பயன்படுத்தப்படும்.

மத்திய அரசுடன் சுமுக உறவு... 


த்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இருக்கும் வகையில் இந்த அரசுசெயல்படும். மாநில அரசின் தன்னாட்சி நிதி அதிகாரம் பாதிக்காத வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை உள்ளடக்கிய மறைமுக வரி முறைகளில் கொண்டுவரப்படும் வரிச் சீர்திருத்தத்தை இந்த அரசு வரவேற்கும்.

விற்பனை வரி மட்டுமே மாநிலத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள நிலையில், மாநில அரசுகளின் வருவாயை பாதிக்காத சரக்கு மற்றும் சேவை வரி முறையை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

நதிநீர் பிரச்னை...

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணவே இந்த அரசு விரும்புகிறது. இதற்கு வாய்ப்பு கிட்டாத சூழ்நிலையில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அரசு தயங்காது.

முல்லைப் பெரியாறு மற்றும் பிற நதிநீர்ப் பிரச்சனைகள் நீதிமன்றங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில் ஒரு நிலையான தீர்வினை எட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு ஒரு நியாயமான முடிவு கிடைக்கும் என இந்த அரசு நம்புகிறது.

துரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி பாதையை அனைத்து வசதிகளும் கொண்ட தன்னிறைவு வளர்ச்சிப் பாதையாக மாற்றி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிதாக வளர்ச்சி பெற்று வரும் துறைகளான உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில் நுட்பம் மற்றும் மருந்தியல் போன்ற துறைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு செயல்படும்.

கவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக தமிழகத்தை மாற்றும் நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். இரண்டாம் நிலை நகரங்களில் தொலை தொடர்பு பூங்காக்கள் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி இத்துறையின் வளர்ச்சியை
இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிராமப்பகுதிகளில் உள்ள வணிக வெளிப்பணி மையங்கள் வலுவாக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பரவலாக்கப்படும்.

மின்வெட்டு பிரச்னை..

மின்சாரம், சாலை வசதி, நகர்ப்புற கட்டமைப்புகள், வீட்டு வசதி ஆகிய உட்கட்டமைப்புகளில்உள்ள குறைவைப் போக்க தொடர்ந்து திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி தமிழ்நாடு நீட்டித்த பொருளாதார வளர்ச்சியைப் பெற வழிவகை செய்யப்படும்.

 டந்த ஆட்சி காலத்தில் மின் பற்றாக்குறையினால் இம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சிவெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மாநிலத்தின் மின் துறையை சீரமைத்து தமிழகத்தை உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்.

திர்கால கூடுதல் தேவையை எதிர்நோக்கி நீண்ட கால மின் செயல்முறை திட்டங்கள் வகுக்கப்பட்டு தொழில் துறைகள் மற்றும் பிற துறைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

டனடித் தீர்வாக, சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்துதல், தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்பைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ரு நம்பகத்தன்மையுள்ள மாற்று எரிபொருள் ஆதாரமாக மரபுசாரா எரிசக்தியான காற்று, சூரிய ஒளி மற்றும் உயிரி எரிபொருள் மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக தனியாக ஒரு கொள்கையை இந்த அரசு வகுக்கும்.

மோனோ ரயில்...

ற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டர் அளவுக்கேதிட்டமிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவு அதிகமாக உள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர மிகுந்த காலமாகும்.
எனவே, இந்த அரசு சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்தும்.

முதற்கட்டமாக 111 கிலோமீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக 300 கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தப்படும்.
கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க மோனோ இரயில் திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவை விரைவில் கொண்டு வரவேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.

கிராமப்புரங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, 24 மணிநேர மருத்துவ வசதி, தரமான கல்வி, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய சாலைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த அரசு பாடுபடும்.

சோதனை அடிப்படையில் கிராமப்புரங்களில் சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தும் தெருவிளக்குகள் அமைக்க இந்த அரசு முயற்சி மேற்கொள்ளும்.

 மிழகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும்,

40 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கக்கூடிய வகையில் சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாலிதின் பைகளுக்கு தடை...

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க இந்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறப்பு தகவல் கல்வித் திட்டம் தொடங்கப்படும்.

முதன்முறையாகவோ அல்லது மறு சுழற்சி மூலமோ தயாரிக்கப்படும் 60 மைக்ரான் மற்றும் 8ஒ12 அளவுக்குக் குறைவான பாலிதின் பைகளுக்கு தடை விதிக்கப்படும். இந்திய தர நிர்ணயக் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான மறுசுழற்சிமுறை கடுமையாக ஒழுங்கு முறைபடுத்தப்படும்.

ரசு அலுவலர்கள் சுதந்திரமாகவும், ஊக்கமுடனும் செயல்பட உரிய சூழ்நிலையை ஏற்படுத்தித்
தந்தால்தான் அரசின் திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட இயலும் என இந்த அரசு கருதுகிறது.

இலங்கைத் தமிழர்கள்..

லங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திலேயே கௌரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ந்த முகாம்களில் தரமான இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான
சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

மிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
இலங்கைப் போரினால் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மாண்டு போன நிலையில்மீதமுள்ள இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

லங்கைத் தமிழர்கள் அவர்கள் சொந்தப் பகுதிகளிலேயே மறுவாழ்வு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துமாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.


இவை அனைத்துமே சிறந்தவை தான் . கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது மிகச் சரியான நடவடிக்கை இந்த இரு திட்டங்களிலும் மக்களை விட மற்றவர்களே அதிகம் பயன்படுவர் . கேபிள் , தமிழ் , விவசாயம் , நதிநீர்  , மின்வெட்டு  , போக்குவரத்து நெரிசல் , சுற்றுச்சூழல் , அகதிகள் முகாம் என்று ஏறக்குறைய எல்லா பிரச்சனைகளும் தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளன . இதைச் சரியாக செயபடுத்துவதில் தான் இந்த அரசின் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது . இன்னும் இரண்டு விசயங்கள் . கிராமம் மற்றும் நகரங்களில் பயன்தரும் மரங்கள் நட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  . நடைபாதையில் வசிப்பவர்கள் பற்றி எந்த ஆட்சியாளரும்  கருத்தில் கொள்ளவதில்லை அவர்களின்  வாழ்க்கைதரம் உயர உரிய நடவடிக்கை தேவை . அவர்களும் இந்தியர்கள் தானே , அவர்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு .

உலகம் , எல்லோருக்கும் சொந்தமானது ! 

பப்ளிகுட்டி : 
கடந்த ஏப்ரல் 20 , 2011 நான் குறிப்பிட்ட தமிழகத்தின்  10 முக்கிய பிரச்சனைகளில்  ( URL -: தமிழகத்தின் முதல் 10 முக்கியப் பிரச்னைகள் ! )  8 பிரச்சனைகளுக்கு இந்த ஆளுநர் உரையில் ஏறக்குறைய  தீர்வு உள்ளது . மீதி இரண்டு . 1 . இந்த முறை சரியான அமைச்சர்களே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் .  2 . சிந்திக்காத ஒன்றே  ஒன்று நடைபாதையில் வசிப்பவர்கள் வாழ்க்கைத்தரம்  . 

நன்றி : விகடன் .
 
மேலும் படிக்க :



..................................  

1 comments:

மதுரை சரவணன் said...

நல்ல திட்டங்கள் கொண்டுள்ள ஆளுநர் உரை... ஆட்சி நல்லதை நோக்கி நகர்கிறது...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms