மனிதன் பிறக்கும்போது பிறந்த குணங்கள் காலப்போக்கில் எப்படி மாறிவிடுகின்றன என்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்பாடல் மூலம் உணர்த்துகிறார் . "சக்கரவர்த்தி திருமகள் " என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி ,MGR வாயசைப்பது போல அமைந்த பாடலிது . மக்களின் அறியாமை இருளை நீக்குவதற்காகவே நிறையப் பாடல்களை எழுதியுள்ளார் , பட்டுக்கோட்டையார் . அதில் இந்தப்பாடலும் ஒன்று .
அந்தப்பாடல் :
திரைப்படத்தில் - http://www.pattukkottaiyar.com/site/?p=477
பாடல் வரிகள் :
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் _ ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் _ ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது _ எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது - மனிதன் (பொறக்…)
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது _ ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
திருடனென்றே உதைக்குது -மனிதன் (பொறக்…)
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சி ஆட்டுது _ வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது -மனிதன் (பொறக்…)
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை _ பச்சைப்
புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை _ இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை -இதில்
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை
தோழா _ ரொம்ப நாளா!1 (பொறக்…)
"எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது", "பட்டப்பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது ", "காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது ", "வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது" , "இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை " -அருமையான வரிகள் .
நமது குணங்கள் பற்றி சிந்திப்போமாக !
நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும் கிருபாகரன் .
மேலும் படிக்க :
மெதுவான எளிய வாழ்க்கை !
பட்டுக்கோட்டையார் பாடல்கள் !
....................................................................................................................................................................

5 comments:
என்ன அருமையான பாடல் சார்! எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
அருமையான காலத்தால் அழியாத பாடல்!
காலத்தால் அழியாத அருமையான பாடல்...
https://www.scientificjudgment.com/
இதை மக்கள்திலகம் பாடியதால் இந்த பாடலுக்கே பெருமை....
பட்டப் பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
பட்டுக்கோட்டையாரின் அக்கால வரிகள் எக்காலத்திற்கும் பொருத்தும் முக்காலத்திற்கான முத்தான வரிகள்
Post a Comment